Gmail கணக்கு இருக்கா? கூகுள் கொடுத்த வார்னிங்.. உடனே இந்த விஷயத்தை கொஞ்சம் கவனிங்க.. இல்லன்னா சிக்கல் ஆயிடும்!
உலகம் முழுவதும் கூகுள் (google) நிறுவனத்தின் ஜிமெயில் சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பான் கார்டு, ஆதார் கார்டு, பேங்க் அக்கவுண்ட் என அனைத்திற்கும் ஜிமெயில் (gmail) கணக்கு தேவைப்படுகிறது. இதுதவிர மாணவர்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், முதியவர்கள் என அனைவரும் ஜிமெயில் கணக்கைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜிமெயில் பயன்படுத்தும் பயனர்களுக்கு கூகுள் நிறுவனம் ஒரு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிகரித்து வரும் ஹேக்கிங் முயற்சிகள் காரணமாக, அனைத்து ஜிமெயில் பயனர்களும் உடனே தங்கள் கடவுச்சொற்களை (Passwords)புதுப்பிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

அதுவும் ஜிமெயில் கணக்குகளைப் பாதுகாக்க உடனே கடவுச்சொற்களை வலுப்படுத்த வேண்டும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு ஜிமெயில் கணக்குளை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்கக் கடவுச்சொற்களுக்குப் பதிலாக பாஸ்கீக்களை (passkeys) கூட பயன்படுத்துவது மிகவும் நல்லது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது சமீபத்தில் 1.8 பில்லியன் ஜிமெயில் வாடிக்கையாளர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் சைபர் தாக்குதல்கள் குறித்து கூகுள் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்தது. குறிப்பாக Indirect Prompt Injections எனப்படும் ஒரு புதிய வகை சைபர் அச்சுறுத்தல் குறித்து கூகுள் தனது பயனர்களை எச்சரித்துள்ளது.
இந்த புதிய வகை சைபர் அச்சுறுத்தல் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களை ஒரே நேரத்தில் ஆபத்தில் ஆழ்த்துகிறது என கூகுள் நிறுவனம் விளக்கியது. பின்பு கூகுளின் சேல்ஸ்ஃபோர்ஸ் டேட்டாபேஸ் ஆனது ஹேக் செய்யப்பட்டதால் 2.5 பில்லியன் ஜிமெயில் பயனர்கள் இப்போது ஆபத்தில் உள்ளனர் என்றும் சமீபத்தில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
குறிப்பாக சைபர் குற்றவாளிகள், கூகுளின் ஆதரவு ஊழியர்கள் போலவே நடித்து மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் கணக்குதாரர்களை குறிவைப்பதாகவும் மற்றொரு எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடவுச்சொற்களை கொண்ட கூகுள் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது பொதுவானதாகிவிட்டதால், ஜிமெயில் பயனர்கள் தங்கள் கடவுச்சொற்கை வலுப்படுத்த வேண்டும் எனக் கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்கள் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும் என்று கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பின்பு ஜிமெயில் பயனர்கள் எஸ்எம்எஸ் தவிர்த்து, டூ-ஃபேக்டர் ஆதெண்டிகேஷனைப் (two-factor authentication) பயன்படுத்தவும். இதுதவிர அதிக பாதுகாப்பு உள்நுழைவு முறைக்கு பாஸ்கீக்களை உருவாக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜிமெயில் பயன்படுத்தும் அதிக பயனர்கள் இன்னும் பாஸ்கீக்களை அமைக்காமல் கடவுச்சொற்களை மட்டுமே பயன்படுத்தி உள்நுழைகிறார்கள். ஆனால் இந்த கடவுச்சொற்களை பயன்படுத்தி ஜிமெயிலில் உள்நுழைபவர்கள், ஹேக்கர்களால் எளிதில் கண்டறிய முடியாத வலுவான கடவுச்சொற்களை உருவாக்க வேண்டும். மேலும் பல பேஸ்புக் இன்ஸ்டா, ஜிமெயில் போன்ற வெவ்வேறு தளங்களுக்கும் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவது ஹேக்கர்களுக்கு எளிதாக்குகிறது. எனவே, அத்தகைய நடைமுறையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
தற்போது ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் கடவுச்சொற்களைத் தொடர்ந்து புதுப்பிக்கிறார்கள். எனவே ஜிமெயில் பயன்படுத்தும் மக்கள் தொடர்ந்த கடவுச்சொற்களைப் புதுப்பிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். பின்பு கூகுள் கணக்குகளில் உள்நுழைய பாஸ்கீக்கள் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பான வழி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








