Home
News

மொபைல் யூசர்களுக்கு செக்.. தப்பித்தவறி கூட வேண்டாம்.. *401# எண்ணில் காத்திருக்கு புதுசா.. மத்திய அரசு அறிக்கை!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருந்தாலும், தப்பித்தவறி கூட *401# எண்ணுக்கு டயல் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கான காரணம் என்ன? அப்படி டயல் செய்தால் என்னவாகும்?

இன்றைய சூழலில் பணப் பரிமாற்றத்துக்கு ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் நம்பர் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. வங்கியோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி (OTP) வைத்து எளிதாக பணத்தை அனுப்பிவிட முடிகிறது. இதனால், மொபைல் நம்பரை சுற்றி பல்வேறு டிஜிட்டல் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.

மொபைல் யூசர்களுக்கு செக்.. *401# எண்ணில் காத்திருக்கு புதுசா!

ஓடிபி பெற்ற அடுத்த நொடியோ பணம் கைமாற்றப்படுவதால், அதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இப்படிப்பட்ட கட்டாயத்தில், இந்தியாவில் மொபைல் நம்பர் வைத்திருக்கும் ஓட்டுமொத்த வாடிக்கையாளர்களும் தள்ளப்பட்டுள்ளார். *401# எண்ணுக்கு பின் நடக்கும் டிஜிட்டல் திருட்டை மத்திய அரசு கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து, தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) அறிக்கை வாயிலாக அறிவுரை வழங்கி இருக்கிறது. தப்பித்தவறி கூட *401# எண்ணுக்கு டயல் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இந்த *401# எண்ணானது, அன்கண்டிஷனல் கால் பார்வர்டிங் ஆக்டிவேட் (Unconditional Call Forwarding Activate) செய்ய பயன்படுத்தப் படுகிறது.

இதன் மூலம், ஒரு நம்பருக்கு வரும் அனைத்து கால்களும் வேறொரு மொபைல் நம்பருக்கு பார்வர்ட் செய்யப்பட்டுவிடும். இதனால் கால் பார்வர்டிங்கை ஆக்டிவேட் செய்த நபருக்கே தெரியாமல் டிஜிட்டல் திருட்டு நடக்கிறது. இதுபோன்று நாட்டில் பல்வேறு பகுதிகளில் டெலிகாம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது மத்திய அரசுக்கு தெரிய வந்துள்ளது.

இந்த டிஜிட்டல் திருட்டு எப்படி நடக்கிறது? கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe) போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வைத்திருக்கும் நபர்களின் மொபைல் நம்பர்களை கண்டறியும் கும்பல் ஒன்று அவர்கள் பயன்படுத்தும் சிம் கார்ட் நிறுவனத்தின் கஸ்டமர் கேரில் இருந்து கால் செய்வது போல தொடர்பு கொள்கிறது.

அதன்பின், சிம் காா்ட் அல்லது நெட்வொர்க்கில் பிரச்னை இருக்கிறது. ஆகவே, உடனடியாக அப்டேட் செய்யுங்கள் என்று கூறுகிறது. இதை நம்பி எப்படி சரி செய்வது என்று கேட்டால்? *401# எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும் என்றும் அதோடு அவா்கள் கூறும் மொபைல் நம்பரையும் டயல் செய்யுமாறும் தெரிவிக்கிறது.

இதை தெரியாமல் வாடிக்கையாளர் செய்துவிடும்பட்சத்தில், அந்த நம்பருக்கு வரும் வாய்ஸ் கால்கள், அவர்களுக்கு வராமல் அந்த திருட்டு கும்பல் கொடுத்த நம்பருக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதை வைத்து எளிதாக அந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கையாடல் செய்துவிட முடிகிறது.

அதுமட்டுமல்லாமல், எஸ்எம்எஸ் பார்வாட்டிங் மூலமும் ஓடிடி (OTP) மற்றும் பர்சனல் வெரிபிகேஷன் கோட் (Personal Verification Code) போன்றவையும் திருப்பி அனுப்பி, ஒருவர் சுதாரிப்பதற்குள் நொடியில் பணம் திருடப்பட்டுவிடுகிறது. இதனாலேயே மத்திய தொலைத்தொடர்புத் துறை அனைத்து மொபைல் யூசர்களுக்கும் அவரச அறிவுரை வழங்கி இருக்கிறது.

இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? அடையாளம் தெரியாத நம்பர்களிடம் இருந்து வரும் கால்களுக்கு பதிலளிக்கும்போது, முன்கூட்டியோ கவனமாக இருக்க வேண்டும். கஸ்டமர் கேரில் இருந்து கூப்பிடுகிறோம், நீங்கள் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று கூறினால் அதை கண்மூடிதனமாக நம்பி செய்து விடக்கூடாது.

அந்த நம்பரானது, உங்களது டெலிகாம் நிறுவனத்தின் உடையதுதானா? என்பதை சரி பார்ப்பது நல்லது. குறிப்பாக, *401# போன்ற எண்களை டயல் செய்ய வேண்டும் என்றால், உடனே அழைப்பை துண்டித்து விடுங்கள். இதுமட்டுமல்ல, பேங்க், ஆதார் குறித்த நேரடி கால்களோ எஸ்எம்எஸ்களோ வந்தால் அதையும் உடனே நம்பிவிடாதீர்கள்.

அதேபோல லிங்குகள் ஏதேனும் வந்தால் கிளிக் செய்யாதீர்கள். அதுதொடர்பாக ஏதாவது செய்திகள் வெளியாகி இருக்கிறதா? என்பதை தேடிப்பாருங்கள். இதுபோன்று உங்களுக்கு நடந்தால், உடனே காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள். நெருங்கியவர்களை எச்சரிக்கை செய்யுங்கள். இதுபோன்ற செய்திகளுக்கு எங்களது கிஸ்பாட் தளத்தை பின் தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Goverment Advises Not To Dial 401 For Mobile Users in India What Will Happen If Dial
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X