மாப்பிள்ளைக்கு அவ்ளோ வெறி.. Google-ல் 2023 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்!
இந்த 2023 ஆம் ஆண்டில் கூகுள் வழியாக அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் என்ன? கேள்விக்கு கூகுளே பதிலளித்துள்ளது. இந்தாண்டு கூகுள் சேர்ச்சில் (Google Search) இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விஷயங்களை.. இயர் இன் சேர்ச் 2023 (Year in Search 2023) என்கிற தலைப்பின்கீழ் கூகுள் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
கூகுளின் இயர் இன் சேர்ச் 2023 முடிவுகளானது பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள் (Events), அதிகம் தேடப்பட்ட வாட் ஐஸ் (What is), அதிகம் தேடப்பட்ட ஹவ் டூ (How to), அதிகம் தேடப்பட்ட விளையாட்டு போட்டிகள், அதிகம் தேடப்பட்ட நபர்கள், அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் போன்ற பல முடிவுகளை கூகுள் பகிர்ந்துள்ளது.

கூகுள் வழியாக 2023 ஆம் ஆண்டில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள்?
சந்திரயான்-3
கர்நாடக தேர்தல் முடிவுகள்
இஸ்ரேல் செய்திகள்
சதீஷ் கௌசிக்
பட்ஜெட் 2023
துருக்கி நிலநடுக்கம்
அதிக் அகமது
மேத்யூ பெர்ரி
மணிப்பூர் செய்திகள்
ஒடிசா ரயில் விபத்து
அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் மூன் மிஷன் ஆன "சந்திரயான்-3" தான் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிகம் தேடிய வார்த்தை ஆகும். இந்த பட்டியலில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான திடீர் யுத்தம், நடிகரும் இயக்குனருமான சதீஷ் கௌஷிக் மற்றும் 'ஃப்ரெண்ட்ஸ்' நிகழ்ச்சியின் முக்கிய நட்சத்திரமான மேத்யூ பெர்ரி ஆகியோரின் மரணமும் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது.

வாட் இஸ் (What is) தலைப்பின்கீழ் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள்:
ஜி20 என்றால் என்ன?
யூசிசி என்றால் என்ன?
சாட்ஜிபிடி என்றால் என்ன?
ஹமாஸ் என்றால் என்ன?
28 செப்டம்பர் 2023 அன்று என்ன?
சந்திரயான் 3 என்றால் என்ன?
இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் என்றால் என்ன?
கிரிக்கெட்டில் டைம்டு அவுட் என்றால் என்ன?
ஐபிஎல்-ல் இம்பாக்ட் பிளேயர் என்றால் என்ன?
செங்கோல் என்றால் என்ன?
ஹவ் டூ (How to) தலைப்பின்கீழ் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள்:
வீட்டு வைத்தியம் மூலம் தோல் மற்றும் கூந்தலுக்கு சூரியனால் ஏற்படும் பாதிப்பை தடுப்பது எப்படி?
யூட்யூப்பில் முதல் 5கே ஃபாலோவர்களை அடைவது எப்படி?
கபடியில் சிறந்து விளங்குவது எப்படி?
கார் மைலேஜை மேம்படுத்துவது எப்படி?

செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவது எப்படி?
ரக்ஷாபந்தனில் என் சகோதரியை ஆச்சரியப்படுத்துவது எப்படி?
சுத்தமான காஞ்சிவரம் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி?
ஆதார் பான் இணைப்பை சரிபார்ப்பது எப்படி?
வாட்ஸ்அப் சேனலை உருவாக்குவது எப்படி?
இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவது எப்படி?
2023-ல் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு போட்டிகள்:
இந்தியன் பிரீமியர் லீக்
கிரிக்கெட் உலகக் கோப்பை
ஆசிய கோப்பை
பெண்கள் பிரீமியர் லீக்
ஆசிய விளையாட்டு போட்டிகள்
இந்தியன் சூப்பர் லீக்
பாகிஸ்தான் சூப்பர் லீக்
ஆஷஸ்
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை
எஸ்ஏ20 (SA20)
இந்தியர்களால்.. 2023 ஆம் ஆண்டில் கூகுள் சேர்ச் வழியாக அதிகம் தேடப்பட்ட நபர்கள்?
கியாரா அத்வானி
சுப்மன் கில்
ரச்சின் ரவீந்திரன்
முகமது ஷமி
எல்விஷ் யாதவ்
சித்தார்த் மல்ஹோத்ரா
கிளென் மேக்ஸ்வெல்
டேவிட் பெக்காம்
சூர்யகுமார் யாதவ்
டிராவிஸ் ஹெட்
2023-ல் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள்?
ஜவான்
காடார் 2
ஓபன்ஹெய்மர்
ஆதிபுருஷ்
பதான்
கேரளா ஸ்டோரி
ஜெயிலர்
லியோ
டைகர் 3
வாரிசு
ஃபார்ஸி
வெட்னெஸ்டே
அசுர்
ராணா நாயுடு
தி லாஸ்ட் ஆஃப் அஸ்
ஸ்கேம் 2003
பிக் பாஸ் 17
கன்ஸ் அண்ட் குலாப்ஸ்
செக்ஸ்/லைஃப்
தாசா கபார்.


Click it and Unblock the Notifications








