3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்.!

|

கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் சிறந்த சேவையை வழங்கிவருகிறது, இந்நிலையில் புதிய தேடுபொறியை தொடங்க கூகுள் நிறுவனம் சீனாவில் திட்டமிட்டுள்ளது என்றும், பின்பு அமெரிக்க அரசியல் கட்சிகளிடம் பாரபட்சத்துடன்

நடந்து கொள்கிறது என்றும் கூகுள் நிறுவனம் மீது புகார் எழுந்தது.

3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்

எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு.!

பின்பு இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை நேரில் அஜராகி விளக்கம் அளித்தார், அதில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக சுமார் 3மணி நேரம் அடுக்கடுக்காய் கடுமையான குற்றம் சுமத்திய உறுப்பினர்களையும்,விசாரனைக் குழுவின் கடுமையான விமர்சனங்களையும் முகம் மாறாமல் அமைதியாக எதிர்கொண்ட சுந்தர் பிச்சையின் அமைதி கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல்

குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றாச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார் சுந்தர் பிச்சை. பின்பு எந்தவொரு சார்பு நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் மக்கள் தேர்தலில் பங்குகொள்ளத்த தேவையான தகவல்களையும் நாங்கள் வழங்கினோம்

என்றும் பின்பு அரசியல் பாரபட்சத்துடன் கூகுள் செயல்பட்டது இல்லை என்றும் சுந்தர் பிச்சை விளக்கம் அளித்தார்.

சேவை

சேவை

தொடர்ந்து சர்வதேச அளவில் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவையை வழங்கும் வகையில் நிறுவனம் வளரத் தேவையான உதவிகளை நாட்டின் மதிப்பிற்கு களங்கம் வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும் சுந்தர் பிச்சை உறுதி கூறினார்.

முட்டாள்

முட்டாள்

பின்பு ஆங்கிலத்தில் முட்டாள் என தட்டச்சு செய்தால், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பெயர் வருவதற்கு என்ன காரணம் என ஒரு எம்பி கேளிவி எழுப்பினார், இதற்கு பதில் சொன்ன சுந்தர்,வேண்டுமென்று அப்படியொரு தகலை கூகுள் நிறுவனம் செய்யவில்லை என்றும், தற்போதைய சூழலில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுடன் ஒப்பிட்டு, அதன் அதிகப்படியான பயன்பாடு, மக்களின் பதிவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டே தேடுபொறியில் வார்த்தைகளை சேர்ப்பதாக குறிப்பிட்டார்

அரசின் கட்டுப்பாடு

அரசின் கட்டுப்பாடு

கடந்த 2010-ம் ஆண்டு சீனச் சந்தையை விட்டு வெளியேறிய கூகுள் நிறுவனம், தற்போது அந்நாட்டு அரசின் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு அங்கு செயல்பட உள்ளதாக வெளிவரும் செய்திகள் குறித்த கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளித்தார் சுந்தர். பின்பு சீனாவில் தற்போதைக்கு எந்த ஒரு சேவையையும் வழங்கும் திட்டம் இல்லை, மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதே எங்கள் நோக்கம். தகவல்களைப் பெறுவது அடிப்படை மனித உரிமை என்ற வகையில் சர்வதேச அளவிலான மக்களுக்கு சிறந்த தகவல்களை கொண்டு சேர்க்கவே நாங்கள் உழைக்கிறோம் என்று அவர்

தெரிவித்தார்.

பிரமிளா ஜெயபால்

பிரமிளா ஜெயபால்

மேலும் இன உணர்வைத் தூண்டும் விதமான பரப்புரைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் போன்ற பல்வேறு விவகாரங்களில் கூகுள் நிலைப்பாடு குறித்த கடுமையாக விமர்சித்த தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க பெண் எம்பி பிரமிளா ஜெயபால், தன்னைப் போல் புலம் பெயர்ந்த ஒருவர் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமைப்

பொறுப்பை ஏற்று நாட்டிற்கு சேவையாற்றுவதைக் கண்டு பெருமையடைவதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடின உழைப்பால் உயர்ந்த சுந்தர் பிச்சை

கடின உழைப்பால் உயர்ந்த சுந்தர் பிச்சை

பின்பு கடின உழைப்பால் உயர்ந்த சுந்தர் பிச்சை, விசாரணைக் குழுவினரை எதிர்கொண்ட விதம் தலைமைப் பொறுப்புக்கு அவர் எத்தனை பொருத்தமானவர் என்பதை உணர்த்தும் விதமாகவே அமைந்தது. மேலும் கேள்விகளை மட்டுமே எதிர் கொண்டுவந்த சுந்தர்பிச்சைக்கு பாரட்டுகள் தெரிவித்தனர்.

எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு!

எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு!

