Home
News

Google Wallet vs Apple Wallet: பாக்கெட்ல டிஜிட்டல் பாஸ்போர்ட்.. எப்படி வேலை செய்கிறது?

உலகின் மிகப்பெரும் டெக் நிறுவனங்களான கூகுள் (Google) மற்றும் ஆப்பிள் (Apple) அவற்றின் வாலெட்களில் டிஜிட்டல் பாஸ்போர்ட் அணுகல்களை கொடுக்கின்றன. உங்களது பாஸ்போர்ட்டை டிஜிட்டலாக மாற்றி அதை விமானி நிலையங்களில் அடையாள சரிபார்ப்புக்கு (Identity Verification) பயன்படுத்தினால், எப்படி இருக்கும்? அதேபோல லக்கேஜ் டிராக்கிங் மற்றும் டெர்மினல் டிராக்கிங்கை மேப் மூலம் செய்ய முடிந்தால், இன்னும் சுலபமாக இருக்கும் அல்லவா? இதுபோன்ற பீச்சர்களே வாலெட்களில் கிடைக்கின்றன.

டிஜிட்டல் பாஸ்போர்ட் முக்கிய அம்சங்கள்:
* உள்நாட்டு விமான பயணங்களுக்கு மட்டும்
* டிஎஸ்ஏ செக்பாய்ன்ட்களில் மட்டும் வெரிபிகேஷன்
* உள்நாட்டு ஐடிகளுக்கு டிஜிட்டல் சப்போர்ட்
* ஃபிங்கர்பிரிண்ட், பின் நம்பர், பாஸ்கோட் பாதுகாப்பு

Google Wallet vs Apple Wallet: பாக்கெட்ல டிஜிட்டல் பாஸ்போர்ட்! எப்படி?

கூகுள் வாலெட் ஐடி பாஸ் (Google Wallet ID Pass):
கூகுள் நிறுவனமானது, முதலில் பாஸ்போர்ட் சேவையை டிஜிட்டலுக்கு மாற்றியது. கூகுள் வாலெட் மூலம் அமெரிக்க பாஸ்போர்ட்டை (US Passport) பயன்படுத்தி ஐடி பாஸ் (ID Pass) உருவாக்கி கொள்ளலாம். இந்த ஐடி பாஸ் இருந்தால் போதும், டிஎஸ்ஏ செக்பாய்ன்ட்களில் (TSA Checkpoints) வெரிபிகேஷன் செய்துகொள்ளலாம்.

ஸ்டேட் ஐடி (State ID), டிரைவர் லைசென்ஸ் (Driver License) போன்ற ஆவணங்கள் தேவைப்படாது. ஆனால், இது பாஸ்போர்ட்டுக்கு மாற்று கிடையாது. இருப்பினும், விமான நிலையங்களில் இது அங்கீகரிக்கப்படும். 2024ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்காவின் உள்நாட்டு விமான பயணங்களுக்கு இந்த ஐடி பாஸ் சேவை தொடங்கப்பட்டது.

Google Wallet vs Apple Wallet: பாக்கெட்ல டிஜிட்டல் பாஸ்போர்ட்! எப்படி?

கடந்த ஏப்ரல் மாதத்தில் யுகேவிலும் (UK) தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, கூகுள் வாலெட் சேவை கிடைக்கும் நாடுகளில் இந்த ஐடி பாஸ் பீச்சர்கள் படிப்படியாக கொண்டுவரப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இது சர்வதேச விமான பயணங்களுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரியவில்லை. உள்நாட்டில் மட்டுமே சேவைகளை கொடுக்கிறது.

ஆப்பிள் வாலெட் டிஜிட்டல் ஐடி (Apple Wallet Digital ID):
கூகுள் நிறுவனத்தை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ் 26 அப்டேட்டில் டிஜிட்டல் ஐடி (Digital ID) பீச்சரை களமிறக்கியது. ஆப்பிள் வாலெட் மூலம் (Apple Wallet) மூலம் அமெரிக்கா பாஸ்போட்டை வைத்து டிஜிட்டல் ஐடி உருவாக்க முடியும். இதை ஐபோன்கள் (iPhone) மற்றும் ஆப்பிள் வாட்ச்களில் (Apple Watch) பயன்படுத்தலாம்.

Google Wallet vs Apple Wallet: பாக்கெட்ல டிஜிட்டல் பாஸ்போர்ட்! எப்படி?

இந்த டிஜிட்டல் ஐடியையும் உள்நாட்டிலேயே விமான பயணம் மேற்கொள்ளும்போது டிஎஸ்ஏ செக்பாய்ன்ட்களில் வெரிபிகேஷனுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், ஆப்பிள் நிறுவனமானது, ஐஓஎஸ் 26 அப்டேட்டில் கூடுதலாக பல்வேறு பீச்சர்களை சேர்த்துள்ளது. போர்டிங் பாஸ் மூலம் லைவ் டிாராக்கிங் கொடுக்கிறது.

ரியல்டைம் டிராக்கிங் (Real-time Tracking):
அதாவது, போர்டிங் பாஸ் ஸ்கேனிங் மூலம் உங்களது விமான பயணத்தை ரியல்-டைம்மில் டிராக் செய்ய முடியும். அந்த ஆக்டிவிட்டிகளை உங்களது பேமிலி அல்லது நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம். அவர்களும் நீங்கள் சென்று கொண்டிருக்கும் விமானம் எங்கே இருக்கிறது என்பதை மேப் மூலம் டிராக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

இதுபோக விமான நிலையத்தில் உங்களது லக்கேஜ் டெலிவரி செய்யப்படும் இடத்தை தெரிந்துகொள்ள டிராக் லக்கேஜ் (Track Luggage) பீச்சர் கிடைக்கிறது. அதேபோல நீங்கள் செல்ல வேண்டிய டெர்மினலுக்கான மேப் சேவையும் இதில் கிடைக்கிறது. ஆகவே, ஆப்பிள் வாட்ச் அல்லது ஐபோன் மூலம் குழப்பம் இல்லாமல், அங்கு செல்லலாம்.

Google Wallet vs Apple Wallet: பாக்கெட்ல டிஜிட்டல் பாஸ்போர்ட்! எப்படி?

டிஜிட்டல் பாஸ்போர்ட் எதிர்காலம்:
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் மட்டுமே தொடங்கப்பட்டாலும், இது உள்நாட்டில் மட்டுமே டிஜிட்டல் பாஸ்போர்ட் சேவைகளை கொடுப்பதால், மற்ற நாடுகளிலும் வர வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், உள்நாட்டில் பயன்படுத்தப்படும். பாஸ்போஸ்ட் மற்றும் கூகுள் வாலெட்டுக்கான வெரிபிகேஷன் என்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.

ஆகவே, வெரிபிகேஷனுக்கு இதை பயன்படுத்துவது என்பது சிக்கலான காரியம் ஒன்றும். இல்லை, இந்தியாவில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும்போது, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஓட்டர் ஐடி போன்ற ஆவணங்கள் கேட்கப்படுகிறது. இது டிஜிலாக்கரிலும் இருக்கிறது. ஆகவே, கூகுள் வாலெட் அல்லது அதுபோன்ற ஆப்கள் மூலம் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Source 1 Source 2

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Wallet Vs Apple Wallet Digital Passports in Your Pocket How it works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X