சரியான நேரத்தில் கூகுள் நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதி.!

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் வேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இந்நிலையில் பயனர்களுக்கு தங்கள் அருகாமையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் தேடுதளம் வழங்க உள்ளது.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

அதாவது கூகுள் நிறுவனம் சார்பில் வெளியிட்ட தகவலின்படி, கூகுள் சர்ச்,அசிஸ்டன்ட் போன்ற பிரிவுகளுக்கு சென்றால் கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை தான் கூகுள் வழங்க உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உதவியுடன்

மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் இந்த சேவையை வழங்க உள்ளோம். பின்பு கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறன், பின்பு பாதுகாப்பு தன்மை, பக்க விளைவுகள் என்னென்ன? போன்ற தகவல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 6 இந்திய மொழிகளில் வழங்கி வருகிறோம் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

வெளியானது சாம்சங் கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் விலை.!வெளியானது சாம்சங் கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் விலை.!

எங்கள் தளம் மூலம்

பின்பு இந்த கொரோனா தடுப்பூசி தொடர்பான பல்வேறு சந்தேங்களுக்கு எங்கள் தளம் மூலம் விளக்கம் பெறவும் நடவடிக்கை எடுகப்பட்டு வருகிறது என கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மொபைல் புகைப்படத்தின் புதிய சகாப்தம்: வரலாறு பதித்த ஹாசல்பிளாட் உடன் ஒன்பிளஸ் கூட்டு-எப்படி இருக்கும் தெரியுமாமொபைல் புகைப்படத்தின் புதிய சகாப்தம்: வரலாறு பதித்த ஹாசல்பிளாட் உடன் ஒன்பிளஸ் கூட்டு-எப்படி இருக்கும் தெரியுமா

கூகுள் மேப்ஸ்

மேலும் இதற்குமுன்பு வந்த தகவலின்படி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் மேப்ஸ் புதிய டார்க் மோட் ஆப்ஷனை வழங்க இருக்கிறது. இந்த அம்சம் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ரிலீஸ் ஆனதும் மிரட்டலான அப்டேட்டை வெளியிட்ட ஆசஸ்.. ROG ​​போன் 5 விலை இது தான்..ரிலீஸ் ஆனதும் மிரட்டலான அப்டேட்டை வெளியிட்ட ஆசஸ்.. ROG ​​போன் 5 விலை இது தான்..

டார்க் மோட்

டார்க் மோட்

கடந்த சில மாதங்கள் டார்க் மோட் ஆப்ஷனை பரிசோதனை செய்து வந்தது கூகுள் நிறுவனம். இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரி ஆயுள்

பேட்டரி ஆயுள்

ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த டார்க் மோட் ஆப்ஷனை எனேபில் செய்வதால் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் கண்டிப்பாக சேமிக்கப்படும். பின்பு இதில் உள்ள கிரேஸ்கேல் இன்டர்பேஸ் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் செயலியில் டார்க் மோட் தவிர மேலும் சில புதிய அம்சங்களை இணைத்து உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் பல புதிய அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

சும்மா இல்லங்க., 70% வரை தள்ளுபடி: அமேசான் பவர்பேங்க்ஸ் தின விற்பனை., யோசிக்காம இப்ப வாங்கலாம்!சும்மா இல்லங்க., 70% வரை தள்ளுபடி: அமேசான் பவர்பேங்க்ஸ் தின விற்பனை., யோசிக்காம இப்ப வாங்கலாம்!

கூகுள் நிறுவனம் ஆண்

மேலும் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டில் உள்ள பாஸ்வேர்டு செக்கப் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் புதிய மாற்றங்களை செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்ஸ் டார்க் மோட் ஆப்ஷன் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google to help people find vaccination centers! How do you know?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X