மனிதனின் வாழ்நாளை அதிகரிக்க கூகுளின் புதிய கம்பெனி

Written By:

மனிதனுக்கு வயதாகிவிட்டால் உடலில் நிறைய பிரச்சனைகள் மற்றும் நோய்கள் வருகிறது. மனதினின் வாழ்நாளும் குறைந்து கொண்டே வருகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் மனித உடலின் பல நோய்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறுது.

கூகுள் நிறுவனம் கேலிக்கோ (calico) என்ற புதிய கம்பெனியை ஆரம்பிக்க உள்ளது. மனதனின் உடல் நல பிரச்சனையை தீர்க்க மற்றும் வாழ்நாளை அதிகரிக்க புதிய டெக்னாலஜிகளை கண்டுபிடிப்பதற்க்காகவே இந்க கம்பெனி தொடங்க பட உள்ளது.

மனிதனின் வாழ்நாளை அதிகரிக்க கூகுளின் புதிய கம்பெனி

இந்த புதிய கம்பெனி கூகுளுடன் இல்லாமல் தனியாக செயல்படும் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மனிதனின் உயிரை அச்சுறுத்தும் வகையில் உருவாகும் வியாதிகளுக்கு தொழிநுட்ப வகையில் தீர்வு காணவும் இந்த கம்பெனி செயல்படுமாம்.

கூகுளின் இந்த புதிய கம்பெனி எங்கு தொடங்க உள்ளது, இதில் எத்தனை பேர் பணிபுரிவார்கள் என்ற எந்த தகவலையும் கூகுள் இன்னும் வெளியிடவில்லை. பல புதிய கண்டுபிடிப்புகளில் கூகுள் முதலீடு செய்துள்ளது. கூகுளின் இந்த புதிய முயற்ச்சியும் பாராட்டுக்குரியது தான்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்