ChatGPT கதை முடிஞ்சது.. Google-ன் புதிய AI Lite.. சுந்தர் பிச்சையின் Gemini பிரம்மாஸ்திரம்!
கூகுள் நிறுவனம் அதன் கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) அல்லது கூகுள் ஏஐ அல்ட்ரா (Google AI Ultra) திட்டங்களுக்கு அதிக பணம் செலுத்த விரும்பாதவர்களுக்காக கூகுள் ஏஐ லைட் (Google AI Lite) எனப்படும் மலிவான ஜெமினை திட்டத்தை (Cheapest Gemini Plan) அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி (Android Authority) வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின் படி, கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய ஜெமினை பிளான் (New Gemini Plan) ஆனது கூகுள் ஆப்பின் லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷனின் (Google app beta version) ஏபிகே டியர்டவுனில் (APK teardown) தோன்றியுள்ளது.

இது ஜெமினையின் இலவச பதிப்பில் (Gemini Free Version) கிடைக்கும் அம்சங்களை விட இன்னும் அதிக ஏஐ அம்சங்களை (AO Features) விரும்பும் பயனர்களை ஈர்க்கும்; இது நியாயமான விலையில் விற்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது, கூகுள் ஏஐ ப்ரோ திட்டமானது முதல் மாதத்திற்கு இலவசமாக (Google AI Pro Free For 1st Month) கிடைக்கிறது, இருப்பினும் சோதனை காலம் முடிந்த பிறகு கூகுள் நிறுவனம் (Google AI Pro Price in India) மாதத்திற்கு ரூ.1,950 வசூலிக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த புதிய திட்டம் குறித்து தற்போது மிகக்குறைந்த அளவிலான தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாததால், இந்த மலிவான கூகுள் ஏஐ திட்டம் எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களுக்கான அணுகல்களை வழங்கும் என்பது குறித்த சரியான விவரங்கள் இல்லை; ஆனால் சில யூகங்கள் உள்ளன.
கூகுள் ஏஐ அல்ட்ரா திட்டம் (Google AI Ultra Plan Price in India) ஆனது முதல் 3 மாதங்களுக்கு, மாதத்திற்கு ரூ.12,200 என்கிற செலவின் கீழ் அணுக கிடைக்கிறது. அதன் பிறகு பயனர்களிடம் மாதத்திற்கு ரூ.24,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எப்படியும் கூகுள் ஏஐ லைட் திட்டமானது கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்திற்கு கீழே தான் வைக்கப்படும் என்பதால், அதன் மாதாந்திர சந்தா ரூ.1,950 க்கும் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கூகுள் ஏஐ லைட் திட்டம் வழங்கக்கூடிய நன்மைகளை பொறுத்தவரை, கூகுள் ஏஐ ப்ரோ திட்டம் வழங்கும் அம்சங்களின் டோன்டுடவுன் (அதாவது குறைக்கப்பட்ட) அம்சங்களை வழங்கலாம். ஏஐ ப்ரோ திட்டமானது அதிக விகித வரம்புகளுடன் ஜெமினை 2.5 ப்ரோவின் லார்ஜ் லேங்குவேஜ் மாடல் (Gemini 2.5 Pro Large language model) மற்றும் டீப் ரிசர்ச் (Deep Research) ஆகியவைகளை இல் வழங்குகிறது.
அத்துடன் கூகுகிளின் சமீபத்திய வீடியோ ஜெனெரஷன் மாடல் (Video generation model) ஆன வியோ 3 பாஸ்ட்க்கான (Veo 3 Fast) வரையறுக்கப்பட்ட அணுகலையும் வழங்குகிறது. மேலும் ஏஐ ப்ரோ திட்டமானது வியோ 2-வின் இமேஜ் டூ வீடியோ உருவாக்கத்திற்கான (Veo 2 image-to-video creation) வரம்பையும் அதிகரிக்கிறது, 1000 மாதாந்திர ஏஐ கிரெடிட்களை (1000 monthly AI credits) சேர்க்கிறது, மேலும் நோட்புக்எல்எம்-க்கான (NotebookLM) அணுகலையும் சேர்க்கிறது
நோட்புக்எல்எம் ஆனது சம்மரைஸ் செய்யவும், ரிசர்ச் செய்யவும், அறிக்கைகளை உருவாக்கவும் மற்றும் சிக்கலான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களிலிருந்து தகவல்களை பெறவும் அனுமதிக்கிறது. இதோடு ஏஐ ப்ரோ திட்டம் வழியாக - ஜிமெயில் (Gmail) மற்றும் கூகுள் டாக்ஸிலும் (Google Docs) ஜெமினையின் ஏஐ-யின் நன்மைகளை பெறமுடியும். கடைசியாக கூகுள் டிரைவ், கூகிள் போட்டோஸ் மற்றும் ஜிமெயிலுக்கான ஒருங்கிணைந்த 2டிபி கிளவுட் ஸ்டோரேஜும் (2TB Cloud Storage) கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








