விட்றாதீங்க.. இந்த வாரம் தான் கடைசி... உங்க Gmail ID-ஐ காப்பாத்திக்கோங்க.. இல்லனா?
கூகுள் நிறுவனத்தில் இலவச சேவைகளை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது யூடியூப் (YouTube), கூகுள் டிரைவ் (Google Drive), கூகுள் மேப்ஸ் (Google Maps), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இலவசமாக பயன்படுத்த முடியும்.
குறிப்பாக இந்த கூகுள் சேவைகளை பயன்படுத்தக் கண்டிப்பாக ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் தேவைப்படும். அதேபோல் கூகுள் நிறுவனம் இந்த ஜமெயில் வசதியில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. பின்பு ஜிமெயில் சேவையில் பாதுகாப்பு வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

அதேபோல் கூகுள் நிறுவனம் தனியுரிமை கொள்கைகளை அவ்வப்போது புதுப்பித்து வருகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக லாகின் (log in) செய்யப்படாமல் அல்லது பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஜிமெயில் அக்கவுண்ட்களை(கணக்குகளை) நீக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம். மேலும் இது சார்ந்த விவரங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது போன்கள் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களை ஓப்பன் செய்துவிட்டு, அதைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூகுள் நிறுவனம் ஜிமெயில் டெலிட் பாலிசியை (Gmail Delete Policy) கொண்டு வந்துள்ளது.
அதன்படி வரும் டிசம்பர் மாதத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் வைத்திருக்கும் ஜிமெயில் அக்கவுண்ட்களை டெலிட் செய்யும் பணி தொடங்கும் என்று கூகுள் நிறுவனம் கூறி இருந்தது. தற்போது வெளியான தகவலின்படி, வரும் டிசம்பர் தொடக்கத்தில் அதாவது அடுத்த வாரம் முதல் 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் அக்கவுண்ட்களை டெலிட் செய்ய உள்ளது கூகுள் நிறுவனம்.
குறிப்பாக நீங்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாமல் வைத்திருக்கும் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டால், அதில் இருக்கும் முக்கியமான மின்னஞ்சல்கள், டாக்ஸ், கோப்புகள், டிரைவ், ஃபைல்கள், யூடியூப் சேனல்கள், கூகுள் ஃபோட்டோஸ் போன்றவைகளும் உங்கள் கைவிட்டுப் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை உங்களிடம் பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்கு (அக்கவுண்ட்) இருந்தால் அதை நீக்குவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். முதலில் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும் அல்லது அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களைப் படிக்க வேண்டும். அடுத்து கூகுள் தளங்களைப் பயன்படுத்த வேண்டும். அதாவது கூகுள் ட்ரைவ், போட்டோஸ், யூடியூப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யலாம். பின்பு உங்களது கணக்கில் நுழைந்து யூடியூப் வீடியோவைப் பார்த்து அதற்கு கமெண்ட் செய்யலாம். மேலும் மூன்றாம் தரப்பு தளங்களில் உங்களது கூகுள் கணக்குகளை Sign In செய்யலாம். குறிப்பாக இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தினால் கூகுள் கணக்கை ஆக்டிவாக வைத்திருக்க முடியும்.

நீங்கள் இரண்டு ஆண்டுகளாக உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தாவிட்டாலும், உங்களது கணக்கின் மூலம் ஏற்கனவே ஏதேனும் கூகுள் ப்ளே சந்தா திட்டம் செயல்பாட்டில் இருந்தால் கூகுள் நிறுவனம் உங்களது கணக்கை நீக்காது. அதேபோல் இனிமேல் இந்த பழைய கணக்கு எனக்குத் தேவை இல்லை என்று நினைப்பவர்கள் மட்டும், தங்கள் கூகுள் கணக்குகளை அப்படியே விட்டுவிடலாம். மற்றவர்கள் உடனடியாக தங்கள் கணக்குகளை ஆக்டிவ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இந்த புதிய கொள்கை தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பள்ளிகள், கல்லூரிகள் அல்லது வணிகங்கள் போன்ற நிறுவனங்களுக்கான கணக்குகளை இது எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








