சர்வதேச அளவில் தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு.!

|

கூகுள் நிறுனவனம உலகளவில் அதிக பிரபலமானது, குறிப்பாக சுந்தர் பிச்சை அவர்களின் தலைமை பொறுப்பு கூகுள் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு சென்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் உலளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு, சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் கூகுள் நிறுவனத்தின் சிஈஒ தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 வெற்றி கண்டுள்ளார்

வெற்றி கண்டுள்ளார்

குறிப்பாக இந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் அவர்கள் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகிறது, இந்த நான்கு ஆண்டுகளிலும் பிச்சை பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

கூகுள் நிறுவனம் மீது எழுந்த புகார்

கூகுள் நிறுவனம் மீது எழுந்த புகார்

சமீபத்தில் கூகுள் நிறுவனம் மீது எழுந்த புகார் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு முன் சுந்தர் அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது, அப்போது சுந்தர்பிச்சையிடம் சுமார்
மூன்று மணி நேரம் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர் விசாரணைக் குழுவினர்.

மிக அமைதியாக தனது பதிலை வழங்கினார்

மிக அமைதியாக தனது பதிலை வழங்கினார்

ஆனால் இயல்பியல் அதிகம் பேச தயங்குபவராக அறியப்படும் பிச்சை,அவரது நிறுவனம் குறித்து மிகவும் மோசமான விமர்சனத்தை எததிர்கொண்டார். மேலும் எவ்வித தயக்கமும் இல்லாமல்,மிக அமைதியாக தனது பதிலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நாஸ்டாக்கின் தலைவர்

நாஸ்டாக்கின் தலைவர்

தற்சமயம் உலகளாவிய தலைமை பதிவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார்,பின்பு அவருடன்
அமெரிக்க பங்குச் சந்தையின் நாஸ்டாக்கின் தலைவர் அடினாஃப்ரைட் மேனும் அந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில்

அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாக கொண்டு இயங்கிடவரும் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் சுந்தர் பிச்சை மற்றம் அடினா ப்ரைட் மேனை இந்த விருதுக்கு தேர்வு செய்துள்ளது. குறிப்பாக அடுத்த வாரம் நடைபெற
உள்ள உச்சி மாநாட்டில் இந்த விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான பங்களிப்பை பாரட்டி இந்த விருது

சிறப்பான பங்களிப்பை பாரட்டி இந்த விருது

மேலும் கூகுள் மற்றும் நாஸ்டாக் நிறுவனங்கள், தொழில்நுட்பத் துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாரட்டி இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Googles Sunder Pichai receive 2019 Global Leadership Award : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X