Google ஒரே போடு.. இனி Flipkart, Amazon மட்டுமில்ல.. Google Store இருக்கு.. ஆஃபர் விலைக்கு ஜூன்.30 கடைசி!
இந்தியாவில் இருக்கும் பிக்சல் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் பிரியர்களுக்கு கூகுள் (Google) நிறுவனமானது, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பிளிப்கார்ட், அமேசான் தளங்கள் மட்டுமல்லாமல், நேரடியாக கூகுள் ப்ராடெக்ட்களை வாங்கி கொள்ளும்படி அதிகாரப்பூர்வ கூகுள் ஸ்டோர் (Google Store) தளத்தை களமிறக்கி இருக்கிறது. இதுபோக குறைந்தபட்சம் ரூ.3,000 முதல் அதிகபட்சம் ரூ.44,000 வரையில் டிஸ்கவுண்ட்டை கொடுக்கிறது. அதேபோல ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த டிஸ்கவுண்ட்டை கொடுக்கிறது.
கூகிள் நிறுவனமானது, அதிகாரப்பூர்வமாக கூகிள் ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் கூகுளில் இருந்தே நேரடியாக ப்ராடெக்ட்களை வாங்க முடியும். ஆகவே, வழக்கமாக கிடைக்கும் பேமெண்ட் ஆப்ஷன்கள், கஸ்டமர் சப்போர்ட் ஆகியவற்றுடன் ஆத்தன்டிக் ப்ராடெக்ட்களை பெற்று கொள்ள முடியும். இதையே கூகுள் இந்தியா தெரிவித்து இருக்கிறது.

இதுபோக கூகுள் ஸ்டோர் எக்ஸ்சேஞ்ச் ப்ரொகிராம் (Google Store Exchange Program) மூலம் ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ் போன்ற பல்வேறு மாடல்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையை கொடுக்கிறது. இதற்காக கேஷிபை (Cashify) நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. புதிதாக கூகுள் ஸ்டோர் களமிறங்கி இருப்பதால், விலை குறைப்பு, டிஸ்கவுண்ட், போனஸ் சலுகைகளை கொடுக்கிறது.
அதேபோல அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் கிடைப்பதை போலவே உடனடி பேங்க் டிஸ்கவுண்ட், நோ-காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் யுபிஐ பேமெண்ட், நெட்பேங்கிங் போன்ற ஒட்டுமொத்த பேமெண்ட் ஆப்ஷன்களையும் கொடுக்கிறது. இதில் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு சலுகைகள் கிடைக்கின்றன. மற்ற பேங்க் கார்டுகளுக்கும் விரைவில் கிடைக்க இருக்கிறது.
எந்தெந்த மாடல்களுக்கு சலுகைகள்? கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) மாடலின் மார்கெட் விலை ரூ.49,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.46,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை மற்றும் ரூ.6,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. மேலும், ரூ,11,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) மாடலின் மார்கெட் விலை ரூ.79,999ஆக இருக்கிறது. ரூ.5,000 கூகுள் ஸ்டோர் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.7,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.67,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதற்கும் 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை மற்றும் ரூ.12,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. மேலும், ரூ.15,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு வருகிறது.
கூகுள் பிக்சல் 9 ப்ரோ (Google Pixel 9 Pro) மாடலின் மார்கெட் விலை ரூ.1,09,999ஆக இருக்கிறது. ரூ.10000 கூகுள் ஸ்டோர் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.10,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.89,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. முந்தைய மாடலை போலவே எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 9 Pro XL) மாடலின் விலை ரூ.1,24,999ஆக இருக்கிறது.
இப்போது, ரூ.10,000 கூகுள் ஸ்டோர் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.10,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.1,04,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. 24 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ, ரூ.12,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.15,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கிடைக்கிறது. கூகுள் பிக்சல் 9 ப்ரோ போல்டு (Google Pixel 9 Pro Fold) மாடலின் விலை ரூ.1,72,999ஆக இருக்கிறது.
இப்போது, ரூ.10,000 கூகுள் டிஸ்கவுண்ட், ரூ.10,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.1,04,999 பட்ஜெட்டில் வருகிறது. இந்த போனுக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. அதேபோல ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கிடைக்கிறது. 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ வருகிறது. கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) போனின் விலை ரூ.52,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.15,000 கூகுள் ஸ்டோர் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
அதேபோல ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.34,999 பட்ஜெட்டில் வருகிறது. 24 மாத நோ-காஸ்ட் ஈஎம்ஐ வருகிறது. கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro) மாடலின் விலை ரூ.1,06,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.37,000 கூகுள் ஸ்டோர் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.7,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.62,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. கூகுள் பிக்சல் வாட்ச் 3 (Google Pixel Watch 3) மாடலின் விலை ரூ.39,900ஆக இருக்கிறது.
அதேபோல கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 (Google Buds Pro 2) மாடலின் விலை ரூ.22,900ஆக இருக்கிறது. இந்த மாடல்களுக்கு டிஸ்கவுண்ட் கிடையாது. இருப்பினும், 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை மற்றும் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.3,000 கூகுள் ஸ்டோர் கிரெடிட் கிடைக்கிறது. இந்த விலைகளில் வாங்கி கொள்ள ஜூன் 30ஆம் தேதியே கடைசி நாளாகும். இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








