Home
News

நீங்க ஆன்லைன் லோன் வாங்கிருக்கீங்களா.. 3,500 லோன் ஆப்ஸ்களுக்கு ஆப்பு.. Google Play Store தாடாலடி

நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) லோன் ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து கடன் பெற்றிருக்கும் பட்சத்தில் உங்களது ஆப்ஸ் முடக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3,500 லோன் ஆப்ஸ்களை முடக்க கூகுள் பிளோ ஸ்டோர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்த விவரங்கள் இதோ.

இந்தியாவில் பெரும் வங்கி நிறுவனங்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் சேவையை வழங்கி வந்தன. ஆனால், இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. முன்பின் அறியாத தனியார் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன.

நீங்க ஆன்லைன் லோன் வாங்கிருக்கீங்களா.. 3,500 லோன் ஆப்ஸ்களுக்கு ஆப்பு!

இந்த கடன்கள் ஆன்லைன் மூலம் மிக எளிதாகவும், உடனடியாகவும் கிடைப்பதால் மக்களும் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி கடன் கொடுக்கும் நிறுவனங்களில் சில வட்டியை பெற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறது. குறிப்பாக, சட்ட விரோதமாக சைபர் குற்றங்களில் ஈடுபடுகிறது. அதாவது, ஒரு ஆன்லைன் லோன் ஆப்ஸ் மூலம் நீங்கள் கடன் வாங்குகிறீர்கள் என்றால், உங்களது போட்டோ உள்பட மொத்த விவரங்களையும் முதலில் அந்த நிறுவனம் பெற்றுக்கொள்கிறது.

அதன்பின் ஒரு கடன் தவணையை செலுத்த தவறினாலும், அதிகப்படியான வட்டியை கேட்கிறது. இதை கட்ட மறுத்தால், சிலர் கால் செய்து மிரட்டல் விடுகின்றனர். உங்களது உறவினர்களின் மொபைல் நம்பர்களுக்கு கால் செய்து உங்களை பற்றி அவதூறு பரப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல், உங்களது தனிப்பட்ட போட்டோகளை மார்பிங் செய்து, உங்களது நெருங்கிய உறவினர்களின் வாட்ஸ்அப் நம்பருக்கும் அனுப்புகின்றனர்.

இப்படி பல்லாயிரணக்கணக்கான சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. இதனால் பலர் தற்கொலை முடிவையும் எடுக்கின்றனர். இதைத்தடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. இதனை பின்பற்றாத லோன் ஆப்ஸ்களை முடக்கியும் வருகிறது. அதோபோல பெரும்பாலான ஆப்ஸ்கள் கிடைக்கும் கூகுள் பிளே ஸ்டோரிலும் கடன் ஆப்ஸ்களுக்கான விதிகளை கொண்டுவர வலியுறுத்தியது. அந்த வகையில், பிளே ஸ்டோரில் பல்வேறு விதிகள் அமல்படுத்தப்பட்டன.

இந்த விதிகளை பின்பற்றாத நிதி நிறுவனங்களின் லோன் ஆப்ஸ்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இந்தியாவில் ஆன்லைன் லோன் (Online Loan) வழங்குவதில் தங்களது விதிகளை மீறியதாக கூறி 3,500 லோன் ஆப்ஸ்களை (Loan Apps) கூகுள் பிளே ஸ்டோர் முடக்குவதற்கான பணிகளை செய்து வருகிறது.

அண்மையில் கூகுள் பிளே ஸ்டோரின் தனியுரிமை கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, கடன் வழங்கும் ஆப்ஸ்களுக்கு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுதல், அவற்றை பயன்படுத்துதல், தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்டவற்றில் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிகள் வரும் மே 31ஆம் 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும், முன்னதாகவே கூகுள் பிளே ஸ்டோர் விதிகளை பின்பற்றாத ஆப்ஸ்களின் பட்டியலை தயார் செய்து அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இந்த நடவடிக்கையை அடுத்தும், விதிகளை பின்பற்றாத ஆப்ஸ்களை முடக்க பிளே ஸ்டோர் பணிகளை செய்துவருகிறது.

அந்த வகையிலேயே 3,500 ஆப்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஆனால், இந்த ஆப்ஸ்களின் விவரங்களை வெளியிடப்படவில்லை. ஒருவேளை நீங்களும் பிளே ஸ்டோரின் டவுன்லோட் செய்த ஆப்ஸ்களில் கடன் வாங்கியிருந்தால், அந்த ஆப்ஸ் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வரும் மே 31ஆம் தேதி வரையில் அந்த ஆப்ஸ் நிறுவனங்களுக்கு விதிகளை பின்பற்ற கால அவசாகம் வழங்கப்படும். இல்லையென்றால் முடக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Google take action against policy violations loan apps in Google Play Store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X