2 மாதங்கள் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தவில்லையா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

By Siva
|

நீங்கள் ஆண்ட்ராய்டு பேக்கப் செய்யும் வழக்கத்தை கொண்டவரா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. உங்கள் போன் 60 நாட்களுக்கு எந்தவித இயக்கமும் இல்லாமல் இருந்தால் அதில் உள்ள ஆண்ட்ராய்டு பேக்கப் தானாகவே அழிந்துவிடும். கூகுளின் இந்த நடவடிக்கை குறித்து உங்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் தராமல் எடுக்கும் நடவடிக்கை என்பது ஒரு சோகமான விஷயம்

2 மாதங்கள் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தவில்லையா? உங்களுக்கு ஒரு அதிர்ச்

ரெடிட் என்ற சமூக வலைத்தள பயனாளி ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை இதுகுறித்து பகிர்ந்துள்ளார். தன்னுடைய ஆண்ட்ராய்டு போனை அவர் இரண்டு மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்ததாகவும், எனவே அவருடைய ஆண்ட்ராய்டு பேக்கப் அனைத்தும் டெலிட் ஆகிவிட்டதாகவும் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

டெலிட் ஆவது செயலிகள் மற்றும் செட்டிங்ஸ்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுள் எந்தவித முன்னெச்சரிக்கை தகவலும் கொடுக்காமல் டெலிட் செய்தது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து கூகுள் டிரைவ் கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டு கேட்டபோது, டெலிட் செய்யப்பட்ட பேக்கப்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லை என்ற பதிலைத்தான் பெற்றுள்ளார்

3340எம்ஏஎச் பேட்டரியுடன் ஹவாய் மாய்மங் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!3340எம்ஏஎச் பேட்டரியுடன் ஹவாய் மாய்மங் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒரு போன் இரண்டு வாரங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் உடனே கூகுள் டிரைவ், பேக்கப்புக்கு கீழே காலாவதி ஆகும் தேதியை குறிப்பிடும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டு பின்னர் சரியாக 60 நாட்கள் முடிந்தவுடன் பேக்கப் டெலிட் செய்யப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருக்கும் பெரும்பாலானோர் தற்போது கூகுள் டிரைவில் பேக்கப் வைக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இது ஒரு எளிமையான வசதியாக இருப்பதால் பலரும் இதை விரும்புகின்றனர்.

அதேபோல் கூகுள் டிரைவில் இருந்து வேறு இடத்திற்கும் மாற்றுவது எளிது என்பதால் அனைவருக்கும் வரப்பிரசாதமாக இருக்கும் இந்த வசதி இரண்டு மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் மறைந்துவிடும் என்பது நிச்சயம் ஒரு சோகமான விஷயமே. எனவே ஆண்ட்ராய்டு பேக்கப் உள்ளவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் பயன்படுத்தாமல் இருப்பதை தவிர்ப்பது ஒன்றே இதற்கு சரியான வழியாகும்

Best Mobiles in India

Read more about:
English summary
Google will automatically delete the Android backups after two months of inactivity of the device.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X