Home
News

ஸ்க்ரீனை தொடாமலேயே ஸ்க்ரீன் ஷார்ட்.. Google-ன் புதிய ஷார்ட்கட்.. Gemini தான் இனி AI கிங்கு!

சீனாவில் இருந்து வந்த டீப்சீக் ஏஐ (DeepSeek AI) ஆனது கூகுள் ஜெமினை (Google Gemini), சாட்ஜிபிடி (ChatGPT) உட்பட மற்ற எல்லா ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்களையும் தூக்கி சாப்பிடும் என்கிற பேச்சுக்கள் மேலோங்கி உள்ள நிலையில்.. "நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா!" என்று கெத்தாக கூறும்படியான ஒரு வேலையை பார்த்துள்ளது, சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் நிறுவனம்!

கூகுள் தனது ஜெமினை லைவ் (Gemini Live) அம்சத்திற்கான புதிய ஷார்ட்கட்டை (New Shortcut) உருவாக்கி வருகிறது. கூகுள் நிறுவனம் இந்த ஷார்ட்கட்டை டால்க் லைவ் அபௌட் ஸ்க்ரீன் (Talk Live about screen) என்று அழைக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த கேலக்ஸி அன்பேக்டு 2025 (Galaxy Unpacked 2025) நிகழ்வில் கூட இந்த அம்சம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஸ்க்ரீனை தொடாமலேயே ஸ்க்ரீன் ஷார்ட்.. Google-ன் புதிய ஷார்ட்கட்!

இந்த ஷார்ட்கட், உங்களுடைய ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் உள்ளதை பற்றி ஜெமினையுடன் நீங்கள் இருவழி உரையாடல்களை (Two-way voice conversations) நிகழ்த்த அனுமதிக்கும். இதற்காக, இந்த ஷார்ட்கட் ஆனது ஆட்டோமேட்டிக் ஆக ஸ்கிரீன்ஷாட்டை கேப்சர் செய்து, அதை ஜெமினை உடன் ஷேர் செய்து, ஜெமினை லைவ் உடனான உரையாடலை தொடங்கும்.

இதோடு சேர்த்து, விரைவாக படம்பிடிப்பதற்கான கேமரா ஷார்ட்கட் (Camera Shortcut) ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிகழ்ந்து கொண்டு இருக்கும் உரையாடலில் இருந்து வெளியேறாமல் ஜெமினி லைவ்விடம் அந்த புகைப்படத்தை பற்றியும் கேள்விகளை கேட்கலாம். இந்த அம்சங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அசெம்பிள்டீபக் (AssembleDebug).

அசெம்பிள்டீபக் வழியாக, கூகுளின் புதிய டால்க் லைவ் அபௌட் ஸ்க்ரீன் ஷார்ட்கட் குறித்த ஸ்க்ரீன்ஷாட்டும், மேற்கண்ட 2 அம்சங்களை குறித்த விவரங்களும் நமக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம், இந்த டால்க் லைவ் அபௌட் ஸ்க்ரீன் அம்சமானது சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் (Samsung Galaxy S25 Series) ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வரும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

டிப்ஸ்டர் அசெம்பிள்டீபக், இந்த ஷார்ட்கட்டை எப்படி கண்டுபிடித்தார் என்பதை வெளிப்படுத்தவில்லை. பெரும்பாலும் இதை அவர் கூகுள் அல்லது ஜெமினை ஆப்ஸின் லேட்டஸ்ட் பீட்டாவில் (Google or Gemini Latest Beta) கண்டுபிடித்து இருக்கலாம். இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஜெமினை ஓவர்லேவின் (Redesigned Gemini Overlay) மேலே இந்த ஷார்ட்கட் தோன்றுகிறது.

ஒரு பயனர் ஜெமினி ஏஐ அசிஸ்டன்ட்டை ஆக்டிவேட் செய்யும் போது, ஸ்க்ரீனின் இடதுபுறத்தில் ​செவ்வக வடிவிலான ஒரு டேப் பிளஸ் ஐகானுடன் தோன்றும்; வலதுபுறத்தில் மைக்ரோஃபோன் மற்றும் ஜெமினை லைவ்-க்கான ஐகான்கள்தோன்றும். ஆஸ்க் ஜெமினை பாரின் மேலே, டால்க் லைவ் அபௌட் ஸ்க்ரீன் ஐகான் உள்ளது. இது ஸ்க்ரீனின் குவிக் ஸ்கிரீன்ஷாட்டை கேப்சர் செய்ய ஏஐ-ஐ அனுமதிக்கிறது.

பயனர்கள் தங்கள் கேள்விகளை டைப் செய்தும் கூட கேட்கலாம். ஆனால் இப்போதைக்கு, சாட்பாட் உடனான நேரலை உரையாடலின் போது இதை செய்ய சாத்தியமில்லை. இந்த பிரச்சனையை தீர்க்கவே டால்க் லைவ் அபௌட் ஸ்க்ரீன் அம்சம் வருகிறது. இது பரந்த அளவில் அறிமுகமானதும் ஸ்க்ரீன்ஷாட்டில் உள்ளதை பற்றி ஏஐ-இடம் வாய்மொழியாக கேள்விகள் கேட்கவும், சாட்பாட்டிலிருந்து நிகழ்நேர பதில்களையும் பெறவும் அனுமதிக்கும்.

கூகுள் நிறுவனமானது இந்த அம்சத்திற்கான வெளியீட்டு தேதியை இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் இது கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஜெமினை லைவ் மற்றொரு அப்டேட்டையும் பெறுகிறது. இது யூட்யூப் வீடியோ அல்லது டாக்குமெண்ட்டை பற்றிய நேரடி உரையாடல்களை செய்ய பயனர்களை அனுமதிக்கும். இந்த செயல்பாடு ஏஐ சாட்பாட்டிலும் பிற்காலத்தில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Source / Photo Courtesy: AssembleDebug (Shiv) @AssembleDebug

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Talk Live About Screen Shortcut Gemini Live Automatically Capture Screenshot For Conversation
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X