இத பண்ணலனா உங்க Gmail அக்கவுண்ட் காலி.. டிசம்பர் வரை கெடு.. கூகுள் அதிரடி அறிவிப்பு
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் (Gmail) அக்கவுண்ட்கள் நிரந்தரமாக டெலிட் (Delete) செய்யப்படும் என்று கூகுள் (Google) நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. யாரேனும், அப்படி ஜிமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல், இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
இன்றைய காலத்தில் ஒருவருக்கு ஜிமெயில் அக்கவுண்ட் எவ்வளவு முக்கியம் என்று சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என்றாலே ஜிமெயில் கட்டாயமாக தேவைப்படுப்படுகிறது. இதனால், கூகுள் நிறுவனத்துக்கு நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்களை கூகுள் நிறுவனம் கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் மூலம் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இலவசம் என்பதால், கூகுள் அக்கவுண்ட் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை தொடங்கினால் போதும், கூகுள் நிறுவனத்தின் யூடியூப் (YouTube), குரோம் (Chrome), பிளே ஸ்டோர் (Play Store), டாக்ஸ் (Docs), சீட்ஸ் (Sheets), மேப்ஸ் (Maps) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இப்படிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்டை 24 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்தால், அந்த அக்கவுண்ட் நிரந்தரமாக நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படி நீக்கும் பணி வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிமெயில் பயனர்கள் சற்று பரபரப்பு அடைந்துள்ளனர். இவர்களிடையே பல்வேறு குழப்பங்களும் எழுந்துள்ளன.
இப்போது நீக்கப்படுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? ஏற்கனவே 24 மாதங்கள் பயன்படுத்தவில்லை, இப்போது மீண்டும் பயன்படுத்தினால் நீக்கப்படுவதை தவிர்க்கலாமா? என்று பல சந்தேகங்களும் எழுந்துள்ளன. இதுபோன்ற சந்தேகங்களுக்கு கூகுள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எங்கள் நிறுவனத்தின் இன்ஆக்டிவ் கூகுள் அக்கவுண்ட் பாலிசியின் படி இரண்டு ஆண்டுகளாக பயன்பாடுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில்களை நிரந்தரமாக நீக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த பாலிசியின்படி ஜிமெயில் (Gmail), டாக்ஸ் (Docs), டிரைவ் (Drive), மீட் (Meet), காலண்டர் (Calendar), யூடியூப் (YouTube), கூகுள் போட்டோஸ் (Google Photos) ஆகியவை நிரந்தரமாக நீக்கப்பட்டுவிடும். இந்த பாலிசி வரும் டிசம்பர் மாதம் வரையில் நடைமுறைக்கு வராது. இந்த காலக்கெடுவுக்குள் ஜிமெயில் பயனர்கள் தங்களின் அக்கவுண்ட்களை பயன்படுத்த தொடங்கலாம்.
அதாவது, ஒருவர் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருந்தால், குறைந்தது 24 மாதங்களுக்கு ஒரு முறை அதை பயன்படுத்த வேண்டும். சொல்லப்போனால், லாகின் செய்தால் மட்டும் போதும், இதை செய்ய தவறும்பட்சத்தில் அக்கவுண்ட் நீக்கப்படும். இந்த நீக்கப்பட்ட அக்கவுண்ட் பெயரில் மீண்டும் புதிதாக எந்த அக்கவுண்ட்டும் தொடங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் ஜிமெயிலை பயன்படுத்தவில்லை என்றாலும், டிசம்பருக்குள் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்பின் பயன்படுத்த முடியாது. ஆகவே, பழைய அக்கவுண்ட்டில் ஏதேனும் முக்கிய டேட்டாக்களை வைத்திருந்தால் டிசம்பர் மாதத்திற்குள், மீட்டுக் கொள்ளுங்கள் அல்லது அந்த அக்கவுண்ட்களை 24 மாதங்களுக்கு ஒருமுறை லாகின் செய்துவிடுங்கள்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








