யூடியூப் பார்த்து சுய பிரசவம் செய்துகொண்ட பெண் பலி.!
பிலாண்ந்பூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த, 26 வயதான திருமணமாகாத நிறைமாத கர்ப்பிணி பெண், யூடியூப் இல் சுயப் பிரசவ வீடியோவை பார்த்து முயற்சித்து மரணமடைந்துள்ளார்.
பிலாண்ந்பூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த, 26 வயதான திருமணமாகாத நிறைமாத கர்ப்பிணி பெண், யூடியூப் இல் சுயப் பிரசவ வீடியோவை பார்த்து முயற்சித்து மரணமடைந்துள்ளார். யூடியூப்பில் சுயப்பிரசவ வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்துகொள்ள முயற்சி குழந்தையுடன் உயிர் இழந்துள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாடகை வீட்டில் குடியேறிய பெண்
பிலாண்ந்பூர் பகுதியில் நான்கு தினங்களுக்கு முன்னர் தான் இந்த பெண் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். இரண்டு தினங்களில் அவரின் தாயார் தன்னை கவனித்துக்கொள்ள வந்துவிடுவார் என்று வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்திருக்கிறார்.

சுய பிரசவம்
யாரும் இல்லாத வீட்டில் இந்த பெண் தானாய் பிரசவம் செய்துகொள்ள முயற்சித்து, பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். திருமணம் ஆகாமல் தாயாக இருப்பதற்கு பயந்து தானாக சுய பிரசவம் செய்வதற்கு முயற்சித்துள்ளார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டை வீட்டார் தகவல்
இறந்தவரின் அண்டை வீட்டார் திங்களன்று காலை, அவரின் வீட்டின் அறையில் இருந்து ரத்தம் வெளியேறுவதை கண்டு காவல் நிலையம் மற்றும் வீட்டின் உரிமையாளரிடம் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தரையில் இறந்து கிடந்த பெண்
வீட்டின் உரிமையாளர் ரவி உபாத்யாய் கதவை உடைத்து உள்ள சென்ற பொழுது ஆப் பெண்ணும், ஆண் குழந்தை ஒன்றும் தரையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்து பொய் இருக்கிறார். பெண்ணின் அருகில் கத்திரி, கத்தி மற்றும் சில நூல் கயிர்களும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் வந்து அப்பெனின் உடலையும் குழந்தையின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆதார் கார்டு விபரங்கள்
வாடகை வீட்டில் குடியேறுவதற்கு முன்னாள் அப்பெண் சமர்ப்பித்த ஆதார் கார்டு விபரங்களை வைத்து அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த பெண்ணின் ஸ்மார்ட்போன் இல் சுய பிரசவம் செய்வது எப்படி என்ற வீடியோ பதிவு பார்க்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications