Home
News

என்ன நடந்தாலும்.. யார் சொன்னாலும்.. Google Pay யூஸ் பண்ணும் போது இதை செஞ்சிடாதீங்க.. கூகுள் எச்சரிக்கை!

கூகுள் பே (Google Pay) - நாட்டில் மிகவும் பிரபலமான யுபிஐ பேமெண்ட் ஆப்களில் (UPI Payment Apps) ஒன்றாகும். சந்தைப் பங்கின் (Market share) அடிப்படையில், இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் டாப் 5 யுபிஐ ஆப்களில் கூகுள் பேவும் ஒன்றாகும்.

இந்திய மக்கள் மத்தியில் கூகுள் பே ஆப்பிற்கு இருக்கும் இந்த செல்வாக்கிற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு கூகுள் பே ஆப் மீது இருக்கும் நம்பிக்கை தான். இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருப்பது கூகுளின் செயற்கை நுண்ணறிவு (Google's Artificial Intelligence) மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பமும் (Fraud prevention technology) தான். இது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை நிகழ்நேரத்தில் அடையாளம் காண உதவுகிறது.

Google Pay யூஸ் பண்ணும் போது இதை செஞ்சிடாதீங்க.. கூகுள் எச்சரிக்கை!

"எங்களுடைய பயனர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்க மற்ற தொழில்துறையினருடன் நாங்கள் தீவிரமாக செயல்படுகிறோம்" என்று கூறும் கூகுள் நிறுவனமானது, கூகுள் பே பயனர்களும் கூட மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்க அல்லது பரிந்துரைகளை வழங்க ஒருபோதும் மறப்பதில்லை!

அப்படியாக சமீபத்தில் கூகுள் நிறுவனம், கூகுள் பே பயனர்கள் ஒருபோதும் செய்யவேக்கூடாத சில விஷயங்களை அதன் இணையதளம் வழியாக பகிர்ந்தது. அதில் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை பற்றித்தான் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். அதென்ன விஷயம்? அதை ஏன் செய்யவே கூடாது? மீறி செய்தால் என்னவெல்லாம் நடக்கலாம்? இதோ விவரங்கள்:

Google Pay யூஸ் பண்ணும் போது இதை செஞ்சிடாதீங்க.. கூகுள் எச்சரிக்கை!

கூகுள் பே ஆப்பை பயன்படுத்தும் பயனர்கள் செய்யவே கூடாத ஒரு விஷயம் என்னவென்றால்.. கூகுள் பே ஆப்பில் பின் நம்பரை (PIN Number) டைப் செய்யும் போதும், அதில் பணப்பரிவர்த்தனைகளை (Transactions) செய்யும் போதோ, ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்களை (Screen Sharing Apps) பயன்படுத்தவே கூடாது.

அதுமட்டுமல்ல கூகுள் பே ஆப்பை பயன்படுத்தும் போது, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா வகையான ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்களும் க்ளோஸ் ஆகி இருப்பதையும் நீங்கள் உறுதி செய்யவேண்டும். மிகவும் பிரபலமான சில ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்களை பொறுத்தவரை, ஸ்கிரீன் ஷேர் (Screen Share), ஏனிடெஸ்க் (AnyDesk) மற்றும் டீம்வியூயர் (TeamViewer) போன்ற ஆப்களை கூறலாம்.

Google Pay யூஸ் பண்ணும் போது இதை செஞ்சிடாதீங்க.. கூகுள் எச்சரிக்கை!

ஸ்கிரீன் ஷேரிங் ஆப்ஸ் என்றால் என்ன? இரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.. நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது, அந்த டிவைஸின் ஸ்க்ரீனில் என்ன இருக்கிறது? நீங்கள் அதில் என்ன செய்கிறீர்கள் என்பதை (வீடியோ வடிவில்) பிறர் பார்க்க அனுமதிக்கும் ஆப்களே, ஸ்கிரீன் ஷேரிங் ஆப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆப்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் அல்லது லேப்டாப்பில் உள்ள சிக்கல்களை, தொலை தூரத்தில் இருந்தபடியே சரி செய்ய இப்போதும் பயன்படுகிறது. இருப்பினும் இதேபோன்ற ஸ்கிரீன் ஷேரிங் ஆப்களை வைத்து தான் மோசடி செய்பவர்கள் உங்கள் பணத்தை, உங்களை பற்றிய விவரங்களை, உங்களுடைய பாஸ்வேர்ட்களை திருடுகின்றன.

தேவையான விவரங்களை திருடிய பின்னர், உங்கள் ஸ்மார்ட்போனை கண்ட்ரோல் செய்து பணப்பரிவர்த்தனைகளை செய்து கொள்வார்கள். உங்கள் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு விவரங்களையும் அணுகுவார்கள். உங்களுக்கு அனுப்பப்பட்ட ஒடிபி-ஐ (OTP) பயன்படுத்தி உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்வார்கள்.

இப்படி பலவகையான சிக்கல்களை / பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ளவீர்கள். எனவே எந்தவொரு காரணத்திற்காகவும் சந்தேகத்திற்கு இடமான மூன்றாம் தரப்பு ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்களை டவுன்லோட் செய்ய வேண்டாம்; பயன்படுத்த வேண்டாம். ஒருவேளை பதிவிறக்கியிருந்தால், கூகுள் பே ஆப்பை பயன்படுத்துவதற்கு முன், அவைகள் க்ளோஸ் செய்யப்பட்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.

மேலும் யாராவது தங்களை கூகுள் பேவின் பிரதிநிதி என்று கூறி, போலியான கூகுள் பே ஆப்பை பதிவிறக்குமாறு உங்களை கேட்டு இருந்தால்.. அதை நம்பி ஏதேனும் ஒரு லிங்க் வழியாக கூகுள் பே போன்ற ஆப்பை நீங்கள் இன்ஸ்டால் செய்து இருந்தால், அதை உடனே அன்இன்ஸ்டால் செய்யவும். எப்போதுமே கூகுள் பிளே ஸ்டோர் வழியாக அதிகாரப்பூர்வமான ஆப்களை மட்டுமே பதிவிறக்கம் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Warns Google Pay Users to Not Use Screen Sharing apps Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X