Google எச்சரிக்கை.. பேட்டரி தீப்பிடிக்கலாம்.. இந்த ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் உஷார்.. எந்த மாடல்?
பேட்டரி தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது என்று கூறி.. கூகுள் நிறுவனமானது அதன் பழைய பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை ரீகால் (Recall) செய்ய தொடங்கி உள்ளது. கூடவே குறிப்பிட்ட பிக்சல் மாடலை கொண்டுள்ளவர்கள், அதற்கு கிடைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த மாடல் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட - பிக்சல் 4ஏ (Pixel 4a) மாடலாகும். கூகுளின் இந்த சற்றே ஸ்மார்ட்போனுக்கு லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றின் காரணமாக ஆபத்து வந்துள்ளது. கடந்த ஜனவரி 2025 இல் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனிற்கு பேட்டரி பெர்பார்மென்ஸ் புரோகிராம் அப்டேட் (Battery Performance Program update) வெளியிடபட்டது.

இந்த சாப்ட்வேர் அப்டேட் ஆனது பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனில் ஒரு புதிய பேட்டரி மேலாண்மை அம்சத்தை கொடுக்கும்படி அமைக்கப்பட்டது. பழைய மாடலில் பேட்டரியின் செயல்திறனின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதே இதன் அப்டேட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது. இருப்பினும், பல பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி லைஃப் சிதைந்து போனதாக புகார் அளித்ததால் இது எதிர் விளைவை ஏற்படுத்தியது.
சில பயனர்கள் சில நிமிடங்களில் முழுமையான பேட்டரி டிஸ்சார்ஜை எதிர்கொண்டனர். எனவே கூகுள் அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கத்தில் ஒரு அறிக்கையை பகிர்ந்து கொண்டது. அது ஒரு எச்சரிக்கை ஆகும். அதன் வழியாக பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனிற்கு கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட் அந்த ஷார்ட் பேட்டரி லைஃப்பிற்கு வழிவகுக்கும் மற்றும் சார்ஜிங் செயல்திறனை குறைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச மின்னழுத்தம் 4.45V இலிருந்து 3.95V ஆகக் குறைக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இது பேட்டரி திறனில் 56 சதவீதம் குறைப்பை குறிக்கிறது. இதன் விளைவாக பேட்டரி செயல்திறன் குறைபாட்டை சந்தித்த, தேர்ந்தெடுக்கப்பட்ட பிக்சல் 4ஏ மாடல்களுக்கு இலவச பேட்டரி மாற்றீட்டை வழங்குவதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.
எப்போது வேண்டுமானாலும் பிக்சல் 9ஏ மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற சூழ்நிலையில்,பிக்சல் 4ஏ மாடலில் ஏற்பட்டுள்ள சிக்கல் வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பிக்சல் 9ஏ மாடல் ஆனது ஆப்பிளின் லேட்டஸ்ட் மற்றும் பட்ஜெட் விலை ஐபோன் ஆன ஐபோன் 16இ (Apple iPhone 16e) மாடலை விட மலிவான விலைக்கு வரும் என்றும், இது ஐபோன் 16இ மாடலின் விற்பனையை கடுமையாக சரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷன் ரூ.43,000 க்கும், 256ஜிபி வேரியண்ட் ரூ.51,800 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.59,900 க்கு வாங்க கிடைக்கும் ஐபோன் 16இ மாடலை விட மலிவான விலை நிர்ணயம் ஆகும். இது உண்மையாகும் பட்சத்தில் பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்கிற யோசனையில் உள்ளவர்கள் பிக்சல் 9ஏ பக்கம் சாய அதிக வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இது செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது பிக்சல் 9 சீரீஸில் உள்ள மற்ற மாடல்களை போலல்லாமல் ரெய்ஸ்டு கேமரா மாட்யூல் (Raised Camera Module) இல்லாத டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை (IP68 Rating) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கூகுள் ஜெமினி ஏஐ ஆதரவுடன் (Google Gemini AI Support) வரும் என்றும், கூகிளின் டென்சர் ஜி4 சிப்பால் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை 48 மெகாபிக்சல் பிரைமரி ரியர் கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 15 உடன் வரலாம். கடைசியாக 23W (வயர்டு) மற்றும் 7.5W (வயர்லெஸ்) சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,100mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








