கூகுள் டூடுளில் இன்று...!

Posted By: Staff
கூகுள் டூடுளில் இன்று...!

கூகுளில் அதிக நேரம் தேடுதல் வேட்டையை துவங்குபவர்களுக்கு டூடுள் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். உலகம் போற்றும் மனிதர்களை மக்களுக்கு சரியாக அடையாளம் காட்டி வருகிறது கூகுள் டூடுள். நிறைய விஞ்ஞானிகள் பல படைப்புகளை உலகிற்கு கொடு்த்திருக்கிறார்கள். இவர்களது வரலாறுகளை கூறும் வகையில் தனது பக்கத்தினை

வடிவமைக்கிறது கூகுள்.

இப்போது அனைவரின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருவது ஒலிம்பிக்ஸ். இதனால் தினமும் தனது பக்கத்தில் ஒரு விளையாட்டினை விளையாடுவது போல் வடிவமைத்து வருகிறது கூகுள். இன்று ஒரு ஃபுட்பால் பக்கத்தினை வடிவமைத்திருக்கிறது கூகுள். இதில் இடது, வலது மற்றும் ஸ்பேஸ்பார் ஆகிய பட்டன்களை பயன்படுத்தி எளிதாக

விளையாடவும் முடியும்.

மேல் கூறப்பட்டுள்ள இந்த பட்டன்களை பயன்படுத்தி எவ்வளவு கோல் சேர்க்க முடியும் என்பதை ஸ்கோர் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒலிம்பிக்ஸை ஒட்டி கூகுள் தனது பக்கத்தினை விளையாட்டுக்களால் அலங்கரி்த்து வருகிறது.

எந்த நேரமும் கம்ப்யூட்டர் முன்பு இருப்பவர்களுக்கு இந்த விளையாட்டு ஒரு குட்டி பொழுதுபோக்கு. இனி ஒலிம்பிக்ஸ் முடியும் வரை கூகுளில் தினம் ஒரு விளையாட்டு தான்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot