'கௌரவம்' ஆன்லைனில் விற்கப்படுகிறது...கௌரவத்தின் விலை 5 டாலர்..?!

|

'கெளரவம்' திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வசூலை பெறவில்லை. அதனால் எற்படும் நஷ்டத்தை சரிசெய்ய கௌரவத்தை ஆன்லைனில் பணம் கட்டி பார்க்கும் வசதியை ஏற்பாடு செய்திருக்கிறார் நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான பிரகாஷ்ராஜ்.

கெளரவைக்கொலை என்ற விவகாரத்தை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டு பிரகாஷ்ராஜ் தயாரித்திருக்கும் படம் தான் ‘கெளரவம்'.

'கௌரவம்' ஆன்லைனில் விற்கப்படுகிறது...கௌரவத்தின் விலை 5 டாலர்..?!

பிரகாஷ்ராஜின் ஆஸ்த்தான இயக்குனரான ராதாமோகன் தான் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். தெலுங்கு நடிகரான அல்லு சிரிஸ் தமிழில் முதன்முதலில் நடித்திருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக யாமி கெளதம் நடித்திருக்கிறார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான இந்தப்படம் சுவாரஷ்யமில்லாத திரைக்கதை அமைப்பால் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய் விட்டது. அதனால் இந்தப்படத்தை பார்க்க ரசிகர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
அதன்விளைவாக பல தியேட்டர்களிலிருந்து ‘கெளரவம்' படத்தை தூக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப்படத்தின் மூலம் வரும் நஷ்டத்தை முடிந்த அளவுக்கு சமாளிக்க திட்டமிட்ட பிரகாஷ்ராஜ் மேற்படி படத்தை ஆன்லைனில் பார்க்கும் வசதியை கொண்டு வந்திருக்கிறார்.

www.prakashrajlive.com என்ற இணையதளத்தில் 5 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.275 மட்டும் செலுத்தினால் உலகத்தில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும் ‘கெளரவம்' படத்தை பார்க்கலாம். மேலும் மே 1ம் தேதிக்கு முன்னரே நீங்கள் பணம் செலுத்தினால் இவரின் 'தோணி' படமும் இலவச இணைப்பாக கிடைக்கிறதாம்.

தொழில்நுட்ப விரும்பிகளுக்கான 10 சிறந்த திரைப்படங்கள்...

ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் யு.கே ஆகிய நாடுகளில் உள்ளவர்களைத் தவிர மற்ற நாடுகளில் உள்ளவர்கள் மேற்படி முறையில் பணத்தை கட்டி கெளரவம் படத்தை ஆன்லைனில் பார்க்கலாம். மேலும் படத்தை நீங்கள் பணம் செலுத்திய 24 மணி நேரத்துக்குள் பார்த்து விட வேண்டுமாம்.

எப்படியோ 'கௌரவம்' ஆன்லைனில் விற்கப்படுகிறது!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X