Home
News

சல்யூட் தலைவா.. பிரபஞ்சத்தை தாண்டி பாய்ந்த Google Willow சிப்.. சுந்தர் பிச்சையை வியந்து பார்த்த எலான் மஸ்க்..

கூகுள் (Google) நிறுவனம் தான் இன்று உலகளவில் ட்ரெண்டிங் டாப்பிக்காக இருக்கிறது. தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனமாக திகழும் கூகிள் (Google) புதிதாக ஒரு சூப்பர் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சக்தி வாய்ந்த சிப்பை (chip) நிறுவனம் வில்லொ (Willow) என்று பெயரிட்டுள்ளது. சூப்பர் கம்ப்யூட்டர்களால் 10 செப்டில்லியன் (10 Septillion) ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும் கணக்கை கூட, இந்த வில்லோ சிப் வெறும் 5 நிமிடத்திற்குள் செய்து முடிகிறது. 10 செப்டில்லியன் அதாவது இது நம்முடைய பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த வயதை விட அதிகம்.

10 செப்டில்லியன் ஆண்டுகள் என்றால் என்ன என்று சிலருக்கு சந்தேகமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு பில்லியன், மில்லியன் என்றால் என்ன என்று நன்கு அறிந்திருப்பீர்கள். ஆனால், செப்டில்லியன் (Septillion) 1000-தில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க கூடும். 1 செப்டில்லியன் (1 Septillion) என்பது 1,000,000,000,000,000,000,000,000 என்ற இலக்கை குறிக்கிறது. இதில் மொத்தம் 24 பூஜ்யங்கள் (zeros) இடம்பெறுகிறது. ஒரே மூச்சியில் திணறி சொல்லும் அளவிற்கு இந்த எண் பெரியது.

சல்யூட் தலைவா.. பிரபஞ்சத்தை தாண்டி பாய்ந்த Google Willow சிப்..

பிரபஞ்சத்தை தாண்டி பாய்ந்த Google Willow சிப்.. சல்யூட் தலைவா:

சூப்பர் கொம்ப்யூட்டர்களால் (super computers) கூட, நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளும் மிகவும் கடினமான, மற்றும் சாத்தியமற்ற மற்றும் மனிதர்களால் செய்து முடிக்கவே முடியாத சிக்கலான கணக்கை இந்த வில்லொ சிப் வெறும் 5 நிமிடத்தில் செய்து முடிக்கிறது என்பது வியப்பின் ஆச்சரியக்குறியீடு. கூகுள் நிறுவனம் இத்தகைய சிப்பை இன்று உலகிற்கு அறிமுகம் செய்து, அதன் சக்தியை உலகிற்கு திறம்பட மீண்டும் நிரூபித்திருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) இன்று அவருடைய X பக்கம் வழியாக பதிவிடப்பட்ட பதிவின் மூலம் இந்த புதிய சக்தி வாய்ந்த வில்லொ சிப் பற்றிய தகவலை பகிர்ந்து அறிமுகம் செய்து வைத்தார். அதில், வில்லோவை அறிமுகப்படுத்துகிறோம், எங்களின் புதிய அதிநவீன குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பை (Google's new quantum computing chip) அதீத சக்தியாக அறிமுகப்படுத்துகிறோம். இது துறையில் 30 ஆண்டுகால சவாலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

அதிவேகமான குவாண்டம் சிப் Willow:

அதிக குவிட்களைப் பயன்படுத்தும் போதும் கூட, பிழைகளை அதிவேகமாகக் குறைக்கும் புதிய குவாண்டம் சீப்பை உருவாக்கியுள்ளோம். இது பெஞ்ச்மார்க் சோதனைகளில் (benchmark testing), வில்லோ ஒரு நிலையான கணக்கீட்டை 5 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தீர்த்து தீர்வை வழங்கியுள்ளது. ஒரு முன்னணி சூப்பர் கம்ப்யூட்டரால் சுமார் 10^25 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கும் காலத்தை, இந்த சிப் 5 நிமிடத்திற்குள் விடை தருகிறது. 10^25 என்பது 1 Septillion ஆண்டுக்கும் அதிகமான காலமாகும்.

இது நம்முடைய பிரபஞ்சத்தின் வயதை விட அதிகமானது என்று அவர் கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்து வியந்த எலான் மஸ்க் (Elon Musk), சுந்தர் பிச்சை பதிவிட்ட வில்லொ சிப் பதிவில் 'Woww' என்று கமெண்ட் செய்திருக்கிறார். இது உண்மையிலேயே ஒரு அசாதாரணமான சாதனை என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் பூமியில் பல அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

எதற்காக இந்த சிப் பயன்படுத்தப்படும்? இதன் மூலம் என்ன நன்மை கிடைக்கும்?

அதேபோல், இத்தகைய தொழில்நுட்பத்தை வைத்து விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி பயன்களை இன்னும் பல மடங்கு மேம்படுத்த முடியும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். இந்த வில்லொ சிப்பை இனி கூகுள் புதிய ஏஐ (Ai) தொழில்நுட்பம் உருவாக்குவது, புதிய மருந்துகளை (medicines) கண்டுபிடிப்பது, புதிய பேட்டரி (battery) தொழில்நுட்பங்களை உருவாக்காவது போன்ற பல துறைகளில் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் வில்லொ சிப் மனித குளத்தின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google's New Willow Quantum Computing Chip Makes Elon Musk Wow on Sundar Pichai X Tweet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X