Home
News

Google அறிவித்துள்ள கெடு நாள்.. உங்க Gmail ID-ஐ காப்பாத்திக்கோங்க.. இல்லனா?

கூகுள் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகிறது என்றே கூறலாம். அதேபோல் இந்நிறுவனம் தங்களின் தனியுரிமை கொள்கைகளை அவ்வப்போது புதுப்பித்து வருகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக லாகின் (log in) செய்யப்படாமல் அல்லது பயன்படுத்தாமல் வைத்திருக்கும் அக்கவுண்ட்களை(கணக்குகளை) நீக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

மேலும் இது தொடர்பான தகவலைக் கூகுள் (Google) தனது பயனர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியுள்ளது. குறிப்பாகப் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், தேவையில்லாத கணக்குகளை நீக்குவதற்குக் கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google அறிவித்துள்ள கெடு நாள்.. உங்க இமெயில் ஐடி-ஐ காப்பாத்திக்கோங்க!

அதேபோல் கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில் டிசம்பர் 2023 முதல் இந்த நடவடிக்கையைத் தொடங்க உள்ளதாக் குறிப்பிட்டுள்ளது. அதாவது லாகின் செய்யப்படாமல் அல்லது பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை இந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது.

பின்பு இதுதொடர்பான ஏற்கனவே பயனர்களுக்கு மின்னுசல்களை அனுப்பத் தொடங்கிவிட்டது கூகுள் நிறுவனம். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கணக்குகள் இருந்து அவை நீக்கப்பட்டால், அதில் பதிவுசெய்து வைத்திருந்த மின்னஞ்சல்கள், டாக்ஸ், கோப்புகள், டிரைவ், ஃபைல்கள், யூடியூப் சேனல்கள், கூகுள் ஃபோட்டோஸ் போன்றவைகளும் உங்கள் கைவிட்டுப் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதேபோல் இனிமேல் இந்த பழைய கணக்கு எனக்குத் தேவை இல்லை என்று நினைப்பவர்கள் மட்டும், தங்கள் கூகுள் கணக்குகளை அப்படியே விட்டுவிடலாம். மற்றவர்கள் உடனடியாக தங்கள் கணக்குகளை ஆக்டிவ் செய்ய வேண்டும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த புதிய கொள்கை தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பள்ளிகள், கல்லூரிகள் அல்லது வணிகங்கள் போன்ற நிறுவனங்களுக்கான கணக்குகளை இது எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் நீக்கப்படும் கணக்குகளின் பயன்படுத்தப்படாத தனிப்பட்ட தகவலைக் கூகுள் என்ன செய்யும் என்றும் பயனர்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

கூகுள் கணக்கை ஆக்டிவாக வைத்திருக்கும் வழிமுறைகள்: தற்போது கூகுள் நிறுவனம் கணக்குகளை மீண்டும் செயல்படுத்த எச்சரிக்கை மின்னஞ்சல்களை அனுப்புகிறது. இப்போது உங்களிடம் பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்கு இருந்தால் அதை நீக்குவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை 1: முதலில் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும் அல்லது அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களைப் படிக்க வேண்டும். அடுத்து கூகுள் தளங்களைப் பயன்படுத்த வேண்டும். அதாவது கூகுள் ட்ரைவ், போட்டோஸ், யூடியூப் போன்றவற்றில் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Google அறிவித்துள்ள கெடு நாள்.. உங்க இமெயில் ஐடி-ஐ காப்பாத்திக்கோங்க!

வழிமுறை 2: அதேபோல் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யலாம். பின்பு உங்களது கணக்கில் நுழைந்து யூடியூப் வீடியோவைப் பார்த்து அதற்கு கமெண்ட் செய்யலாம். மேலும் மூன்றாம் தரப்பு தளங்களில் உங்களது கூகுள் கணக்குகளை Sign In செய்யலாம். குறிப்பாக இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தினால் கூகுள் கணக்கை ஆக்டிவாக வைத்திருக்க முடியும்.

குறிப்பாக நீங்கள் இரண்டு ஆண்டுகளாக உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தாவிட்டாலும், உங்களது கணக்கின் மூலம் ஏற்கனவே ஏதேனும் கூகுள் ப்ளே சந்தா திட்டம் செயல்பாட்டில் இருந்தால் கூகுள் நிறுவனம் உங்களது கணக்கை நீக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google To Start Deleting Inactive Accounts From December 31: Simple Tips To Protect Your Email ID : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X