கூகிள் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைப் பற்றி சில உண்மைகள் மற்றும் இந்தியாவின் மென்பொருள் வளர்ச்சியின் பற்றி அவரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. பல்வேறு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் அவரிடம் கருத்துக்கள் கேட்டனர். மேலும் கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே இந்த அமர்வு நடத்தப்பட்டது.

43 வயதான தலைமை நிர்வாக அதிகாரி, சில வேடிக்கையான உண்மைகளை எளிதில் கூறினார். மேலும் கூகிள் ஒரு புதிய ஹோல்டிங் நிறுவனத்தை ஆல்பாபெட் என்று உருவாக்கியது. மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார் கூகிள் பிச்சை.

சுந்தர் பிச்சை வருமானம்:

சுந்தர் பிச்சை வருமானம்:

இவருடைய வருமானம் பொருத்தமாட்டில் வருடத்திற்க்கு 200மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் ( ரூபாய்;12838100000.00) ஆக உள்ளது

பாயாசம் பிடிக்குமா:

பாயாசம் பிடிக்குமா:

சுந்தர் பிச்சையிடம் பாயாசம் பிடிக்குமா என்று கேட்டபோது 'எனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும்" என்று சொல்லி சிரித்தார்.

கிரிக்கெட் ஆர்வம்:

கிரிக்கெட் ஆர்வம்:

ஹர்ஷா போக்லே கிரிக்கெட் ஆர்வம் பற்றி கேட்டபோது அவருக்கு கிரிக்கெட் பிடிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு மேலும் கல்லுரிக் காலத்தில் அதிக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார். ஆனால் தற்போது உள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் மிகுந்தளவு ஆர்வம் இல்லை. என சுந்தர் பிச்சை கூறினார்.

 தொழில் முனைவோர்:

தொழில் முனைவோர்:

தொழில் முனைவோர்க்கான சில கேள்வியை கேட்டபோது, அவர் கூறியது தொழில் முனைவோர்கள் எந்த அபயத்தையும் சந்திக்க நேரிடும் ஆனால் பயம் இருக்க கூடாது எனக் கூறினார். மேலும் செயல்முறையின் ஒரு பகுதியாக கூட தோல்வி அடைந்தால், அது உங்களை முன்னேற்றும் என்று அவர் கூறினார்.

 பாதுகாப்பு:

பாதுகாப்பு:

பாதுகாப்பு பற்றி ஒருவர் கேட்டபோது சுந்தர் பிச்சை கூறியுள்ளது என்னவென்றால் 'நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்" நீங்கள் உண்மையிலேயே சில திறமையான மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறீர்கள், நீங்கள் கற்றுக் கொள்ளவும் வளரவும் வாய்ப்பு அளிக்கிறது.என்று எளிதாக கூறினார்.

தொலைபேசி எண்:

தொலைபேசி எண்:

சுந்தர் பிச்சை அவர்கள் டயல் செய்த ஒவ்வொரு எண்ணையும் நினைவு வைத்திருப்பது எப்படி எனக்கேட்ட போது, அவர் கூறியது அது மிகவும் எளிது லண்டன் எண்கள் பின் ஐந்து அல்லது ஆறு இலக்கங்கள் மட்டுமே இருந்தன எளிதாக ஞாபகம் இருக்கும். எனக் கூறினார்.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

சுந்தர் பிச்சை அவர்கள் 1995 ல் தனது முதல் மொபைல் போன் மற்றும் 2006 ல் தனது முதல் ஸ்மார்ட்போன் வாங்கினார். தற்போது அவர்

20-30 ஸ்மார்ட்போன்கள் தனது வீட்டுக்குள்ளேயே பயன்படுத்துகிறார்.

கூகிள் தயாரிப்பு:

கூகிள் தயாரிப்பு:

ஹர்ஷா அடுத்த கூகிள் பெரிய தயாரிப்பு என்ன என்றுகேட்டபோது. கூகிள் உலகம் பெரிய தயாரிப்புகளை எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்பதை நகைச்சுவையாக சொன்னார், மேலும் 150 கிமீ பவுளிங் மெசின் ஒன்று உருவாக்கப்படும் என நகைச்சுவையாக கூறினார்.

மிட்டாய் பெயர்:

மிட்டாய் பெயர்:

அண்ட்ராய்டு ஒஎஸ் இந்திய மிட்டாய் பெயர் இடம்பெருமா எனக்கேட்டபோது அண்ட்ராய்டு ஒஎஸ் இன் அடுத்த பதிப்பிற்கான இனிப்பு (இந்தியர்கள் உட்பட) பெயர்கள் மற்றும் பொதுப் பெயரை புதிய பெயரைத் தீர்மானிக்கலாம் எனக் கூறினார். பெரும்பாலும் அனைத்து ஒஎஸ் பெயர் ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் தான் அதாவது, கிட்-கேட், ஜெல்லி பீன், மார்ஷ்மெல்லோ போன்றவை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Googles Sundar Pichai explains to Congress why searching idiot results in Donald Trump pictures: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more