Just In
- 1 hr ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன்கள்.!
- 13 hrs ago
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- 14 hrs ago
பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!
- 15 hrs ago
வாட்ஸ்அப் குரூப்: இனி அந்த சிக்கல் இருக்காது.! வரப்போகிறது புதிய அப்டேட்.!
Don't Miss
- Automobiles
வாகனம் ஓட்டும் போது மது மட்டுமல்ல இதையும் செய்யக் கூடாது... மீறிச் செய்தால் இனி நீங்க ஓட்ட முடியாம போயிடும்
- News
ஞானவாபி மசூதி - சிவலிங்க வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றம், வாரணாசி கோர்ட் விசாரணை.. பின்னணி
- Movies
ஒரே வார்த்தையில் அல்லு அர்ஜுனை அலற விட்ட அட்லி...அப்படி என்ன சொன்னாரு?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க மதிய உணவாக இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்!
- Finance
தங்கம் விலை இன்றும் சரிவா.. எவ்வளவு குறைந்திருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?
- Sports
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை..ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கடைசி பந்து வரை பரபர.. கொல்கத்தா நாக் அவுட்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கூகுள் டிரான்ஸ்லேட்டரில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 24 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன: சுந்தர் பிச்சை.!
கூகுள் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மொழி மாற்றம் செய்ய அதிகம் பயன்படும் கூகுள் டிரான்ஸ்லேட்டரில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 24 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது. இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிரான்ஸ்லேட் எனப்படும் மொழிமாற்ற சேவையை அளித்து வருகிறது கூகுள் நிறுவனம். இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக இதில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், பெங்காலி, கன்னடம் போன்ற பல மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது பயனர்கள் தங்களுக்கு தேவையான மொழிகளில் கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் அதில் குறிப்பிட்டுள்ள மொழிகளுள் மொழி மாற்றம் செய்து அறிந்துகொள்ளலாம்.

இந்நிலையில் 24 புதிய மொழிகளை தற்போது கூகுள் டிரான்ஸ்லேட்டரில் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை. மேலும் இந்த 24 மொழிகளில் போஜ்புரி, பம்பரா, டோக்ரி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 8 இந்திய மொழிகளும் அடங்கும்.

குறிப்பாக இந்த புதிய அறிமுகத்தின் மூலம் கூகுள் டிரான்ஸ்லேட்டில் உலகம் முழுவதும் உள்ள 133 மொழிகளும், 19 இந்திய மொழிகளும் இடம் பெற்றுள்ளன. அதேபோல் இந்த சேவைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இதனால் 30 கோடி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.

அதேபோல் 49 வயதான சுந்தர் பிச்சை படித்து, வளர்ந்தது தமிழ்நாட்டில்தான். அதாவது இவர் பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தவர் எனபது குறிப்பிடத்தக்கது. பின்பு கடந்த 2004-ம் ஆண்டு சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.

சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்தப் பேட்டியில் விக்கிப்பீடியாவில் நீங்கள் படித்த பள்ளி பல முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் படித்த சரியான பள்ளி எது என்று சொல்ல முடியா? என்று நெறியாளர் கேட்டிருந்தார்.

அதற்கு சுந்தர் பிச்சை அளித்த பதில் என்னவென்றால், இதில் உள்ளதில் இரண்டு பள்ளிகளில் நான் படித்தேன். கடைசியாக நான் மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் படித்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன்பின்பு எட்டு வயதில் ஐஐடி-யில் சேர நினைத்தாரா? என கேட்டதற்கு அவர் இல்லவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இந்தியாவில் வளர்ந்த அவர், ஆரம்ப நாட்களில் தனது வாழ்வில் தொழில்நுட்ப அணுகல் எப்படி இருந்தது என்பதை விரிவாக கூறியுள்ளார். மேலும் தொலைபேசி மூலம் தான் கண்ட மாற்றத்தையும் அவர் விவரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999