ஸ்தம்பித்தது Google! சுந்தர் பிச்சையை கடிந்த மக்கள்.! இந்தியாவுக்கு நேர்ந்த பரிதாபம்! என்னாச்சு தெரியுமா?
கூகிள் ஓபன் ஆகலை.. யூடியூப் ஓபன் ஆகலை.. ஜிமெயில், கூகுள் மீட்ஸ், டுவோ, வொர்க்ஸ்பேஸ், டாக்ஸ், ஷீட்னு எதுவுமே ஓபன் ஆகலை.. இன்டர்நெட் கோளாறு என்று நினைத்து வைஃபை டப்பாவை அடித்து, டேட்டா ஆப்ஷனை பலமுறை ஆஃப் செய்து ஆன் செய்த கோவக்காரர்களில் நீங்களும் ஒருவரா?
உங்களுக்கு மட்டும் இந்த கோளாறு எழுந்துள்ளதாக நினைத்து, கொஞ்ச நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பல விதமான வினோத முறைகளை எல்லாம் கையாண்டு டையர்டு ஆகிப்போனவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், நீங்கள் இன்று காலையில் திணறியதற்குக் காரணம் யார் என்று கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம் வேறு யாருமில்லை, நமது கூகுள் (Google) அண்ணே தான்.

அருகில் பெட்ரோல் பங்க் எங்குள்ளது? இன்று மழை வருமா? சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா? விதை இல்லாத தர்பூசணி விஷமா? இன்று தங்கத்தின் விலை என்ன? ரயில் டிக்கெட்டின் PNR ஸ்டேட்டஸ் என்னாச்சு? என்று கூகுள் சர்ச் பாரில் அடிக்கடி பல கோடி கேள்விகளை கேட்ட இந்தியர்களுக்கு இன்று மோசமான நாள். எதிர்பாராத விதமாகக் கூகுள் இன்று மொத்தமாக ஸ்தம்பித்துவிட்டது.
ஆம், மக்களே இந்திய நேரப்படி இன்று காலை 11:00 மணி வாக்கில், கூகுள் மற்றும் கூகுள் தொடர்பான சேவைகளை அணுக முயன்று பல கோடி மக்களுக்கு ஏமாற்றத்துடன், டென்சன் மட்டுமே மிஞ்சியது. தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் சேவைகள் இன்று காலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்த செயலிழப்பு கூகுள் சர்ச் என்ஜினில் மட்டுமில்லாமல் யூடியூப், கூகுள் டிரைவ், ஜிமெயில், போன்ற பல கூகுள் சேவைகளிலும் பாதிப்பு காணப்பட்டது.
முதலில் மக்கள், அனைவரும் அவர்களின் இன்டர்நெட்டில் எதோ கோளாறு என்று நினைத்துக் கொண்டனர். இதனால், கூகுள் பயனர்கள் அவர்களின் வைஃபை சிக்னல் மற்றும் மொபைல் சிக்னலில் கோளாறு என்று நினைத்து பலமுறை சாதனங்களை OFF செய்து மீண்டும் ON செய்து, கூகுள் சேவைகளை பயன்படுத்த முயன்றனர். இருப்பினும் கோளாறு சரியானதாகத் தெரியவில்லை. சந்தேகமடைந்த மக்கள் அனைவரும் உடனே டிவிட்டர் பக்கம் படையெடுத்தனர்.

கூகுள் சேவைகளில் கோளாறு இருப்பதாக, காலையில் மட்டும் சுமார் 2000-திற்கும் மேற்பட்ட புகார்கள் டிவிட்டரில் பதிவாக துவங்கியது. மக்கள் பலர், கூகுள் நிறுவனத்தை நேரடியாக டேக் செய்து, 502 என்று காணப்படும் கோளாறை பற்றி மக்கள் புகாரிட்டனர். கூகுளுக்கு சொந்தமான யூடியூப், டிரைவ், ஜிமெயில், டியோ, மீட், ஹேங்கவுட்ஸ், டாக்ஸ், ஷீட்ஸ் போன்ற கூகுளின் குடும்பத்தில் உள்ள ஆப்ஸ் மற்றும் இணையதளங்கள் அனைத்தும் செயலிழந்ததாகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டது.
புகார்கள் ஒரு புறம் வேகமாக பதிவான நேரத்தில், மீம்ஸ் கிரியேட்டர்கள் அவர்களின் வேலையையும் வேகமாகத் துவங்கிவிட்டனர். கூகுள் நிறுவனத்தைத் தாக்கும் விதத்தில், பல மீம்கள் டிவிட்டரில் பதிவானது. சிலர் கடுப்பில் சுந்தர் பிச்சையை கடிந்து கொண்டதும் பதிவாகியுள்ளது. அலுவலகத்தில் என்று அதிக வேலை இருக்கிறதோ அன்று தான் இப்படி சிக்கல் எல்லாம் நம்மை கடுப்பேற்றும் என்றும் சிலர் கமெண்ட் செய்து புலம்பியுள்ளனர்.
ஒரு சில மணி நேரத்தில் இந்த சிக்கல் சரி செய்யப்பட்டது என்றாலும், கூகுள் சேவை இயங்காத சிறிது நேரத்தில் மக்களுக்கு கிறுக்குப் பிடித்தது போல ஆகிவிட்டது. பெரும்பாலான குடும்பங்களில் யூடியூப் வேலை செய்யவில்லை என்றதும் குளறுபடியே உண்டானது. கூகுள் சேவைகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையுடன் எவ்வளவு ஒன்றிவிட்டது என்பது இதுபோன்ற நேரங்களில் தான் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.
எந்த கூகுள் சேவையை பயன்படுத்திய போது, இத்தகைய கோளாறை நீங்கள் கண்டறிந்தீர்கள் என்றும், கூகுள் ஸ்தம்பித்த நிமிடங்களில் உங்களுக்கு எந்தவிதமான சிக்கல்கள் எழுந்தது என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








