Home
News

போய் வா நண்பா.. ஆகஸ்ட் 25 உடன் முடிவுக்கு வரும் Google சேவை.. அதன் பிறகு 404 Error காட்டும்!

நீளமான யுஆர்எல்-களை சுருக்கமாக மாற்ற உதவி வரும் ஒரு கூகுள் சேவை (அல்லது ஒரு கூகுள் டூல்) ஆனது வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி உடன் நிறுத்தப்பட உள்ளது. இந்நேரம் உங்களில் பலர் அது என்ன சேவை / டூல் என்பதை கண்டுபிடித்து இருப்பீர்கள்.

அது கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் (Google URL Shortener) ஆகும். அறிமுகமான நாளில் இருந்து மிகவும் பிரபலமான யுஆர்எல் ஷார்ட்னர் டூலாக பயன்படுத்தப்பட்டு வரும் இது அடிப்படையில் நீண்ட யுஆர்எல்-களை எடுத்து, மற்ற தளங்களில் எளிதாக பகிரக்கூடிய சுருக்கமான யுஆர்எல்-களாக மாற்ற அனுமதிக்கிறது.

ஆகஸ்ட் 25 உடன் முடிவுக்கு வரும் Google சேவை!

இருப்பினும் கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் தளமானது "மதிப்பிழக்கப்படும்" என்று கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கடந்த ஆண்டு, கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் ஆல் சுருக்கப்பட்ட இணைப்புகள் எந்தவிதமான ரெஸ்பான்ஸையும் தூண்டாது; அதாவது எந்த லிங்க்கும் வேலை செய்யாது என்று அறிவிக்க்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த மாற்றம் அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது

ஜூலை 2024 தேதியிட்ட ஒரு வலைப்பதிவில் Goo.gl இணைப்புகள் ஆனது இப்போது ஒரு இடைநிலை பக்கத்தை (Interstitial page) கொண்டிருக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது. அதாவது கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இணைப்புகளை கிளிக் செய்யும் போது ஒரிஜினல் டார்கெட் இணைப்பிற்கு செல்லும் முன்னர் வரவிருக்கும் "கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் நீக்கம்" குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கும் பக்கத்திற்கு செல்லும்.

ஆகஸ்ட் 25, 2025 க்கு பிறகு கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் கொண்டு சுருக்கப்பட்ட இணைப்புகள் ஆதரிக்கப்படாது என்றும், குறிப்பிட்ட இணைப்புகளை கிளிக் செய்யும் போது அது எந்த ரெஸ்பான்ஸும் செய்யது என்றும், அந்த இணைப்புகள் 404 ரெஸ்பான்ஸை கொடுக்கும் என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே கூகுளின் இந்த டூல் மூலம் உருவாக்கப்பட்ட இணைப்புகள் ஏதேனும் உங்களிடம் இருந்தால், அவைகள் சரியாக ஒரு மாதத்திற்கு பின்னர் வேலை செய்வதை நிறுத்திவிடும். கூடவே கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் உடன் உருவாக்கப்பட்ட இணைப்புகளை பயன்படுத்தும் டெவலப்பர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே புதிய சுருக்கப்பட்ட இணைப்புகளை உருவாக்க கூகுள் நிறுவனம் அனுமதிக்கவில்லை என்றாலும், அது ஏற்கனவே உருவாக்கப்பட்ட யுஆர்எல்-களுக்கான சேவையை தொடர்ந்து வந்தது. மேலும் கடந்த ஆண்டு, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இந்த இணைப்புகளை மற்றொரு யுஆர்எல் ஷார்ட்னர் வழங்குநருக்கு மாற்றுவதை எளிதாக்க ஒரு வருட கால அவகாசத்தை வழங்கியது.

இப்போது வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு பிறகு, கூகுளின் யுஆர்எல் ஷார்ட்னர் டூலால் சுருக்கப்பட்ட இணைப்பை கொண்ட ஒரு பக்கத்தை திறப்பது 404 ரெஸ்பான்ஸை காட்டும் என்கிற இறுதிக்கட்டத்தை கூகுள் நிறுவனம் எட்டியுள்ளது. இதெல்லாம் சரி ஆனால் ஏன் கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் சேவை நிறுத்தப்பட்டது?

கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, சுருக்கப்பட்ட யுஆர்எல்கள் கடந்த பல ஆண்டுகளாக குறைந்த டிராஃபிக்கையே கண்டன (அதாவது குறைவான பயன்பாட்டையே கண்டன). மேலும் கூகுளின் கூற்றுப்படி கடந்த ஜூன் 2024 மாதம் முழுவதும் 99 சதவீத இணைப்புகளில் எந்த செயல்பாடும் பதிவு செய்யப்படவில்லை.

அதன் பின்னர் கூகுள் நிறுவனம் அதன் யுஆர்எல் ஷார்ட்டனரை ஃபயர்பேஸ் டைனமிக் லிங்க்ஸ் (FDL) கொண்டு மாற்றியது. இது "ஸ்மார்ட் யுஆர்எல்கள்" என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இதை - ஐஓஎஸ் (iOS), ஆண்ட்ராய்டு (Android) அல்லது வெப்-பேஸ்டு ஆப்பிற்கும், எந்த லோக்கேஷனிற்கும் ஷேர் செய்யலாம்.

இருப்பினும் கூகுள் யுஆர்எல் ஷார்ட்னரின் முழுமையான நிறுத்தத்திற்கு பிறகும் கூட, சில சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். இருப்பிட பகிர்வுக்கான மேப்ஸ் (Maps for location sharing) போன்ற கூகுள் ஆப்கள் மூலம் உருவாக்கப்பட்ட goo.gl இணைப்புகள் ஆனது ஆகஸ்ட் 25 காலக்கெடுவுக்கு பிறகும் தொடர்ந்து செயல்படும் என்பதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google URL Shortener Links to Stop Working from August 25 After that You Will See 404 Response
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X