இந்தியாவில் நம்பகமான பிராண்ட் கூகுள் : கோன் அண்ட் உல்ஃப்.!

By Prakash
|

கூகுள் நிறுவனம் என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். மேலும் கூகுள் இணையம் பொறுத்தவரை வேலைவாய்ப்பு, கல்வி, போன்ற அனைத்துவிதமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் நம்பகமான பிராண்ட் கூகுள் : கோன் அண்ட் உல்ஃப்.!

உலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள் ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும் இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தற்சமயம் இந்தியாவின் நம்பகமான பிராண்ட் என கூகுள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

தலைசிறந்த நிறுவனங்கள்:

தலைசிறந்த நிறுவனங்கள்:

மைக்ரோசாப்ட், அமேசான், மாருதி மற்றும் ஆப்பிள் போன்றவை இந்தியாவில் தலைசிறந்த நிறுவனங்கள் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது, மேலும் அதிக மக்கள் இந்த நிறவனங்களில் சிறந்த நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளர்.

அமேசான்:

அமேசான்:

அமேசான் நிறுவனம் உலகளாவிய பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், செவ்வாயன்று ஒரு புதிய கணக்கெடுப்பு முடிவுகளை வெளிப்படுத்திய போதிலும், இந்தியாவில் கூகிள் மிகவும் நம்பகமான பிராண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

67சதவிகிதம்:

67சதவிகிதம்:

இந்திய நுகர்வோரில் 67சதவிகிதம் பேர் பிராண்டின் நம்பகத்தன்மை அடிப்படையிலேயே பொருளை தேர்வு செய்வதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோன் அண்ட் உல்ஃப்:

கோன் அண்ட் உல்ஃப்:

அமெரிக்காவின் நியூயார்க்கைச் சார்ந்த கோன் அண்ட் உல்ஃப் என்ற நிறுவனம் நம்பகமான பிராண்ட் பற்றி ஆய்வு நடத்தியது,இந்தியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தோனேஷியா, இத்தாலி, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யுகே மற்றும் யு.எஸ். போன்ற நாடுகளில் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளிவந்துள்ளது.

கூகுள்:

கூகுள்:

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் 1400 பிராண்ட் பற்றி 15 ஆயிரம் பேர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் நம்பகமான பிராண்ட் என கூகுள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 லாரி பேஜ்;

லாரி பேஜ்;

1998-இல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு 2004இல் நடைபெற்றது.

Best Mobiles in India

English summary
Google Viewed as Most Authentic Brand in India Amazon Globally; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X