கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவை மூடல்; ஏன்.? எதனால்.?

இந்த சேவையின் முழுமையான முடக்கம் அல்லது மூடல் வருகிற 2019-ஆம் ஆண்டிற்குள் நிகழும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

|

கடந்த 2009-ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் மூலம் துவங்கப்பட்ட "goo.gl" என்கிற யூஆர்எல் ஷார்ட்னர் சேவையானது, அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படவுள்ளது. இந்த சேவையின் முழுமையான முடக்கம் அல்லது மூடல் வருகிற 2019-ஆம் ஆண்டிற்குள் நிகழும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவை மூடல்; ஏன்.? எதனால்.?

இருப்பினும், ஏற்கனவே யூஆர்எல் ஷார்ட்னர் மூலம் உருவாக்கம் பெற்ற இணைப்புகள் (லின்க்ஸ்) தொடர்ந்து வேலை செய்யும் என்றும் கூகுள் அறிவித்துள்ளது. இந்த கூகுள் யூஆர்எல் ஷார்ட்னர். தொடங்கப்பட காரணமே, கூகுள் பீட்பர்னர் (Google FeedBurner) மற்றும் டூல்பாக்ஸ் தான். இப்போது அவைகளே இல்லாத நிலைப்பாட்டில். கூகுள் யூஆர்எல் ஷார்ட்னர் முடக்கப் படவுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

இனி பயனர்கள் மற்றும் டெவெலப்பர்கள், சமீபத்திய அறிவிப்பான ஃபயர்பேஸ் டைனமிக் லின்க்களுக்கு ( Firebase Dynamic Links) சேசைக்கு மாறிக்கொள்ளுமாறு கூகுள் கேட்டுக்கொண்டுள்ளது. புதிய ஷார்ட் லின்க்ஸ்களை உருவாக்க நினைக்கும் பயனர்கள், ஃபயர்பேஸ் டைனமிக் லின்க்ஸ் மட்டுமின்றி, Bit.ly மற்றும் Ow.ly போன்ற பிற பிரபலமான சேவைகளையும் மாற்றாக எடுத்துக்கொள்ளுமாறு கூகுள் பரிந்துரைத்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவை மூடல்; ஏன்.? எதனால்.?

இதற்கிடையில், இந்த ஆண்டு ஏப்ரல் 13 முதல் புதிய மற்றும் அநாமதேய பயனர்களால், ஷார்ட் லின்க்ஸ்களை goo.gl கன்சோலில் அணுக முடியாது. மறுகையில், கூகுள் அக்கவுண்ட் கொண்டு பயன்படுத்திய பயனர்கள் மார்ச் 30, 2019 வரை கூகுள் யூஆர்எல் ஷார்ட்னரை கிரியேட்டிங், மேனேஜ்மென்ட் மற்றும் அனாலிடிக்ஸ் ஆகியவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google URL Shortener Service goo.gl Is Being Shutdown. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X