முதல் இடத்திலிருந்து 88 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை.! காரணம் இதுதான்.!

ரெப்புட்டேஷன் இன்ஸ்டிடியூட் நடத்திய இந்த வருடத்திற்கான சிறந்த சிஇஓ ரெப்டிராக் ஆய்வின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை 88 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்

|

ரெப்புட்டேஷன் இன்ஸ்டிடியூட் நடத்திய இந்த வருடத்திற்கான சிறந்த சிஇஓ ரெப்டிராக் ஆய்வின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை 88 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்த பிச்சை

கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்த பிச்சை

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே சிறந்த சிஇஓ ரெப்டிராக் ஆய்வில், சுந்தர் பிச்சை முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார். உலகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களின் சிஇஓகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் அவர் முதல் இடம் பிடித்து இந்தியர்களை பெருமிதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

88 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள சுந்தர் பிச்சை

88 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள சுந்தர் பிச்சை

ஆனால் இந்த ஆண்டு ரெப்புட்டேஷன் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் முதல் இடத்தில் இருந்த சுந்தர் பிச்சை நேரடியாக 88 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த ஆண்டு முதல் இடத்தில் ஷெல் நிறுவனத்தின் சிஇஓ, பென் வான் பர்டன் கைப்பற்றியுள்ளார். அவரை தொடர்ந்து லீகோ நிறுவனத்தின் சிஇஓ, நீல்ஸ் கிறிஸ்டென்சன் இடம் பிடித்துள்ளார்.

ஜெஃப் பெஸோஸ் & மார்க் ஜுக்கர்பெர்க்

ஜெஃப் பெஸோஸ் & மார்க் ஜுக்கர்பெர்க்

அதேபோல் கடந்த ஆண்டில் முன்னணி இடத்தை பிடித்திருந்த தொழில்நுட்பம் சார்ந்த சிஇஓக்கள் அனைவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அமேசான் நிறுவனத்தின் சிஇஓ, ஜெஃப் பெஸோஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ, மார்க் ஜுக்கர்பெர்க்கும், இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப சர்ச்சைகள்

தொழில்நுட்ப சர்ச்சைகள்

இந்த ஆண்டில் நடைபெற்ற பல தொழில்நுட்ப சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளின் காரணமாகத் தான் கூகுள், அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற சிஇஓக்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.

கூகுளின் பல சர்ச்சைகள் தான் காரணம்

கூகுளின் பல சர்ச்சைகள் தான் காரணம்

முக்கிய குறிப்பாகச் சுந்தர் பிச்சை 88 ஆம் இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம், கூகுள் நிறுவனத்தில் நிகழ்ந்த ஆண்ட்ராய்டு பாதுகாப்பு சர்ச்சைகள், பாலியல் தொந்தரவு சர்ச்சை எனப் பல சர்ச்சைகள் தான் காரணம் என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு.!

எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு.!

கூகிள் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைப் பற்றி சில உண்மைகள் மற்றும் இந்தியாவின் மென்பொருள் வளர்ச்சியின் பற்றி அவரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. பல்வேறு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் அவரிடம் கருத்துக்கள் கேட்டனர். மேலும் கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே இந்த அமர்வு நடத்தப்பட்டது.

43 வயதான தலைமை நிர்வாக அதிகாரி, சில வேடிக்கையான உண்மைகளை எளிதில் கூறினார். மேலும் கூகிள் ஒரு புதிய ஹோல்டிங் நிறுவனத்தை ஆல்பாபெட் என்று உருவாக்கியது. மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார் கூகிள் பிச்சை.

சுந்தர் பிச்சை வருமானம்:

சுந்தர் பிச்சை வருமானம்:

இவருடைய வருமானம் பொருத்தமாட்டில் வருடத்திற்க்கு 200மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் ( ரூபாய்;12838100000.00) ஆக உள்ளது

பாயாசம் பிடிக்குமா:

பாயாசம் பிடிக்குமா:

சுந்தர் பிச்சையிடம் பாயாசம் பிடிக்குமா என்று கேட்டபோது 'எனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும்" என்று சொல்லி சிரித்தார்.

