சோனி விஆர் வல்லுனரை தன்னுடன் இணைத்து கொண்ட கூகுள்.!

கடந்த திங்கள் அன்று வெளியான செய்திகளின்படி ரிச்சர்ட் மார்க் கூகுள் நிறுவனத்தின் அட்வான்ஸ் டெக்னாலஜி மற்றும் புரொஜக்ட் குரூப் பிரிவில் இணைந்துள்ளார்.

|

சியர்ச் எஞ்சின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் அவ்வப்போது பயனாளிகளுக்காக புதுமையை புகுத்தி வரும் நிலையில் தற்போது கேமிங் பிசினசில் காலடி வைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரிச்சர்ட் மார்க்ஸ் என்பவருடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்தான் சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் விர்ட்டியூவல் ரியாலிட்டிக்கு தலைமை தாங்கி அதன் பிளே ஸ்டேஷன் மூவ் கண்ட்ரோலராக இருந்தவர் என்று பிரபல இணையதளம் ஒன்று அறிவித்துள்ளது.

சோனி விஆர் வல்லுனரை தன்னுடன் இணைத்து கொண்ட கூகுள்.!

கடந்த திங்கள் அன்று வெளியான செய்திகளின்படி ரிச்சர்ட் மார்க் கூகுள் நிறுவனத்தின் அட்வான்ஸ் டெக்னாலஜி மற்றும் புரொஜக்ட் குரூப் பிரிவில் இணைந்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் விஞ்ஞானம் மற்றும் அப்ளிகேசன் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள், மேலும் அவற்றில் என்னென்ன புதுமைகள் கொண்டு வரலாம், எதை எதை நீக்கலாம் என்பது குறித்த தனது அனுபவத்தின் மூலம் செயல்படுவதற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார். இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு ஒன்று கூறியதாவது: 'மார்க் அவர்கள் எங்களுடைய சீனியர் குழுவுடன் இணைந்தது பெருமைகுரியது என்றும் எங்கள் இலக்குகளை அடைய அவர் உறுதுணையாக இருப்பார் என்றும் கூறியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீம் கேம்ஸ் பிரிவான 'எட்டி' என்ற கேம்ஸ் குழு இனி புத்துணர்ச்சி பெறும் கூகுள் நிறுவனத்திடம் இருந்து இனி புத்தம் புதிய பல கேம்ஸ்களை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிகிறது.

சோனி விஆர் வல்லுனரை தன்னுடன் இணைத்து கொண்ட கூகுள்.!

கடந்த 1999ஆம் ஆண்டு சோனி நிறுவனத்தில் அவர் பணியாற்றி கொண்டிருந்தபோது போது சோனியின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'ஐடாய்' மற்றும் பிளே ஸ்டேஷன் ஐ கேமிரா ஆகியவற்றை உருவாக்கினார். கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான முதல் பிளே ஸ்டேஷன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் அவர் 'பிளே ஸ்டெஷ விஆர்' உருவாகுவதற்காக உதவி செய்தார் என்பதும், அதுமட்டுமின்றி கடந்த 2016ஆம் ஆண்டு 'பிளே ஸ்டேஷன் 4' உருவாகுவதற்கும் அவர்தான் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் சோனி நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் துணை தலைவராகவும் ஜெனரல் மேனேஜரகவும் இருந்த பில் ஹாரிசன் என்பவரை கூகுள் நிறுவனம் தன்னுடன் இணைத்து கொண்டது.

சோனி விஆர் வல்லுனரை தன்னுடன் இணைத்து கொண்ட கூகுள்.!

அவர் மட்டுமின்றி அவருடன் மேலும் சில பிளே ஸ்டேஷன் வல்லுனர்களை கூகுள் தன்னுடைய நிறுவனத்துடன் இணைத்தது அவர்களில் ஜாக் பசர், கிரேக் கனேசா ஆகியோர் அடங்குவர். இவர்கள் முன்னாள் பிளெ ஸ்டேஷன் தலைமையாளர் மற்றும் எக்ஸ்பாக்ஸ் லைவ் நிறுவனத்தின் முக்கியமானவர்கள் ஆவர். ஆனால் ரிச்சர்ட் மார்க் கூகுள் நிறுவனத்துடன் இணைந்த பின்னர் அவரிடம் இருந்து இதுவரை எந்தவித கருத்துக்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google takes Sonys VR expert on board: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X