5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா?

|

அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள், 2019 நான்காவது காலாண்டில் முன்னணி மொபைல் செயலிகள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக ஃபேஸ்புக்கை முந்தி முன்னேறி இருக்கிறது.

இணையவழி பொழுதுபோக்கில் தான் ஆர்வம்

இணையவழி பொழுதுபோக்கில் தான் ஆர்வம்

பொதுவாக இந்த காலக்கட்டத்தில் இணையவழி பொழுதுபோக்கில் தான் அனைவரும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அனைவரது கையிலும் மொபைல் போன் என்பது மூன்றாம் கை போல் உள்ளது. டிராவலிலும் சரி, பணி நேரத்திலும் சரி சமூகவலைதளங்களிலும், கேம் விளையாடுவதிலும் தான் நேரத்தை செலவிடுகிறார்கள்.

ஆன்லைன் கேமில் ஆர்வம்

ஆன்லைன் கேமில் ஆர்வம்

கேம்களை பொருத்தவரை சாதாரணமாக விளையாடுவதை விட ஆன்லைன் கேமில் நேரத்தை செலவிட்டால் எவ்வளவு நேரமாகிறது என்றே தெரியாது என கூறலாம். வீடியோ கேம் மட்டுமின்றி வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிக்டாக் என சமூகவலைதளங்களிலும் நேரம் கழிவதே தெரியாது என கூறலாம்.

செயலிகள் குறித்து ஆய்வு

செயலிகள் குறித்து ஆய்வு

இந்த நிலையில் உலக அளவில் எந்த செயலிகளை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர் என ஆய்வு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின்படி மட்டும் கடந்த காலாண்டில் கூகுள் செயலியை சுமார் 85 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர்.

ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி

ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி

அதே காலக்கட்டத்தில் ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னணி செயலிகள் பட்டியலை சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வில் கடந்த ஒரு வருட கணக்கில் ஃபேஸ்புக் முன்னணியில் உள்ளது.
கடந்த 12 மாதங்களில் ஃபேஸ்புக் செயலி சுமார் 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது.

230 கோடி பேர் டவுன்லோடு

230 கோடி பேர் டவுன்லோடு

கூகுள் செயலிகளை சுமார் 230 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். உலகம் முழுக்க அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலின் ஐந்தில் நான்கு செயலிகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமாக இருக்கின்றன.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர்

இவற்றில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவை இருக்கின்றன. பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி கடந்த ஆண்டின் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

வரலாறு காணாத அளவு வரவேற்பு பெற்ற டிக்டாக்

வரலாறு காணாத அளவு வரவேற்பு பெற்ற டிக்டாக்

2019 நான்காவது காலாண்டில் டிக்டாக் டவுன்லோடுகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு அதிகரித்தது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது நான்காவது காலாண்டில் டவுன்லோடுகள் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Surpasses Facebook in downloads for first time

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X