இனி 'இந்த' ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அப்டேட் கிடையாது.. கூகிள் தீர்வுடன் வெளியிட்ட அறிவிப்பு..

|

ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கும் தொலைப்பேசிகளுக்கான பிளே சேவைகளைப் புதுப்பிக்கும் அப்டேட்களை கூகிள் விரைவில் நிறுத்திவிடும் என்று அறிவித்துள்ளது. இந்த அப்டேட் நிறுத்தம் ஜெல்லி பீன் வெர்ஷனில் உள்ள 4.1, 4.2 மற்றும் 4.3 ஆகிய மூன்று வெர்ஷன்களுக்கும் பொருந்தும் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. முறையே API வெர்ஷன் 16 முதல் 18 வரை இது உள்ளடக்கியுள்ளது. இந்த சிக்கலைச் சரி செய்யப் பயனர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

ஜெல்லி பீன் பயனர்கள் பதட்டம் அடைய வேண்டாம்

ஜெல்லி பீன் பயனர்கள் பதட்டம் அடைய வேண்டாம்

இதை படித்ததும் ஜெல்லி பீன் பயனர்கள் பதட்டம் அடைய வேண்டாம், காரணம் உங்களுக்கான லைஃப்லைன் இன்னும் முழுமையாக நிறுத்திடவிடவில்லை, ஜெல்லி பீன் வெர்ஷன் 21.30.99 உடன் இந்த பயனர்கள் ஒரு கடைசி புதுப்பிப்பைப் பெறுவார்கள் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இறுதி அப்டேட் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சரியான தேதி வெளியிடப்படவில்லை.

ஜெல்லி பீன் கொண்டு வந்த அட்டகாசமான அம்சங்கள் என்ன-என்ன தெரியுமா?

ஜெல்லி பீன் கொண்டு வந்த அட்டகாசமான அம்சங்கள் என்ன-என்ன தெரியுமா?

ஜெல்லி பீன் முதன் முதலில் 2012 இல் அறிமுகம் செய்யப்பட்டது, அதாவது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இது களமிறக்கப்பட்டது. இது பெரிய மேம்பாடுகளைக் கொண்டு வந்தது, இது 60 ஹெர்ட்ஸில் vsync உடன் UI சீராக இயங்கச் செய்தது. பிற முக்கிய சேர்த்தல்களில் கூகிள் நவ், இப்போது நீக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பீம், விரிவாக்கக்கூடிய அறிவிப்புகள் மற்றும் தனிப்பட்ட பயன்பாடுகளிலிருந்து அறிவிப்புகளை முடக்குவதற்கான திறன், மல்டி-சேனல் ஆடியோ, யூ.எஸ்.பி ஆடியோ ஆகிய அம்சங்களைக் கொண்டுவந்தது.

Qualcomm அறிமுகம் செய்யும் முதல் ஸ்னாப்டிராகன் ஸ்மார்ட்போன்.. இப்படி ஒரு போனை யாரும் எதிர்பார்க்கவில்லை..Qualcomm அறிமுகம் செய்யும் முதல் ஸ்னாப்டிராகன் ஸ்மார்ட்போன்.. இப்படி ஒரு போனை யாரும் எதிர்பார்க்கவில்லை..

1% க்கும் குறைவாக இருக்கும் ஜெல்லி பீன் பயனர்களை என்ன செய்வது?

1% க்கும் குறைவாக இருக்கும் ஜெல்லி பீன் பயனர்களை என்ன செய்வது?

ஜெல்லி பீன் அண்ட்ராய்டு 4.2 அந்த ஆண்டின் பிற்பகுதியில் வந்தது, ஜெல்லி பீன் 4.3 வெர்ஷன் 2013 இல் வந்தது, ஜெல்லி பீன் பெயர் அப்படியே தொடர்ந்து வந்தது. ஜெல்லி பீன் இன் மூன்று பதிப்புகளும் செயலில் உள்ள Android சாதனங்களில் எண்ணிக்கை என்று பார்த்தால், இது 1% க்கும் குறைவாகவே உள்ளது. இவை உண்மையில் பயன்பாட்டில் உள்ளது என்று கூகிள் நம்பவில்லை. எந்த வகையிலும், இந்த ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கான ஆதரவை இது முடிவுக்குக் கொண்டுவரும்.

இது மேம்பாட்டுக் குழுவின் சுமையை குறைக்குமா? உண்மையா? காரணம் என்ன?

இது மேம்பாட்டுக் குழுவின் சுமையை குறைக்குமா? உண்மையா? காரணம் என்ன?

குறிப்பாக இது கூகிள் நிறுவனத்தின் ஜெல்லி பீன் மேம்பாட்டுக் குழுவின் சுமையை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் பழைய வெர்ஷன்களுக்கு தான் நிறைய சிறப்பு-கையாளுதல் தேவைப்படுகிறது என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயன்பாட்டு டெவலப்பர்கள் ஜெல்லி பீனுக்கான ஆதரவையும் கைவிட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ரூ. 4999 விலையில் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க வாய்ப்பு..ஆனா டிவிஸ்ட் மேல டிவிஸ்ட் இருக்கு..கொஞ்சம் உஷார்..ரூ. 4999 விலையில் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க வாய்ப்பு..ஆனா டிவிஸ்ட் மேல டிவிஸ்ட் இருக்கு..கொஞ்சம் உஷார்..

ஜெல்லி பீன் பயனர்களுக்கான தீர்வு இது தான்

ஜெல்லி பீன் பயனர்களுக்கான தீர்வு இது தான்

API வெர்ஷன் 19+ ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் ஐ இலக்காகக் கொண்டு அவர்கள் பயன்பாடுகளை அமைத்தால், ஜெல்லி பீன் கீழ் இயங்கும் தொலைப்பேசிகள் இன்னும் பயன்பாட்டின் பழைய வெர்ஷன்களை நிறுவ முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், அவை புதிய புதுப்பிப்புகளை இவர்கள் பயன்படுத்த முடியாது என்பதே உண்மை. இதனால் Android 4.1 முதல் 4.3 சாதனங்கள் வரை அனைத்து பயனர்களும் பயன்பாட்டு புதுப்பிப்புகளைப் பெறலாம்.

Best Mobiles in India

English summary
Google will soon stop updating Play Services for phones running Android Jelly Bean : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X