சுளுக்கெடுத்த சுந்தர் பிச்சை.. TrueCaller App-க்கு ஆப்பு வச்ச Google.. இனி எல்லாமே தலைகீழாய் மாறும்!
100-க்கு 99 பேர்.. தங்கள் ஆண்ட்ராய்டு போன்களிலுள்ள கூகுள் போன் ஆப்பை (Google Phone App) பயன்படுத்துவதுமில்லை, அதை டீஃபால்ட் போன் கால் ஆப் (Default Phone Call App) ஆக செட் செய்வதுமில்லை. மாறாக ட்ரூகாலர் ஆப்பை தான் பயன்படுத்துகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம்.. தெரியாத எண்களில் (Unknown Numbers) இருந்து வரும் அழைப்புகளை கூட யார் அழைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் அம்சம் ட்ரூகாலர் ஆப்பில் (Truecaller App) உள்ளது. இந்த ஒரு அம்சத்திற்காகவே பலரும் கூகுள் போன் ஆப்பை ஓரங்கட்டிவிட்டு ட்ரூகாலர் ஆப்பை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கூடிய விரைவில்..இந்த நிலைமை தலைகீழாய் மாறப்போகிறது!

ஏனென்றால் கூகுள் நிறுவனமானது லுக்அப் (LookUp) என்கிற புதிய டூலை அதன் போன் ஆப்பில் சேர்க்கவுள்ளது. கூகுளின் இந்த டூல் ஆனது தெரியாத அல்லது காண்டாக்ட் லிஸ்ட்டில் சேமிக்கப்படாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காட்டி, அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்பை ஏற்க வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா என்பதை தீர்மானம் செய்ய உதவும்.
ஒருவேளை அது மிஸ்டு கால் (Missed Call) ஆகி இருந்தால்.. பயனர்கள் மீண்டும் அந்த எண்ணிற்கு அழைக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் உதவும். அதாவது ட்ரூகாலர் ஆப்பில் அணுக கிடைக்கும். அன்நோன் நம்பர்களை ஐடென்டிட்டிஃபை (Identify unknown numbers) செய்யும் அம்சம் கூகுள் போன் ஆப்பிற்கும் வரவுள்ளது.

கூகுளின் இந்த நடவடிக்கை ட்ரூகாலர் ஆப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம், மேலும் கூகுள் போன் ஆப்பை டீஃபால்ட் போன் கால் ஆப் ஆக செட் செய்யும் பயனர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். ஆனால் தற்போது வரையிலாக இந்த டூல் கூகுள் போன் ஆப்பின் பீட்டா வெர்ஷன் (127.0.620688474) வழியாக சோதனை கட்டத்தில் மட்டுமே உள்ளது.
லுக்அப் டூல் ஆனது எப்போது அனைவருக்கும் வந்து சேரும் என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை. இருப்பினும், பீட்டா டெஸ்டிங் முடிந்ததும், ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் அடுத்த பிக்சல் பீச்சர் ட்ராப் அப்டேட்டில் (Pixel Feature Drop update) இந்த டூல் சேர்க்கப்படலாம்.

ட்ரூகாலர் ஆப்பிற்கு எதிராக கூகுள் நிறுவனம் வேலை செய்ய.. கூகுளுக்கு எதிராக பல நிறுவனங்கள் வேலை செய்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது அதன் ஏஐ-பவர்டு சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்த இனிமேல் அக்கவுண்ட் தேவை இல்லை, லாக்-இன் செய்ய தேவையில்லை என்று அறிவித்திருந்தது.
185 நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சாட்ஜிபிடி-ஐ இனிமேல் அக்கவுண்ட் இல்லமால் அணுகலாம் என்கிற அறிவிப்பானது, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ-க்கு (Gemini AI) எதிரான ஒரு பெரிய நடவடிக்கை ஆகும். இதன் மூலம் ஜெனெரேட்டிவ் ஏஐ சாட்பாட்களை இன்னும் எளிமையாக அணுக முடியும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக.. டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் எக்ஸ் (X) ஆகிய நிறுவனங்களின் சொந்தக்காரர் ஆன எலான் மஸ்க் (Elon Musk), தனது சொந்த ஏஐ சாட்பாட் ஆன க்ரோக் ஏஐ-ன் இரண்டாவது வெர்ஷன் (Grok 2 AI) தற்போது பயிற்சியில் இருப்பதாகவும், அது பொது வெளிக்கு வரும்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்றும் கூறி இருந்தார்.
மேலும் ஓப்பன் சோர்ஸ் (Open Source) ஆக்கப்பட்டுள்ள க்ரோக் ஏஐ-யின் 1.5 வெர்ஷன் (Grok AI 1.5 Version) ஆனது கூடிய விரைவில் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அணுக கிடைக்கும் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக கூகுளின் ஜெமினி ஏஐ-க்கும், ஓப்பன் ஏஐ-யின் சாட்ஜிபிடி-க்கும் போட்டியாக தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ.. அதை எல்லாம் "கண்ணும் கருத்துமாக" செய்து வருகிறார் - எலான் மஸ்க்!


Click it and Unblock the Notifications