கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்: டாஸ்க்மேட் ஆப் முழு விவரம்- வீட்டில் இருந்தே வேலை!

|

கூகுள் டாஸ்க் மேட் தற்போது இந்தியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது தொலைபேசியின் மூலம் எளிய பணிகளை மேற்கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கூகுள் டாஸ்க் மேட் ஆப்

கூகுள் டாஸ்க் மேட் ஆப்

கூகுள் டாஸ்க் மேட் இந்தியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது எளிய பணிகளை செய்து பணம் சம்பாதிக்க அனுமதிக்கும். டாஸ்க் மேட்டில் பணிகளை முடிக்கும் பயனர்களுக்கு உள்ளூர் நாணயத்திலேயே பணம் வழங்கப்படும். பயன்பாடு தற்போது பீட்டா பதிப்பில் இருக்கிறது.

இரண்டு வகைகளில் பணி

இரண்டு வகைகளில் பணி

கூகுள் டாஸ்க் மேட் உலகம் முழுவதும் உள்ள வணிகங்களால் பதிவிடப்படும் பல பணிகளுக்கான அணுகலை வழங்கும் என கூறப்படுகிறது. இருந்த இடத்திலேயே பணி செய்வது, களம் சென்று பணி செய்வது என இரண்டு வகைகளில் பணி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மேப்பிங் விருப்பங்களை மேம்படுத்துதல்

மேப்பிங் விருப்பங்களை மேம்படுத்துதல்

களம் சென்று பணி செய்வது என்பது மேப்பிங் விருப்பங்களை மேம்படுத்தும் விதமாக உணவகம் உள்ளிட்ட கடைகளின் புகைப்படத்தை கிளிக் செய்வது அடங்கும். அதேபோல் உட்கார்ந்த இடத்தில் இருந்து செய்யும் பணிகளில் ஆங்கிலத்தில் இருக்கும் வார்த்தைகளை உள்ளூர் மொழிக்கு மொழி பெயர்த்து வழங்குவது, வாக்கியங்கள் பேசி பதிவு செய்தல் போன்றவை இருக்கும் என கூறப்படுகிறது.

டுவிட்டரில் டிரெண்டாகும் #BOYCOTTNETFLIX: சூட்டபிள் பாய் தொடரில் உள்ள சிக்கல் காட்சியால் பரபரப்பு!டுவிட்டரில் டிரெண்டாகும் #BOYCOTTNETFLIX: சூட்டபிள் பாய் தொடரில் உள்ள சிக்கல் காட்சியால் பரபரப்பு!

பீட்டா பதிப்பில் சோதனை

பீட்டா பதிப்பில் சோதனை

பீட்டா பதிப்பில் சோதனையில் இருக்கும் இந்த செயலி பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதில் எந்த மாதிரியான பணிகள் இருக்கும், பணிகளில் எப்படி சேருவது, பணத்தை எப்படி பெறுவது போன்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

டாஸ்க் மேட்டில் மூன்று படிகள்

டாஸ்க் மேட்டில் மூன்று படிகள்

9to5google தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. டாஸ்க் மேட்டில் மூன்று படிகள் உள்ளன. அருகில் உள்ள பணிகளை கண்டுபிடி, சம்பாதிக்க பணியை முடிக்கவும், வருவாயை பணமாக்கலாம் என்ற படிகள் உள்ளது. கூகுள் நேரடியாக பணியை கொடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தவிர்ப்பதற்கான தேர்வு விருப்பம்

தவிர்ப்பதற்கான தேர்வு விருப்பம்

ஒரு பணி முடிப்பதற்கு எவ்வளவு ஊதியம் என்பதையும் காணலாம் எனவும் பணியை தேர்வு செய்து முடிக்க முடியாவிட்டால் அதை தவிர்ப்பதற்கான தேர்வை கிளிக் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

source: ndtv.com

Best Mobiles in India

English summary
Google Task Mate App: You Can Earn Money by Doing Simple Task

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X