புதிய ஸ்மார்ட்போன் முதலில் செய்ய வேண்டியவை..!
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கியவுடன் அதற்கு புதிய கேஸ் மற்றும் ஸ்கிரீன் கார்டுகளை போட்டு பயன்படுத்துபவரா நீங்கள், இனி அதனுடன் இதையும் செய்து உங்களது கருவியை பத்திரமா பாத்துகோங்க..
ஆண்ட்ராய்டு அப்டேட் கவனிக்க வேண்டியவை..!!
புதிய கருவியை வாங்கியவுடன் அதில் முக்கியமாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.
ஆப்பிள் ஐபோன் 6எஸ் சிறப்பம்சங்கள்..?

பாஸ்வேர்டு
ஸ்கிரீன் லாக் மூலம் கருவியை பாதுகாக்க வேண்டும். இந்த அம்சம் போன் வாங்கும் போதே கருவியில் இருக்கும், இல்லையெனில் இது குறித்து பல செயலிகள் சந்தையில் கிடைக்கின்றது.

காண்டாக்ட்
காண்டாக்ட்களை க்ரூப் வாரியாக பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஆபத்து காலங்களில் குறுந்தகவல்களை பறிமாறுவது சுலபமாவதோடு குறுந்தகவல் மற்றவர்களுக்கு தவறுதலாகவும் போக வாய்ப்புகள் குறைவே.

ஆப் லாக்
பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கியமான செயலிகளுக்கு மட்டுமாவது பாஸ்வேர்டு போடுவது நல்லது.

போட்டோ லாக்கர்
போட்டோ லாக்கர் செயலிகள் உங்களது புகைப்படங்களுக்கு பாதுகாப்பை வழங்கும், பாஸ்வேர்டு பாதுகாப்பு வழங்கும் இந்த செயலிகள் மூன்று முறை தவறான பாஸ்வேர்டு என்டர் செய்யும் போது அதை மேற்கொள்பவரின் புகைப்படத்தையும் எடுக்கும்.

லாஸ்ட் போன் ஆப்
லாஸ்ட் போன் ஆப் இருந்தால் உங்களது கருவி தொலைந்து போகும் போது அவைகளை கண்டறிவது எளிமையாக முடிந்து விடும்.

ஈஸ்கேன் மொபைல் செக்யூரிட்டி
இன்று அனைத்து முக்கியமான தகவல்களும் மொபைல்களில் இருப்பதால் அவைகளை பாதுகாப்பது அவசியமாகின்றது. இதை சரியாக செயல்படுத்த ஈஸ்கேன் தான் சிறந்தது. இதை கொண்டு உங்களது தகவல்கள் பேக்கப் செய்யப்படுவதோடு, கருவியில் வைரஸ் மற்றும் மால்வேர்கள் நுழையாமல் தடுக்கவும் செய்யும்.

முகநூல்
இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications