Home
News

முதல்ல சண்ட செய்யணும்.. 2025-ல் செம்ம சம்பவம் இருக்கு.. 2024-ல் ChatGPT-ஐ ஓடவிட்டதா Google Gemini ஏஐ!

2022 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, சாட்ஜிபிடி என்கிற ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டின் அசுர வளர்ச்சியானது (குறிப்பாக இந்தியாவில்) 2023 - 2024 ஆம் ஆண்டில்தான் நடந்தது. ஏனென்றால் கூகுள் நிறுவனம் ஓப்பன்ஏஐ நிறுவனத்திற்கும், அதன் சாட்ஜிபிடிக்கும் "எதிராக", "போட்டியாக" அதிகம் செயல்படத் தொடங்கியது 2024 இல் தான்!

அப்படியாக இந்த 2024 ஆம் ஆண்டில் கூகு ள் Vs ஓப்பன்ஏஐ (Google Vs OpenAI), பார்ட் Vs சாட்ஜிபிடி (Bard Vs ChatGPT), ஜெமினி Vs சாட்ஜிபிடி (Gemini Vs ChatGPT) என பல பரிமாணங்களில் நடந்த சில மிக முக்கியமான மாற்றங்களின் தொகுப்பே இது. 2024-ஆம் ஆண்டில் நடந்தவைகளை பார்ப்பதற்கு முன் 2023 இல் என்னென்ன நடந்தது என்பதன் சுருக்கம் இதோ:

2024-ல் ChatGPT-ஐ ஓடவிட்டதா Google Gemini ஏஐ!

ஏற்கனவே கூகுள் நிறுவனத்தை புலம்ப வைத்து கொண்டிருந்த சாட்ஜிபிடி இன்னும் பலமானது. பல முக்கிய மேம்படுகளுடன் சாட்ஜிபிடி 4 (ChatGPT 4) அறிமுகமானது. பழைய சாட்ஜிபிடி 3.5 வெர்ஷனுடன் ஒப்பிடும் போது புதிய வெர்ஷன் 5 முக்கியான வேறுபாடுகளை கொண்டிருந்தது.

சாட்ஜிபிடி 4 மற்றும் ஜிபிடி 3.5 ஆகியவற்றுக்கு இடையேயான மிகப்பெரிய அப்டேட் மற்றும் வேறுபாடு என்னவென்றால், சாட்ஜிபிடி 4-ஆல் படங்களை பார்க்கவும், புரிந்துகொள்ளவும் முடியும். அதாவது ஜிபிடி 4 ஆனது ஜிபிடி 3.5-ஐ போல் டெக்ஸ்ட்-ஐ மட்டுமின்றி இமேஜையும் இன்புட் ஆக எடுத்துக்கொள்ளும். ஆனாலும் டெக்ஸ்ட் வழியாகவே பதிலளித்தது.

ஜிபிடி 4 ஆனது ஜிபிடி 3.5-ஐ விட மிகவும் நம்பகமானதாக இருந்தது. மேலும் சாட்ஜிபிடி 4 பலவகையான மொழிகளுக்கான ஆதரவை பெற்றது. எல்லாவற்றை விட முக்கியமாக சாட்ஜிபிடி 3.5 உடன் ஒப்பிடும்போது ​​ஜிபிடி 4 ஆனது மிகவும் பாதுகாப்பானது மற்றும் ​​அனுமதிக்கப்படாத கன்டென்ட்டிற்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் போக்கை 82% குறைத்தது.

சாட்ஜிபிடி-யின் கோடிங் திறனுக்கு போட்டியாக பார்ட் ஏஐ சாட்பாட்டிற்கு (Bard AI Chatbot) புதிய அப்டேட் கிடைத்தது. இந்த அப்டேட்டின் கீழ் கூகுள் பார்ட் கோடிங் எழுதும் திறனை பெற்றது. அதாவது கூகுள் பார்ட் ஆனது சாட்ஜிபிடி-ஐ போலவே சாஃப்ட்வேரை (Software) உருவாக்க உதவும் கோட்டிங்கை எழுத மக்களுக்கு உதவியது.

கோட்டிங் எழுதுவது மட்டுமின்றி, கோட் ஸ்னிப்பெட்களை ஜெனெரேட் செய்வது (Generating code snippets) மற்றும் கோட்களை டீபக்கிங் ( Debugging code) செய்வது போன்றவைகளிலும் உதவும். இது ப்ரோகிராமிங் கற்றுக்கொள்ள தொடங்குபவர்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருந்தது. இது ஜாவா (Java), பைத்தான் (Python), ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) , சி++ (C++) உள்ளிட்ட 20 ப்ரோகிராமிங் லேங்குவேஜ்களுக்கான (Programming Languages) ஆதரவை வழங்கியது

சாட்ஜிபிடி-க்கு எதிராக கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வில் 6 முக்கியமான ஏஐ அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. முதல் மற்றும் முக்கியமான அம்சம் - ஜிமெயிலில் "ஹெல்ப் மீ ரைட்" என்கிற ஏஐ டூல் சேர்க்கப்பட்டது. இது உங்களுக்கு வந்த ஒரு இமெயிலில் இருந்து பொருத்தமான தகவல்களை கண்டறிந்து, அதற்கான சரியான ரிப்ளையை (Reply) உருவாக்க உங்களுக்கு உதவும்.

ஒருவேளை ஹெல்ப் மீ ரைட் ஏஐ டூலின் வழியாக கிடைக்கும் ரிப்ளை உங்களுக்கு திருப்தகரமாக இல்லையென்றால்.. அதே டூலின் கீழ் கிடைக்கும் எலாப்ரேட் (Elaborate) அல்லது ரீகிரியேட் (Recreate) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் குறிப்பிட்ட ரிப்ளையை மாற்றி அமைக்கவும் முடியும்.

அடுத்தது கூகுள் மேப்ஸில் (Google Maps) இம்மர்சிவ் வியூ என்கிற அம்சம் சேர்க்கப்பட்டது. இம்மர்சிவ் வியூ அம்சத்துடன் சேர்த்து கூகுள் மேப்ஸில் நிகழ்நேர வானிலை அறிவிப்புகள் (Real time weather updates), ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (Air quality index), அதாவது நீங்கள் செல்லும் பகுதியில் இருக்கும் காற்றின் தரம் போன்ற அம்சங்களும் கூகுள் மேப்ஸில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இம்மர்சிவ் வியூ அம்சத்துடன் சேர்த்து கூகுள் மேப்ஸில் நிகழ்நேர வானிலை அறிவிப்புகள் (Real time weather updates), ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (Air quality index), அதாவது நீங்கள் செல்லும் பகுதியில் இருக்கும் காற்றின் தரம் போன்ற அம்சங்களும் கூகுள் மேப்ஸில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கூகுள் பார்ட்-ஐ இன்னும் பலமானதாக மாற்ற அதற்கு 20 க்கும் மேற்பட்ட ப்ரோகிராமிங் லேங்குவேஜ்களில் (Programming languages) கோடிங் (Coding) மற்றும் டிபக்கிங் (Debugging) செய்யும் திறன் சேர்க்கப்பட்டது. எல்லாவற்றை விட முக்கியமாக பார்டிற்கான காத்திருப்பு பட்டியல் நீக்கப்பட்டு, 180 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கான பார்ட் அணுகல் திறந்து விடப்பட்டது

2023 ஆம் ஆண்டில் கூகுள் செய்த மிக முக்கியமான மாற்றம் - அதன் பார்ட் ஏஐ-க்கு ஜெமினி ஏஐ (Gemini AI) என்று பெயர்மாற்றம் செய்தது தான். கூகுள் நிறுவனம் இதை சூப்பர் ஸ்மார்ட் ஏஐ மாடலை (Super Smart AI Model) என்றுக்கூறி அறிமுகம் செய்தது. கூகுள் ஜெமினியானது மூன்று வெர்ஷன்களில் வெளியானது: அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro) மற்றும் நானோ (Nano).

இந்த மூன்று வெர்ஷன்களுமே குறிப்பிட்ட விஷயங்களை திறமையாக செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது அல்ட்ராவானது சிக்கலான பணிகளை கையாளும் திறன் கொண்டது; ப்ரோவானது பல்வேறு வகையான வித்தியாசமான பணிகளை செய்யும் திறன் கொண்டது; நானோவானது உங்கள் டிவைஸ்க்கான பணிகளை செய்யும். மேலும் கூகுள் ஜெமினி ஆனது டெக்ஸ்ட் (Text), கோட் (Code), ஆடியோ (Audio), இமேஜஸ் (Images), வீடியோஸ் (Videos) என எல்லா வகையான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் திறனை கொண்டிருந்தது.

பிப்ரவரி 2024: ஏஐ விஷயத்தில் அனைவரும் பயந்தபடியே சாட்ஜிபிடி ஆனது "லீக்" புகாரில் சிக்கியது. பெரும்பாலான பயனர்கள், மிகவும் எளிமையான கேள்விகளுக்கான பதில்களை தேடவே சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்தினாலும் சில பயனர்கள் மிகவும் சிக்கலான பணிகளை செய்வதற்காக சாட்ஜிபிடி ப்ளக்இன்ஸ் மற்றும் எக்ஸ்டென்ஷன்களை அணுகினர்.

அப்படியான பயனர்களின் ப்ரைவேட் சாட்ஸ் மற்றும் லாக்-இன் விவரங்களை சாட்ஜிபிடி லீக் செய்துள்ளதாக தகவல் வெளியானது. சாட்ஜிபிடி ஆனது தனிப்பட்ட உரையாடல்களை எவ்வாறு லீக் செய்தது என்பதை காட்டும் ஸ்கிரீன் ஷாட்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. அந்த ஸ்கிரீன் ஷாட்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் போன்ற விவரங்களும் இருந்தன

இதுகுறித்த விளக்கத்தில், ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் அதிகாரிகள் (OpenAI officials), பயனரின் அக்கவுண்ட் ஆனது காம்ப்ரஸைடு (compromised) செய்யப்பட்டுள்ளதால், சாட்ஜிபிடி ஆனது தொடர்பில்லாத சாட் ஹிஸ்டரிகளை காட்டியதாக விளக்கமளித்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கூட இதே போன்ற ஒரு சம்பவம் நடந்து இருந்தது. சாட்பாட்டில் ஒரு பக் இருந்ததாகவும், அது சாட் டைட்டில்களை லீக் செய்ததாகவும் கூறப்படுகிறது

மார்ச் 2024: கூகுள் ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி ஆகிய இரண்டிற்குமே வெடி வைக்கும்படியாக, எலான் மஸ்க்கின் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் க்ரோக் ஏஐ (Grok AI ஆனது ஓப்பன் சோர்ஸ் ஆக்கப்பட்டது. இதன்கீழ் க்ரோக் ஏஐ சாட்பாட்டின் சோர்ஸ் கோட்-ஐ பொதுமக்களால் மாற்றியமைக்கவும், மறுபகிர்வு செய்யவும் முடியும்.

மே 2024: ஓப்பன்ஏஐ நிறுவனமானது கூகுள் ஆல்டர்நேட்டிவ்வை உருவாக்குவதாகவும், அது சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் (ChatGPT Search Engine) என அழைக்கப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகின. அந்த நேரத்தில் சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் ஆனது கூகுளை போன்ற சேர்ச்-லைக் ப்ராடெக்ட் ஆக இருக்கும் அதே வேளையில் சாட்ஜிபிடி-யின் ஜெனெரேட்டிவ் ஏஐ திறன்களையும் ஒருங்கிணைக்கும் என்று ஊகிக்கப்பட்டது.

ஜூலை 2024: பல வகையான லீக்ஸ் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒப்பன்ஏஐ நிறுவனமானது, அதன் புதிய ஏஐ-பவர்டு சேர்ச் எஞ்சின் ஆன சேர்ச்ஜிபிடி-ஐ (SearchGPT) அறிமுகம் செய்தது. சேர்ச்ஜிபிடி-யின் புதிய சேர்ச் அம்சங்கள் ஒப்பன்ஏஐ நிறுவனத்தின் ஏஐ மாடல்களின் வலிமையை இணையத்தில் உள்ள தகவலுடன் இணைக்கும்படி வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதன்கீழ் தெளிவான மற்றும் பொருத்தமான ஆதாரங்களுடன் விரைவான மற்றும் நிகழ்நேர பதில்களை வழங்கி அசத்தியது.

சுருக்கமாக கூகுள் மற்றும் பிங் போன்ற "பாரம்பரியமான தேடுபொறிகளை" போல் இல்லாமல் அதன் பயனர்களுக்கு வெப் பேஜ்களுக்கான லிங்க்களை வழங்கியது. அதாவது சேர்ச்ஜிபிடி ஆனது உங்கள் கேள்விகளுக்கு, ஆதாரத்திற்கான லிங்க்களுடன் நேரடியாக பதிலளித்தது. எல்லாவற்றை விட சுவாரசியமாக ஒவ்வொரு வினவலுடனும் பகிரப்பட்ட கான்டெக்ஸ்ட் பில்டிங் மூலம் ஃபாலோ-அப் கேள்விகளை கேட்கவும் அனுமதித்தது.

ஓப்பன்ஏஐ நிறுவனமானது அதன் சேர்ச்ஜிபிடி ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட பதில்களை ஆட்ரிப்யூஷன் என்று அழைத்தது. அதாவது தான் வழங்கும் தகவல் எங்கிருந்து வருகிறது என்பது பயனர்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் வெளிப்படையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் இசை விழாக்களை பற்றிய விவரங்களை தேடினால், சேர்ச்ஜிபிடி ஆனது பல வகையான முடிவுகளில் இருந்து உங்களுக்கான தகவலை சுருக்கி.. அந்த சுருக்கமான விளக்கத்தையும், தகவலை சேகரிக்கும் இணைப்புகளையும் உங்களுக்கு வழங்கும்.

அக்டோபர் 2024: ஓப்பன்ஏஐ நிறுவனமானது தனது அடுத்த பிளாக்ஷிப் ஏஐ மாடல் ஆன ஓரியன் ஏஐ மாடலை வருகிற டிசம்பர் 2024 இல் அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியான உடனேயே கூகுள் நிறுவனம் தனது ஜெமினி ஏஐ-யின் லேட்டஸ்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அது கூகுள் ஜெமினி 2.0 (Google Gemini 2.0) என்று அழைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.

சொன்னபடியே ஜெமினி 2.0 2024 டிசம்பரில் வெளியானது. ஆனால் ஓரியன் ஏஐ மாடல் ஆனது சாட்ஜிபிடி 4 மாடலை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நல்ல விஷயம் என்னவென்றால் ஓரியன் ஏஐ ஆனது அனைவருக்கமானதாக இருக்காது. ஓரியன் ஏஐ ஆனது ஆரம்பத்தில் ஓப்பன் ஏஐ உடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

உண்மையில் ஓரியன் ஏஐ ஆனது சாட்ஜிபிடி 4 மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும் ஆனாலும் அது சாட்ஜிபிடி 5 என்று அழைக்கப்படமால் ஓரியன் ஏஐ என்று அழைக்கப்படுவதற்கு "லாப நோக்கம்" தொடர்பான காரணம் இருக்கலாம். அதாவது இது ஜிபிடி-4 மற்றும் ஜிபிடி-3 ஆகிய வெர்ஷன்களை போல அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அனைவருக்கும் அணுக கிடைக்காமல் போகலாம்.

டிசம்பர் 2024: ஓப்பன் ஏஐ-டின் லாப நோக்கத்திற்கு எலான் மஸ்க் வேட்டு வைத்தார். கலிபோர்னியாவில் உள்ள வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் "புதிய திட்டத்திற்கு" எதிராக கலிபோர்னியாவில் உள்ள வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

ஓப்பன்ஏஐ நிறுவனமானது முழு அளவில் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறுப்போவதாக தகவல் வெளியான வேகத்தில் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தை தடுக்கும் நோக்கத்தின் கீழும் மற்றும் பல போட்டி-எதிர்ப்பு நடைமுறைகளை குற்றம் சாட்டும் நோக்கத்தின் கீழும் எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், தலைவர் கிரெக் ப்ரோக்மேன், மைக்ரோசாப்ட் மற்றும் பல குழு உறுப்பினர்களை இலக்காக கொண்டுள்ளது.

மேலும் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் கட்டமைப்பு மாற்றம் மற்றும் வணிக செயல்பாடுகளை இடைநிறுத்தும்படி கோருகிறது. மேலும் இலாப நோக்கற்றதாகவும், அனைவரும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டிய ஏஐ ஆராய்ச்சிக்கு எதிராக ஓப்பன் ஏஐ நிறுவனமானது செயல்படுகிறது என்றும் எலான் மஸ்க்கின் சட்டக் குழு வாதிடுகிறது.

2024 ஆம் ஆண்டை போலவே.. "ஜெயிக்கிறமோ இல்லயோ முதல்ல சண்ட செய்யணும்" என்கிற பல மொமெண்ட்களை நாம் 2025 ஆம் ஆண்டிலும் காண்போம் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஊழியர்கள் உடனான சமீபத்திய சந்திப்பில் 2025 ஆம் ஆண்டிற்கு தயாராகுமாறும், 2025 ஆம் ஆண்டில், ஜெமினியை பரந்த அளவில் நுகர்வோர் பக்கம் கொண்டு செல்வது தான் அடுத்த ஆண்டு நமக்கான மிகப்பெரிய கவனமாகும் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Vs OpenAI ChatGPT Vs Gemini 6 Major Changes in AI Technology in 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X