Home
News

Google Wallet ஆப் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.. இத்தனை அம்சங்கள் இதில் இருக்கா?

கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் வாலெட் ஆப் (Google Wallet App) வசதியை அறிமுகம் செய்துள்ளது. டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிஃப்ட் கார்டுகள் போன்றவற்றைச் சேமிக்க அனுமதிக்கிறது கூகுள் வாலெட் ஆப்.

கூகுள் நிறுவனம் இன்று (புதன்கிழமை) தான் கூகுள் வாலெட் ஆப் ((Google Wallet) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்கள் பிளே ஸ்டோரில் கூகுள் வாலெட் ஆப் -ஐ டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். ஆனாலும் ஆப்பிள் ஐபோனுக்கு இந்த செயலி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Google Wallet ஆப் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது!

இப்போது கூகுள் வாலெட் ஆப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் கூகுள் பே செயலிக்கு எந்தவொரு பாதிப்பு இருக்காது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது வழக்கம் போல பணப்பரிவர்த்தனைகளுக்குச் செயல்படும். ஆனால் கூகுள் பே செயலியை விட சில கூடுதல் விஷயங்களைக் கூகுள் வாலெட் செயலி மூலமாக செய்ய முடியும். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

கூகுள் வாலெட் ஆப் அம்சங்கள் (Google Wallet features) : அதாவது இந்த கூகுள் வாலெட் ஆப் வசதியில் பின் பாதுகாப்பு (PIN protection) மற்றும் தொலைந்த போன அல்லது திருடப்பட்ட டிவைஸில் உள்ள சேவையைத் தொலைவிலிருந்தே முடக்கும் திறன் (Remotely disable the service) உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதேபோல் பயனர்கள் டெபிட் கார்டுகள் (Debit cards), கிரெடிட் கார்டுகள் (Credit cards), லாயல்டி கார்டுகள் (Loyalty cards) மற்றும் கிஃப்ட் கார்டுகள் (Gift cards) போன்றவற்றை இந்த கூகுள் வாலெட் அக்கவுண்டில் சேமித்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் வாலட்டைப் பயன்படுத்துபவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எளிதாக பணம் அனுப்புவது மட்டுமின்றி, மொபைல் எண், ஈமெயில் ஐடி பயன்படுத்தியும் பணம் அனுப்பலாம். அதேபோல் மற்றவர்களிடமிருந்தும் நேரடியாகக் கூகுள் வாலெட் கணக்கிற்குப் பணத்தைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இணையத்தில் ஏதேனும் பொருட்கள் வாங்கும்போது செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் இதன் மூலமாக எளிதாகிறது. மேலும் போன் பே, கூகுள் பே, பேடிஎம் செயலிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இந்த கூகுள் வாலெட். குறிப்பாக காண்டாக்ட் லெஸ் முறையில் இதன் மூலமாகப் பணம் செலுத்தலாம்.

Google Wallet ஆப் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது!

மேலும் கூகுள் பே ஆப் வழியாகச் செய்ய முடியாத சில விஷயங்களையும் கூகுள் வேலட் ஆப் வழியாக நம்மால் செய்ய முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த கூகுள் வேலட் ஆப் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கூகுள் பே ஆப் போன்றே இந்த கூகுள் வாலெட் ஆப் வசதிக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.

அதேபோல் கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Wallet app officially launched in India: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X