ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன! இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்!

|

கூகுள் அறிவித்துள்ள புதிய அறிவிப்பின்படி, கூகுள் குரோம் வெப் பிரவுசரில் உள்ள இன்காக்னிடோ மோடில் ஒரு லூப்ஹோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் இன்காக்னிடோ மோடில் சர்ஃப் செய்யும் எந்த வலைத்தளமும் பிரைவேட் ஆகாது என்பதே நிஜம்.

இன்காக்னிடோ பயன்படுத்த முக்கிய காரணம்

இன்காக்னிடோ பயன்படுத்த முக்கிய காரணம்

கூகுள் குரோம் பயனராக இருந்தாலும் சரி, மொஜிலா ஃபாக்ஸ் பயனராக இருந்தாலும் சரி, அனைவரும் இன்காக்னிடோ மோடு சேவையைப் பயன்படுத்தாமல் இருந்திருக்க முடியாது. Browse Invincible என்ற இந்த வார்த்தை தான் அனைவரும் இன்காக்னிடோ மோடு சேவையை பயன்படுத்த ஒரு முக்கிய காரணம்.

பிரைவேட்டாக இணையம் பயன்படுத்தலாம்

பிரைவேட்டாக இணையம் பயன்படுத்தலாம்

இன்காக்னிடோ மோடு சேவையைப் பயனர் பயன்படுத்தும் பொழுது, பிரவுசர் ஹிஸ்டரி போன்ற தகவல்கள் சேமிக்கப்படமாட்டாது, அதேபோல் வலைத்தள கேச்சி(cache) மற்றும் குக்கீஸ்(cookies) உங்கள் சாதனத்தில் சேவ் ஆகாது என்ற காரணத்தினாலும், முக்கியமாக பிரைவேட்டாக இணையம் பயன்படுத்தலாம் என்பதனாலும் மட்டுமே இன்காக்னிடோ மோடைப் பயன்படுத்துகிறோம்.

<span style=தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு - ஜூலை 22 ஆம் தேதிக்கு பின் டிக்டாக் தடை செய்யப்படலாம்!" title="தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு - ஜூலை 22 ஆம் தேதிக்கு பின் டிக்டாக் தடை செய்யப்படலாம்!" loading="lazy" width="100" height="56" />தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு - ஜூலை 22 ஆம் தேதிக்கு பின் டிக்டாக் தடை செய்யப்படலாம்!

போட்டு உடைக்கப்பட்ட உண்மை

போட்டு உடைக்கப்பட்ட உண்மை

ஆனால், தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த லூப்ஹோலால் நீங்கள் பிரைவேட் பிரவுசிங் செய்கிறீர்களா அல்லது சாதாரணமாக பிரவுசிங் செய்கிறீர்களா என்பதை நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்களால் கண்டறியமுடியும் என்பதே உண்மை. இதுவரை நீங்கள் இன்காக்னிடோ மோடில் செய்துவந்த அனைத்து செயல்களும் பிரைவேட் இல்லை என்று போட்டு உடைக்கப்பட்டுள்ளது.

எதுவும் பிரைவேட் இல்லை

எதுவும் பிரைவேட் இல்லை

இன்காக்னிடோ மோடில், Chrome's Filesystem எனப்படும் API சேவை டிசேபிள் செய்யப்படும். இதன் மூலம்தான் பிரவுசரில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் நமது சாதனத்தில் சேமிக்கப்படாமல் இருக்கும். ஆனால், இதை வைத்து நீங்கள் பிரைவேட் பிரவுசிங் செய்கிறீர்களா என்பதை இணையதளங்களால் எளிதாகக் கண்டறிய முடியும்.

<span style=விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.! " title="விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.! " loading="lazy" width="100" height="56" />விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.!

ஆபாச வலைத்தளங்கள்

ஆபாச வலைத்தளங்கள்

93% பயனர்கள் ஆபாச வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே இன்காக்னிடோ மோடு சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன

ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன

இன்காக்னிட்டோ மோடில் உள்ள லூப்ஹோல் மூலம் ஆபாச இணையதளங்கள் பயனாளர்களின் தகவல்களைச் சேகரித்து மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு அவற்றை விற்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.

<span style=உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ! " title="உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ! " loading="lazy" width="100" height="56" />உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ!

இதற்கான தீர்வு!

இதற்கான தீர்வு!

அண்மையில் தான் கூகுள் நிறுவனம் இந்த லூப்ஹோல் பற்றி அறிந்துள்ளது, நிலைமையைச் சரி செய்ய உடனடியாக நடவடிக்கையையும் எடுத்துள்ளது. கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 30 ஆம் தேதி வரவிருக்கும் குரோம்76 அப்டேட்டில் இந்த இன்காக்னிடோ மோடு லூப்ஹோல் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google to Fix Chrome Incognito Loophole : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X