Home
News

சொந்த காசுல சூனியம் வச்சிடாதீங்க.. பதறும் சுந்தர் பிச்சை.. Google ஊழியர்களுக்கு பறந்த திடீர் எச்சரிக்கை!

"சொந்த காசுல சூனியம் வச்சிடாதீங்க" என்று கதறும்படியாக, கூகுள் (Google) நிறுவனமானது தனது ஊழியர்களுக்கு திடீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆயிரம் தான் இருந்தாலும், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) என்று வரும்போது கூகுளுக்கும் கூட ஒரு மரண பீதி இருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

கூகுள் நிறுவனம் தன்னை ஏஐ-ஃபர்ஸ்ட் கம்பெனி (AI-First Company) என்று, அதாவது ஏஐ தொழில்நுட்பத்தின் முன்னோடி என்று பெருமையாக அழைக்கும் அதே வேளையில், தனது ஊழியர்களுக்கு ஏஐ சாட்பாட்களை பயன்படுத்துவது (AI Chatbot Usage) தொடர்பான கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

சொந்த காசுல சூனியம் வச்சிடாதீங்க.. Google ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

இதில் கொடுமை என்னவென்றால், ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (OpenAI ChatGPT), மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிங் (Microsoft Bing) போன்ற ஏஐ சாட்பாட்களை மட்டுமின்றி கூகுளின் சொந்த ஏஐ சாட்பாட் ஆன பார்ட்-ஐ (Google Bard) பயன்படுத்துவது குறித்தும், கூகுள் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூகுளின் 'பேரண்ட் கம்பெனி' ஆன ஆல்பபெட் (Alphabet), ஏஐ சாட்பாட்களுடன் எந்த விதமான ரகசிய தகவலையும் (Confidential information) பகிர வேண்டாம் என்று தனது ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தின் என்ஜினீயர்கள், சாட்பாட்களால் உருவாக்கப்பட்ட கோட்டிங்-ஐ (Code Generated by Chatbots) பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதாவது முக்கியமான தரவுகளை பாதுகாப்பதற்கான நிறுவனத்தின் நீண்டகால கொள்கையை (Protect sensitive data policy), கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி உள்ளது. ஏஐ-ஆல் பெறப்பட்ட தகவல்கள், வேறு யாருடைய கேள்விக்கான பதிலாக கொடுக்கப்படும் பட்சத்தில், அது டேட்டா லீக் (Data Leak) சிக்கலை ஏற்படுத்தும் என்பதே கூகுளின் முக்கிய அச்சமாகும்.

நினைவூட்டும் வன்ணம், கடந்த பிப்ரவரியில், கூகுள் பார்ட் ஆனது சோதனை கட்டத்தில் (Testing Stage) இருக்கும்போது அதனுடன் எந்தவகையான இன்டர்னல் தகவலையும் (Internal information) பகிர வேண்டாம் என்று கூகுள் ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்போது ​பார்ட், உலகளவில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் மற்றும் 40 மொழிகளில் அணுக கிடைக்கிறது. இருப்பினும் கூகுள் ஊழியர்கள் இன்னமும் கட்டப்படுத்தப்படுகின்றனர்.

இதன் மூலம் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுடபத்தின் நிலையற்ற தன்மையை வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் ஏஐ சாட்பாட்களுக்கு முக்கியமான தரவுகளை வழங்க வேண்டாம் என்று தனது ஊழியர்களை எச்சரிக்கையாக ஒரே நிறுவனம் கூகுள் மட்டும் அல்ல. ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) மற்றும் அமேசான் (Amazon) உள்ளிட்ட நிறுவனங்களும் இதை செய்துள்ளனர்.

மைக்ரோசாப்டின் கன்ஸ்யூமர் சிஎம்ஓ-வான யூசுப் மெஹ்தி (Yusuf Mehdi), "பப்ளிக் சாட்போட்களை (Public chatbots) வேலை செய்யும் இடங்களில் பயன்படுத்துவதை, நிறுவனங்கள் ஊக்கப்படுத்தாமல் இருப்பது நியாயமானது தான்" என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் மைக்ரோசாப்டின் இலவச பிங் சாட்போட் (Free Bing chatbot) ஆனது மிகவும் தளர்வான கொள்கைகளை கொண்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்திஉள்ளார்

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கூகுள் நிறுவனமானது, ஐரோப்பிய ஒன்றியத்தில் பார்ட்-ஐ அறிமுகம் செய்வதில் (Bard Launch inEuropean Union) தொடந்து சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதன் மூலம், இந்த வாரம் நடக்கவிருந்த கூகுள் பார்ட் வெளியீடு ஆனது கட்டாயத்தின் பெயரில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

அயர்லாந்தின் டேட்டா பாதுகாப்பு ஆணையமானது (Data Protection Commission), ப்ரைவஸியில் சாட்பாட்டின் தாக்கம் (Chatbot's Impact on Privacy) குறித்து கூகுளிடம் விளக்கம் கேட்டுள்ளது. கூகுள் பார்ட் மீதான சந்தேகங்களை மற்றும் கேள்விகளை விரைவில் நிவர்த்தி செய்வதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Warns Employees to not share Confidential information with AI chatbots including Bard ChatGPT
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X