Home
News

சரியான நேரத்தில் எச்சரிக்கை வெளியிட்ட Gmail.. இதை மட்டும் தொடவே தொடாதீங்க.. ஏன்?

உலகம் முழுவதும் அதிக மக்கள் ஜிமெயில் (Gmail) சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் மாணவர்கள், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், முதியவர்கள் என அனைவரும் ஜமெயில் கணக்கை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜிமெயில் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வாட்ஸ்அப் மூலம் நடக்கும் மோசடி குறித்த எச்சரிக்கை கடந்த வாரம் வெளியான நிலையில், அதேபோன்ற எச்சரிக்கையை ஜிமெயில் தற்போது வெளியிட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், ஜிமெயில் பயனாளர்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் எச்சரிக்கை வெளியிட்ட Gmail..

அதேபோல் மோசடிகளிலிருந்து தப்பிக்க சில வாழிகாட்டுல்களை ஏற்படுத்தி அது குறித்து பயனர்களுக்கு விழிப்புணர்வையும் ஜிமெயில் ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது கூகுள் (Google) வெளியிட்டுள்ள பதிவில், ஜிமெயிலின் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு மிகவும் நன்றி. கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் 35 சதவீதம் மோசடிகள் குறைந்துள்ளது.

மேலும் இந்த தொழில்நுட்பம் மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு முன்பு இன்பாக்ஸில் வந்து குவியும் மோசடி மெயில்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இதுபோன்ற அபாயகரமான மின்னஞ்சல்கள் இன்பாக்ஸை அடைவதற்கு முன்பே தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பிஷ்ஷிங் மோசடி, பரிசு விழுந்ததாக வரும் மின்னஞ்சல்கள், உங்கள் ஆர்டரை உறுதி செய்வதற்காக என்று வரும் மின்னஞ்சல்கள், பொருள்களை டெலிவரி செய்வது தொடர்பான போலி மின்னஞ்சல், எதாவது நிறுவனத்தின் பெயரில் விலை மதிப்புள்ள பொருளை டெலிவரி செய்வதற்கான உறுதிப்படுத்துதல் போன்ற வரும் மின்னஞ்சல்கள் ஆகியவற்றை மக்கள் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம். ஒருவேளை திறந்தாலும் அதில் உள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற போலி மின்னஞ்சல்களில் லிங்குகள் போன்களில் அல்லது லேப்டாப்பில் உள்ள முக்கிய ஆவணங்கள் அல்லது பணத்தைத் திருட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் தற்போது ஜிமெயிலில் மோசடி மின்னஞ்சல்களை வடிகட்டும் (Spam filters) வசதியும் உள்ளது. இந்த வசதி பல
சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் வரும் போது "இந்தச் செய்தியில் கவனமாக இருங்கள்" அல்லது "வெளிப்புற அனுப்புநர்" போன்ற எச்சரிக்கைகள் தெளிவாகக் காண்பிக்கும்.

மேலும் டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் (Two-factor authentication) பாதுகாப்பை ஜிமெயிலை திறக்க பயன்படுத்துங்கள். இதனால் பாஸ்வேர்டை ஒருவர் தெரிந்துகொண்டாலும் அதனை திறக்க முடியாது. அதாவது யாராவது உங்கள் ஜிமெயில் கணக்கை திறக்க நினைத்தால் இந்த பாதுகாப்பு அம்சம் மூலம் தடுத்துவிடலாம்.

சரியான நேரத்தில் எச்சரிக்கை வெளியிட்ட Gmail..

அதேபோல் ஜிமெயில் சேவையில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது, பின்பு நமது நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது என்பது தான் உண்மை. மேலும் அடுத்த ஆண்டும் ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய அம்சங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஜிமெயிலுக்குப் போட்டியாக எலான் மஸ்க் புதிய எக்ஸ்-மெயில் சேவையைக் கொண்டுவர உள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் 'விரைவில் X mail' அறிமுகமாகும். என்னுடைய செயல் திட்டங்களில் இது ஒன்று என்று பதிவிட்டிருக்கிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google warns Gmail users about these holiday scams that can steal money: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X