அடடா! ஜிமெயிலில் இதெல்லாம் பண்ணலாமா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

|

கூகுளின் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் பல்வேறு புதிய அம்சங்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்டன. இவை பயனரின் தகவல்களை பாதுகாப்பதோடு, மின்னஞ்சல் அனுப்புவோருக்கு கூடுதல் வசதிகளை வழங்குகிறது.

பல்வேறு தேவைகளுக்கு பிரதானமாக விளங்கும் ஜிமெயில்

பல்வேறு தேவைகளுக்கு பிரதானமாக விளங்கும் ஜிமெயில்

ஜிமெயில் என்பது பல்வேறு தேவைகளுக்கும் பிரதானமாக உள்ளது. பொதுவாக ஒரு சில முக்கிய விஷயங்களை நாம் ஜிமெயில் கணக்கு மூலமாகவே பெருகிறோம். ஜிமெயில் தங்களது வாடிக்கையாளர்களுக்கான பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

ஜிமெயில் அக்கவுன்ட் இல்லாதவர்கள் சிலரே

ஜிமெயில் அக்கவுன்ட் இல்லாதவர்கள் சிலரே

இந்த ஜிமெயிலை நாம் பல்வேறு பிரதான தேவைகளுக்கு பயன்படுத்திகிறோம். எடுத்துக்காட்டாக நமக்கு வேலை கொடுக்கும் நிறுவனத்தில் இருந்து ஆஃபர் லெட்டர் வந்தால், அதற்கு நாம் ஜிமெயில் மூலம் பதிலளிப்போம். அதேபோல் தாங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் என வேலை வழங்கும் நிறுவனங்கள் கேட்கும் அதற்கும் நாம் பதிலளிப்போம். இதுபோல் பல்வேறு தேவைகளுக்கு நாம் ஜிமெயிலை தான் பயன்படுத்துகிறோம்.

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்!அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்!

தவறாக மெயில் அனுப்பிவிடுவோம்

தவறாக மெயில் அனுப்பிவிடுவோம்

சில சமயங்களில் தவறாக மெயில் அனுப்பிவிடுவோம், அதேபோல் ஒரு செல்போனில் இரண்டு மூன்று மெயில் லாக் இன் செய்து வைத்திருக்கும் போது வேறு ஒரு மெயில் முகவரியில் இருந்து அனுப்புவோம். கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி நாம் நமது மெயில் ஐடியை பாதுகாப்பாக கையாளலாம்.

ஐகான்களை கிளிக் செய்ய வேண்டும்

ஐகான்களை கிளிக் செய்ய வேண்டும்

ஜிமெயில் அக்கவுன்டில் வழக்கம்போல் நுழைந்தவுடன் வலது மேல்புறத்தில் இருக்கும் ஐகான்களை கிளிக் செய்ய வேண்டும், அதில் ஜிமெயிலில் தேடல் பட்டியல் லேபிள்களை காட்டும், அதேபோல் அக்கவுண்ட், ஆட் ஆன் போன்ற பல்வேறு விருப்பங்களை காட்டும்.

ஜெனரல் ஆப்ஷன் வசதி காண்பிக்கும்

ஜெனரல் ஆப்ஷன் வசதி காண்பிக்கும்

இந்த பட்டியலில் நாம் ஜெனரல் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதில் அன்டூ சென்ட் ஆப்ஷன் வசதி காண்பிக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இதில் அனுப்பும் கால அளவை தேர்வு செய்ய அனுமதிக்கும் கிளிக் செய்ய வேண்டும்.

30 வினாடிகள் வரை வசதி

30 வினாடிகள் வரை வசதி

இதில் மெயில் அனுப்பும் காலத்தை ஐந்து வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை நமது தேவைக்கேற்ப கிளிக் செய்யலாம். அதன் கீழே கடைசியாக இருக்கும் சேவ் செய்ய வேண்டும். அதன்பின் சோதனை அஞ்சலை அனுப்பி நமக்கு தேவையானவை சோதிக்கலாம். இதில் அன்டூ விருபம்பம் நமக்கு காண்பிக்கிறதா என்பதை சோதித்து கொள்ளலாம்.

கான்ஃபிடென்ஷியல் மோட்

கான்ஃபிடென்ஷியல் மோட்

சமீபத்தில் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் அதிகம் பேசப்பட்ட கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) சேர்க்கப்பட்டது. மின்னஞ்சல் அனுப்புவோரின் தனியுரிமையை வழங்கியது. பெரும்பாலான பயனர்களால் அதிகம் விரும்பப்படும் அம்சமாக இருக்கும் இந்த வசதி இருந்தது.

சவால்: முடிந்தால் 15 வினாடியில் இங்கே ஒளிந்துள்ள பாம்பை கண்டுபிடியுங்கள்! வைரலாகும் படம்!சவால்: முடிந்தால் 15 வினாடியில் இங்கே ஒளிந்துள்ள பாம்பை கண்டுபிடியுங்கள்! வைரலாகும் படம்!

ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்கள்

ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்கள்

ஜிமெயில் தளத்தின் புதிய இன்டர்ஃபேஸ் கணினி மட்டுமின்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் கிடைக்கிறது. புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் மூலம் பயனர்கள் அனுப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு பாஸ்கோடு செட் செய்ய முடியும். இத்துடன் அதற்கான வேலிடிட்டி தேதியை செட் செய்தால், குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் மின்னஞ்சல் தானாகவே அழிந்து விடும். இந்த அம்சம் அதன் பயன்பாட்டாளர்களிடம் பெரிதளவு வரவேற்பு கிடைத்ததது.

Best Mobiles in India

English summary
Google supports undo features in gmail here how to use

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X