கிரிக்கெட் ஆர்வம்:

கிரிக்கெட் ஆர்வம்:

ஹர்ஷா போக்லே கிரிக்கெட் ஆர்வம் பற்றி கேட்டபோது அவருக்கு கிரிக்கெட் பிடிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு மேலும் கல்லுரிக் காலத்தில் அதிக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார். ஆனால் தற்போது உள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் மிகுந்தளவு ஆர்வம் இல்லை. என சுந்தர் பிச்சை கூறினார்.

தொழில் முனைவோர்:

தொழில் முனைவோர்:

தொழில் முனைவோர்க்கான சில கேள்வியை கேட்டபோது, அவர் கூறியது தொழில் முனைவோர்கள் எந்த அபயத்தையும் சந்திக்க நேரிடும் ஆனால் பயம் இருக்க கூடாது எனக் கூறினார். மேலும் செயல்முறையின் ஒரு பகுதியாக கூட தோல்வி அடைந்தால், அது உங்களை முன்னேற்றும் என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு:

பாதுகாப்பு:

பாதுகாப்பு பற்றி ஒருவர் கேட்டபோது சுந்தர் பிச்சை கூறியுள்ளது என்னவென்றால் 'நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்" நீங்கள் உண்மையிலேயே சில திறமையான மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறீர்கள், நீங்கள் கற்றுக் கொள்ளவும் வளரவும் வாய்ப்பு அளிக்கிறது.என்று எளிதாக கூறினார்.

தொலைபேசி எண்:

தொலைபேசி எண்:

சுந்தர் பிச்சை அவர்கள் டயல் செய்த ஒவ்வொரு எண்ணையும் நினைவு வைத்திருப்பது எப்படி எனக்கேட்ட போது, அவர் கூறியது அது மிகவும் எளிது லண்டன் எண்கள் பின் ஐந்து அல்லது ஆறு இலக்கங்கள் மட்டுமே இருந்தன எளிதாக ஞாபகம் இருக்கும். எனக் கூறினார்.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

சுந்தர் பிச்சை அவர்கள் 1995 ல் தனது முதல் மொபைல் போன் மற்றும் 2006 ல் தனது முதல் ஸ்மார்ட்போன் வாங்கினார். தற்போது அவர் 20-30 ஸ்மார்ட்போன்கள் தனது வீட்டுக்குள்ளேயே பயன்படுத்துகிறார்.

கூகிள் தயாரிப்பு:

கூகிள் தயாரிப்பு:

ஹர்ஷா அடுத்த கூகிள் பெரிய தயாரிப்பு என்ன என்றுகேட்டபோது. கூகிள் உலகம் பெரிய தயாரிப்புகளை எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்பதை நகைச்சுவையாக சொன்னார், மேலும் 150 கிமீ பவுளிங் மெசின் ஒன்று உருவாக்கப்படும் என நகைச்சுவையாக கூறினார்.

மிட்டாய் பெயர்:

மிட்டாய் பெயர்:

அண்ட்ராய்டு ஒஎஸ் இந்திய மிட்டாய் பெயர் இடம்பெருமா எனக்கேட்டபோது அண்ட்ராய்டு ஒஎஸ் இன் அடுத்த பதிப்பிற்கான இனிப்பு (இந்தியர்கள் உட்பட) பெயர்கள் மற்றும் பொதுப் பெயரை புதிய பெயரைத் தீர்மானிக்கலாம் எனக் கூறினார். பெரும்பாலும் அனைத்து ஒஎஸ் பெயர் ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் தான் அதாவது, கிட்-கேட், ஜெல்லி பீன், மார்ஷ்மெல்லோ போன்றவை.

Best Mobiles in India

English summary
googles sundar pichai drops no 88 reputation institute ceo study : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X