உடனுக்குடன் லோன்.. உடனுக்குடன் ஆப்பு.. இந்த 15 ஆப்ஸை நம்பி லோன் வாங்காதீங்க.. வார்னிங் கொடுத்த Google..
இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 700 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் (smartphone) பயனர்கள் இருக்கிறார்கள். இவர்களின் 425 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் நம்முடைய வாழ்க்கையை பல வழிகளில் எளிமைப்படுத்தியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோல், ஸ்மார்ட்போன் வழியாக பெருகும் டிஜிட்டல் ஆபத்துகள் மற்றும் மோசடிகளை (digital scams and dangers) மக்கள் தினசரி சந்தித்து வருகிறார்கள் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. அப்படி சமீபத்தில் வெளியான 'இன்ஸ்டன்ட் லோன் ஆப்ஸ்' (Instant loan apps) தகவலால் ஒட்டுமொத்த இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் பீதியில் உறைந்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் லோன் (loan) வாங்க வேண்டுமென்றால், வங்கி வங்கியா (bank to bank) ஏறி, இறங்கி, பல ஆவணங்களை சமர்ப்பித்து, பிறகு செக்யூரிட்டி கையெழுத்து (security signature), பக்கத்து வீட்டுக்காரன் கையெழுத்து, எதிர்வீட்டுக்காரன் கையெழுத்து என்று பலருடைய கையெழுத்தை நாமினியாக வாங்கிய பிறகு தான் லோன் கிடைக்கும். லோனிற்காக அலைந்து திரிந்த காலம் இப்போது மாறி, மக்கள் வீட்டில் இருந்தபடி மொபைல் போன் (mobile phone) மூலமாகவே லோன் வாங்கும் செயல்முறை இப்போது பெருகிவிட்டன.

உடனுக்குடன் லட்சக் கணக்கில் லோன்.. உடனுக்குடன் மெகா சைஸ் ஆப்பு.. இந்த 15 ஆப்ஸை நம்பி லோன் வாங்காதீங்க:
இந்த செயல்முறை இப்போது மோசடிக்காரர்கள் மற்றும் ஏமாற்றுக்காரர்களுக்கு (hackers and scammers) சாதகமான மோசடி (scam) வழியை உருவாக்கியுள்ளது. மொபைல் ஆப்ஸ் மூலமாக (fake loan apps) உடனுக்குடன் லட்சக்கணக்கில் லோன் பெரும் வசதி இப்போது நடைமுறையில் உள்ளது. பொதுமக்களுக்கு பணத்தேவை நாளுக்கு நாள் அதிகமாகிறது. டாக்குமெண்ட் தேவையில்லை, PAN தேவையில்லை, CIBIL ஸ்கோர் தேவையில்லை என்று எந்தவித ஆவணமும் இல்லாமல் லோன் (no document instant loans) தருவதினால் மக்கள் கூட்டம் கூட்டமாக இன்ஸ்டன்ட் லோன்களை எடுக்க முயல்கிறார்கள்.
இந்த இன்ஸ்டன்ட் லோன் (Instant loans) தளத்தை மோசடிக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, தற்போது மக்களின் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருடி வருகிறார்கள். பணத்தை திருடுவது ஒரு புறம் நடக்க, மற்றொரு புறம், மக்களின் ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய தகவல்களை திருடி அதை டார்க் நெட்டில் (dark web net) விற்பனை செய்கிறார்கள். மற்றொரு மோசமான கும்பல் மக்களின் ஸ்மார்ட்போனிற்குள் இன்ஸ்டன்ட் லோன் ஆப்ஸ் வழியாக நுழைந்து போனில் உள்ள புகைப்படங்களை திருடி அவர்களை மிரட்டி பணம் (blackmailing mobile users with photos) பறிக்கிறார்கள்.
Google நிறுவனம் மற்றும் இந்திய அரசாங்கம் இணைத்து வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு:
இந்த மோசடி தற்போது இந்தியாவில் பெரியளவில் நடக்கிறது என்பதனால், அரசாங்கமும், கூகுள் (Google) நிறுவனமும் ஒன்று சேர்ந்து நம்மை எச்சரித்துள்ளது. குறிப்பாக, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக 8 மில்லியன் பயனர்கள் பதிவு செய்துள்ள போலியான லோன் தரும் ஆப்ஸ்களை (Fake loan apps) கூகுள் அடையாளம் கண்டு, அவற்றை உடனே உங்கள் போனில் இருந்து டெலீட் (delete these 15 fake loan apps) செய்யும்படி எச்சரித்துள்ளது. கீழே காணப்படும் 15 மொபைல் ஆப்ஸ்களில் ஏதேனும் ஒன்று உங்கள் போனில் இருந்தால் கூட, அதை உடனே டெலீட் செய்யவும்.
1. Préstamo Seguro-Rápido, seguro
2. Préstamo Rápido-Credit Easy
3. ได้บาทง่ายๆ-สินเชื่อด่วน
4. RupiahKilat-Dana cair
5. ยืมอย่างมีความสุข - เงินกู้
6. เงินมีความสุข - สินเชื่อด่วน
7. KreditKu-Uang Online
8. Dana Kilat-Pinjaman kecil
9. Cash Loan-Vay tiền
10. RapidFinance
11. PrêtPourVous
12. Huayna Money
13. IPréstamos: Rápido
14. ConseguirSol-Dinero Rápido
15. ÉcoPrêt Prêt En Ligne
விளம்பரங்களில் இருந்து தானாக போலி லோன் ஆப்ஸ் டவுன்லோட் ஆகுமா?
இந்த ஆப்ஸ்களில் சில லோன் ஆப்ஸ்களின் பெயர்களை கூட நம்மால் புரிந்துகொள்ள முடியாத வகையில் இவை உருவாக்கப்பட்ட அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆப்ஸ்களை நாங்கள் ஏன் டவுன்லோட் (apps download) செய்ய போகிறோம் என்று சிலர் கேள்வி எழுப்பிவீர்கள். இதை நீங்கள் டைப் செய்து டவுன்லோட் செய்ய போவதில்லை. உங்கள் தேவையை அறிந்த மோசடிக்காரர்கள் விளம்பரங்கள் (ads) மூலம் உங்கள் போனிற்குள் நுழைந்து, சிங்கிள் கிளிக் இல் இந்த ஆப்ஸை உங்கள் அனுமதியின்றி உங்கள் போனில் டவுன்லோட் செய்துவிடுவார்கள்.
டாக்குமெண்ட் தேவை இல்லை, PAN தேவை இல்லை, CIBIL ஸ்கோர் தேவை இல்லை, உங்களுக்கு எத்தனை லட்சம் பணம் வேண்டுமானாலும் உடனுக்குடன் பணம் தருகிறோம், இன்ஸ்டன்ட் லோன் இப்போது உங்கள் கையில், சிங்கிள் கிளிக் இல் தொகை உங்கள் போனிற்கு வரும் என்று ஆசை வார்த்தைகளை கூறி ஒரு சில விளம்பரங்கள் மூலம் உங்களை கவர்வர்கள். இத்தகைய விளம்பரங்கள் மற்றும் அதன் வழி வரும் லிங்க்-களை (links) கிளிக் செய்ய வேண்டாம் என்று கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications