Home
News

கூகுள் தேடல் 2024.. டாப் 10 பட்டியலை பாருங்க.. இந்தியா முழுவதும் அதிக மக்கள் தேடியது.. அப்படி என்ன?

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் கூகுள் தேடலை (Google Search) பற்றி தெரியாமல் இருக்காது. எந்த ஊருக்கு சுற்றுலா போகலாம், எந்த படம் நல்லா ஓடுது, ஐபிஎல் மேட்ச் தேதி என்ன, கிரிக்கெட் ஸ்கோர் என்ன போன்ற எந்த டவுட் வந்தாலும் மொபைலை எடுத்து கூகுளுக்கு செல்வதையே வழக்கமாக வைத்து வருகிறோம். இதனால், கூகுள் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இப்போது, 2024ஆம் ஆண்டு முடிய இருப்பதால், இதுவரையில் அதிகம் கூகுளில் தேட்டப்பட்ட விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

இந்த டாப் 10 பட்டியலை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. முதலில் ஒட்டுமொத்தமாக தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை தெரிந்து கொள்வோம். அதன்பிறகு சினிமா, ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரபலங்கள் போன்ற விவரங்களை பார்ப்போம். ஒட்டுமொத்தமாக தேடப்பட்ட பட்டியலில் முதல் இடத்தில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

கூகுள் தேடல் 2024.. டாப் 10 பட்டியலை பாருங்க.. இந்தியாவின் அதிக தேடல்!

இரண்டாவது இடத்திலும் ஸ்போர்ட்ஸ் தேடலே இடம்பெற்றுள்ளது. டி20 வேல்ர்ட் கப் அந்த இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் அரசியல் கட்சியான பாரதிய ஜனதா பார்ட்டி இடம்பெற்றுள்ளது. நான்காவது இடத்தில் தேர்தல் முடிவுகள் 2024 மற்றும் ஐந்தாவது இடத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இருக்கின்றன. ஆறாவது இடத்தில் அதிக வெப்பம் (Excessive Heat) வார்த்தை உள்ளது.

ஏழாவது இடத்தில் அனைவருக்கும் பிடித்த ரத்தன் டாடா பெயரை அதிக மக்கள் தேடி இருக்கின்றனர். அதற்கு அடுத்து எட்டாவது இடத்தில் இந்திய நேஷனல் காங்கிரஸ் கட்சி தேடப்பட்டுள்ளது. மேலும், ஒன்பவதாவது இடத்தில் ப்ரோ கபடி லீக் மற்றும் 10ஆவது இடத்தில் இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, இந்தியர்கள் அதிகளவில் ஸ்போர்ட்ஸ் பிரியர்களாக இருப்பது தெரிகிறது.

இப்போது ஸ்போர்ட்ஸ்க்கு அடுத்து பெரும்பாலான இந்தியர்கள் விரும்பும் சினிமாவில் எந்த திரைப்படம் அதிகம் தேடப்பட்டுள்ளது என்பதை பார்த்துவிடுவோம். முதல் இடத்தில் ஸ்ட்ரீ 2 என்ற இந்தி மொழி திரைப்படம் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது. இதற்கு அடுத்து தெலுங்கு திரைடப்படமான கல்கி 2898 ஏடி திரைப்படம் அதிக மக்களால் தேடப்பட்டுள்ளது. 12த் பெயில் திரைப்படம் மூன்றாவதாக இருக்கிறது.

லாபட்டா லேடிஸ் திரைப்படம் 4ஆவது இடத்தையும், ஹனு-மான் திரைப்படம் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. ஆகவே, டாப் 5 இடத்தில் மூன்று இந்தி திரைப்படங்கள் இருக்கின்றன. 6ஆவது இடத்தில் தமிழ்படம் இருக்கிறது. மகாராஜா திரைப்படத்தை அதிகம் பேர் தேடி இருக்கின்றனர். இதற்கு அடுத்து ஏழாவது இடத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் இருக்கிறது.

எட்டாவது இடத்தில் மீண்டும் ஒரு தமிழ்படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடத்தில் சலார் மற்றும் ஆவேசம் ஆகிய படங்கள் அதிகம் தேடப்பட்டு இருக்கின்றன. அதேபோல ஷோக்களை பார்க்கையில் ஹீராமண்டி, மிசாபூர் மற்றும் லாஸ்ட் ஆப் அஸ் ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

நான்காவது இடத்தில் பிக் பாஸ் 17 மற்றும் 5ஆவது இடத்தில் பஞ்சாயத்து (Panchayat) ஷோ தேடப்பட்டு இருக்கிறது. விளையாட்டுக்களை பார்க்கும்போது, வழக்கம்போல இந்தியன் பிரீமியர் லீக், டி20 உலக கோப்பை, ஒலிம்பிக்ஸ், ப்ரோ கபடி லீக் மற்றும் இந்தியன் சூப்பர் ஆகியவை டாப் 5 இடத்தில் இருக்கின்றன. இப்போது, அனைவரும் எதிர்பார்த்தபடி அதிகம் தேடப்பட்ட நபர்களை பார்த்துவிடுவோம்.

முதல் இடத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் இருக்கிறார். இதற்கு அடுத்த அரசியல் தலைவரான நிதிஷ் குமார் தேடப்பட்டு இருக்கிறார். மூன்றாவது இடத்தில் அரசியல் பிரமுகரும் முன்னாள் நடிகருமான சிராக் பாஸ்வான் இருக்கிறார். இதற்கு அடுத்த இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் 5ஆவது இடத்தில் பவன் கல்யாண் இருக்கிறார். பூனம் பாண்டே மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் 7 மற்றும் 8ஆவதாக இருக்கின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Year in Search 2024 Top 10 Search Movies Sports Peoples Across India on Google
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X