Google, Twitter, Amazon, FB.. உங்கள் தகவல் சேகரிப்பில் எது டாப்? இனி உஷாரா இருங்க!

|

வெளியான ஆய்வின்படி, ஆப்பிள் தனியுரிமை உணர்வுள்ள நிறுவனமாக இருக்கிறது. காரணம், இது பயனர்களின் கணக்குகளை பராமரிக்கும் நோக்கில் தேவையான அளவு தகவல்களை மட்டுமே சேமித்து வருகிறது. மொத்தமாக வெளியாகியுள்ள தகவல்களில் பல விஷயங்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கிறது.

ஒருவரின் அங்கமாகவே மாறி இருக்கும் மொபைல்

ஒருவரின் அங்கமாகவே மாறி இருக்கும் மொபைல்

உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன் என்று கூறுவார்கள். நாம் இப்போது இணைய யுகத்தில் வாழ்கிறோம். உன் போனை ஒரு மணிநேரம் கொடு.. உன் மொத்த வரலாற்றையும் சொல்கிறேன் என்று இந்த யுகத்தில் சொல்லலாம். இதை பெரும்பாலானவர்கள் மறுக்கமாட்டீர்கள். காரணம் அந்தளவிற்கு ஸ்மார்ட்போன் ஒருவரின் அங்கமாக மாறி இருக்கிறது.

பட்டியலில் உள்ள பிரதான நிறுவனங்கள்

பட்டியலில் உள்ள பிரதான நிறுவனங்கள்

ஸ்மார்ட்போன்களில் பிரதானமாக எதை பயன்படுத்துவோம் என்று நமக்கு நாமே பட்டியலிட்டால்., அதில் கண்டிப்பாக Google, Facebook, Amazon, Twitter இடம்பெற்றிருக்கும். அதேபோல் மிகவும் புகழ் பெற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை பட்டியலிட்டால், அதில் Apple பிரதான இடம் பிடித்திருக்கும். இதை யாராலும் மறுக்க முடியாது.

இந்தநிலையில் Google, Facebook, Amazon, Twitter, Apple நிறுவனங்களில் எது அதிகளவில் பயனர்கள் தரவுகளை சேகரிக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிக அளவு தரவுகளை சேகரிக்கும் நிறுவனங்கள் எது?

அதிக அளவு தரவுகளை சேகரிக்கும் நிறுவனங்கள் எது?

ஒவ்வொருவரின் தரவுகளும் அதன் மதிப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு நாணயத்துக்கு ஈடாகும். பயன்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் முயற்சியில் பயனர்களின் பயன்பாட்டு வடிவங்கள் மற்றும் நுண்ணறிவுகளை நிறுவனங்கள் சேகரிக்கிறது.

இது பயனர்களின் தேவையறிந்து விளம்பரங்களை வழங்குவதற்கான நோக்கமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான நிறுவனங்கள் தரவுகளை சேகரித்து வரும் நிலையில், சில நிறுவனங்கள் மட்டும் மற்றவர்களை விட சற்று அதிகமாக சேகரிக்கின்றன.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள புதிய அறிக்கை ஒன்று, அதிக அளவு தரவுகளை சேகரிக்கும் நிறுவனங்களை முன்னிலைப்படுத்தி பட்டியலிட்டுள்ளது.

அதிக அளவு தரவுகளை சேகரிக்கும் பிக்-டெக் நிறுவனங்கள்

அதிக அளவு தரவுகளை சேகரிக்கும் பிக்-டெக் நிறுவனங்கள்

இதுதொடர்பான ஆய்வறிக்கை Stockapps.com இல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூகுள், பேஸ்புக், அமேசான், ட்விட்டர் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பிக் டெக் நிறுவனங்கள் அதிக அளவு தரவுகளை சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் முன்னிலையில் எந்த நிறுவனம் இருக்கிறது என்று தெரியுமா?

தரவு சேகரிப்பு தற்செயலாக நடக்கவில்லை

தரவு சேகரிப்பு தற்செயலாக நடக்கவில்லை

இந்த ஆய்வறிக்கை பட்டியலில் கூகுள் அதிக அளவு தரவுகளை சேகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவு சேகரிப்பு தற்செயலாக நடக்கவில்லை. நிறுவனம் தங்களுக்கு தேவையான தரவுப் புள்ளிகளை நோக்கத்துடன் சேகரிக்கிறது.

இந்த தரவுப் புள்ளிகளில் ஆனது உங்கள் இருப்பிடம், உங்கள் ஆர்வங்கள், உங்கள் பயனர் பெயர் மற்றும் பிற (இதில் நீங்கள் அடிக்கடி பேசும் தலைப்புகளாக இருக்கலாம்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவு ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வகை நோக்கத்துடன் சேகரிக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

முன்னிலையில் இருக்கும் நிறுவனம் இதுதான்?

முன்னிலையில் இருக்கும் நிறுவனம் இதுதான்?

ஆய்வுத் தகவலின்படி, கூகுள் மொத்தமாக 39 தரவு புள்ளிகளை சேகரித்து முன்னிலையில் இருக்கிறது. இது முழுவதும் வணிக மாதிரியான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து இந்த பட்டியலில், பேஸ்புக்கை விட ட்விட்டர் அதிக தரவுகளை சேகரிக்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

அடுத்தடுத்த இடத்தில் உள்ள நிறுவனங்கள் இதுதான்

அடுத்தடுத்த இடத்தில் உள்ள நிறுவனங்கள் இதுதான்

இதைத் தொடர்ந்து, ட்விட்டர் மொத்தம் 24 டேட்டா புள்ளிகளை சேகரித்து இரண்டாவது இடத்திலும், அமேசான் 23 டேட்டா புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.

ஆச்சரியப்படும் விதமான விஷயம் என்னவென்றால், மெட்டாவிற்கு சொந்தமான பேஸ்புக் வெறும் 14 தரவு புள்ளிகளை மட்டுமே சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பேஸ்புக் நான்காவது இடத்தில் இருக்கிறது.

குறைந்த அளவிலான தரவுகளை சேகரிக்கும் நிறுவனம்

குறைந்த அளவிலான தரவுகளை சேகரிக்கும் நிறுவனம்

மிகப் பெரிய ஜாம்பவான் நிறுவனமான ஆப்பிள், மிகக் குறைந்த அளவிலான தரவுகளை சேகரிக்கிறது. ஆய்வுத் தகவலின்படி, ஆப்பிள் வெறும் 12 தரவு புள்ளிகளை மட்டுமே கொண்டிருக்கிறது.

ஆனால் ஆப்பிள் தரவுகளை சேமிக்கிறது என்பதே ஆச்சரியமளிக்கும் விஷயம் தான்.

தனியுரிமை உணர்வு கொண்ட நிறுவனங்களும் பட்டியலில்

தனியுரிமை உணர்வு கொண்ட நிறுவனங்களும் பட்டியலில்

பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் ஆப்பிள், அமேசானும் பட்டியலிடப்பட்டுள்ளது. இது மிகவும் தனியுரிமை உணர்வு கொண்ட நிறுவனங்களாகும். ஆப்பிள் பயனர்களின் கணக்குகளை பராமரிக்க தேவையான தகவல்களை மட்டுமே சேகரிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: bgr.in

Best Mobiles in India

English summary
Google, Twitter, Amazon, Facebook, Apple Collects Users Data: Which is Top?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X