Home
News

டிச.2 முதல்.. Google Drive, Gmail சேவையில் முக்கிய மாற்றம்.. இமெயில் Compose செய்யும் போது.. இனிமேல்?

கூகுள் (Google) நிறுவனமானது ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கான முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. இந்நிறுவனம் ஜிமெயில் (Gmail), சாட் (Chat) மற்றும் பிற வொர்க்ஸ்பேஸ் டூல்களில் (Workspace Tools) பயன்படுத்தப்படும் ட்ரைவர் ஃபைல் பிக்கர்-ஐ (Drive File Picker) அப்டேட் செய்துள்ளது.

மற்ற கூகுள் சேவைகளின் வழியாக (அதாவது ஜிமெயில், கூகுள் சாட் வழியாக) கூகுள் ட்ரைவில் உள்ள ஃபைல்களை தேர்வு செய்ய உதவும் ட்ரைவர் ஃபைல் பிக்கரில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த ரீடிசைன் ஆனது நேவிகேஷனை (Navigation) எளிதாக்குவது மட்டுமின்றி, சமீபத்திய ஃபைல்களுக்கான (Recent Files) அணுகலை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.

டிச.2 முதல்.. Google Drive, Gmail சேவையில் முக்கிய மாற்றம்!

முன்னதாக ட்ரைவர் ஃபைல் பிக்கர் ஆனது மை ட்ரைவ் (My Drive), கம்ப்யூட்டர்ஸ் (Computers), ஷேர்டு வித் மீ (Shared with me), ஸ்டார்டு (Starred) மற்றும் ரீசன்ட் (Recent) ஆகியவைகளை மட்டுமே காட்சிப்படுத்தியது. இதன் கீழ் ஒவ்வொரு ஃபோல்டரையும் கிளிக் செய்த பின்னரே பயனர்களால் ஃபைல்களை பார்க்க முடியும்.

ஆனால் இப்போது, கூகுள் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட்டின் கீழ், ​​ஃபோல்டர்கள் ஆனது திரையின் மேற்புறத்தில் நகரும் பாணியிலான ஒரு கேரசல் ஃபார்மெட்டில் (Carousel format) காட்டப்படும். அதே நேரத்தில் மெயின் வியூ (Main View) ஆனது டீஃபால்ட் (Default) ஆக சமீபத்திய ஃபைல்களின் பட்டியலை காட்டும். அதாவது இனிமேல், பயனர்கள் தத்தம் தேவைக்கேற்ப லிஸ்ட் வியூ (List View) மற்றும் கிரிட் வியூவிற்கு (Grid View) இடையே மாறலாம்.

இந்த அப்டேட் ஏற்கனவே ரேப்பிட் ரிலீஸ் டொமைன்களில் (Rapid Release domains) வெளியிடப்பட்டு விட்டது மற்றும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்ட வெளியீட்டு டொமைன்களில் (Scheduled Release domains) அணுக கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி ரீடிசைன் செய்யப்பட்ட ட்ரைவர் ஃபைல் பிக்கர் ஆனது ஜிமெயில் மற்றும் கூகுள் சாட்டில் அணுக கிடைக்கும்.

ஜிமெயிலில் கம்போஸ் (Compose) என்பதற்கு சென்று, பேப்பர் கிளிப் ஐகானை (Paper clip icon) கிளிக் செய்து, இன்சர்ட் ஃப்ரம் டிரைவ் (Insert From Drive) என்பதை தேர்வு செய்யவும் அணுக கிடைக்கும். இதேபோல கூகுள் சாட்டில், ஒரு கான்வர்சேஷனில் உள்ள 'பிளஸ்' மெனுவை (Plus Menu) கிளிக் செய்து, டிரைவ் (Drive) என்பதை தேர்ந்தெடுத்த பின்னர் கிடைக்கும்.

கூகுளின் கூற்றுப்படி இந்த லேட்டஸ்ட் அப்டேட்டின் வழியாக பயனர்களுக்கு 2 முக்கியான நன்மைகள் கிடைக்கும்: ஒன்று - இந்த புதிய லேஅவுட் (New Layout) ஆனது பல ஃபோல்டர்களுக்கு செல்லாமல் சமீபத்தில் பார்த்த ஃபைல்களை மிகவும் விரைவாக அணுக அனுமதிக்கும். இரண்டாவது - மை டிரைவ், ஷேர்டு டிரைவ்ஸ் மற்றும் பிற லோக்கேஷன்களின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை (Storage Options), தெளிவான முறையில் கேரசல் ஃபார்மெட்டில் வழியாக காட்சிப்படுத்தும்.

கூகுள் தொடர்பான இன்னொரு முக்கியமான செய்தியை பொறுத்தவரை, ஓப்பன் ஏஐ நிறுவனமானது கூகுள் குரோம் ப்ரவுஸருக்கு போட்டியாக, சொந்தமாக ஒரு வெப் ப்ரவுஸரை உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த உண்மையாகும் பட்சத்தில், கூகுள் க்ரோம் மட்டுமின்றி ஏற்கனவே உள்ள பல இண்டர்நெட் ப்ரவுஸர்களுக்கு கடும் சிக்கல் ஏற்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஏனென்றால், ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சொந்த இண்டர்நெட் ப்ரவுஸரில் சாட்ஜிபிடி போன்ற அட்வான்ஸ்டு லேங்குவேஜ் மாடல்களை நேரடியாக ப்ரவுஸிங் எக்ஸ்பீரியன்ஸின் கீழ் ஒருங்கிணைக்கும் என்றும், இன்டெலிஜென்ஸ் சேர்ச் மற்றும் அசிஸ்டென்ட் திறன்ககள், ஆட்டோமேடட் சம்மரைசேஷன், ரியல் டைம் டிரான்ஸ்லேஷன் மற்றும் கான்டெக்ஸ்ட் அவேர் சேர்ச் போன்ற அம்சங்களை கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.

எல்லாவற்றை விட முக்கியமான ஓப்பன் ஏஐ-யின் இண்டர்நெட் ப்ரவுஸர் ஆனது கூகுள் க்ரோம்மில் இருந்து தன்னை வேறுபடுத்தி கொள்ள.. முன்னெப்போதும் கிடைக்காத ப்ரைவஸி மற்றும் பெர்சனலைசேஷனை (Privacy and personalization) வலியுறுத்தும். இது யூஸர் டேட்டா (User data) பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய மேம்படுத்தப்பட்ட என்க்ரிப்ஷன் ப்ரோட்டோகால்களை (Enhanced Encryption Protocols) கொண்டிருக்கும்.

மேலும் மினிமம் டேட்டா கலெக்ஷன் (Minimal Data Collection) உடன் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இண்டர்நெட் ப்ரவுஸர் ஆனது பயனர்களின் ஒப்புதல் மற்றும் பயனர்களுக்கான வெளிப்படைத்தன்மையை (User consent and transparency) மையமாக கொண்டு, அத்தியாவசியமான யூசர் டேட்டாவை (Essential user data) மட்டுமே சேகரிக்கும்.

Best Mobiles in India

English summary
Google Updated Drive File Picker in Android Users Now Easily Access Recent files in Gmail Chat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X