குப்பனோ, சுப்பனோ இல்ல.. செக்யூரிட்டிக்கு ரூ.67 கோடி.. அப்போ இவரு சம்பளம்.. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வொர்த்!
ரூ.1 கோடி பணம் சேர்ப்பது என்பது இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான குடிமக்களின் வாழ்நாள் கனவாக இருக்கிறது. ஆனால், அதைவிட 66 மடங்கு அதிகமாக அதே இந்தியாவில் பிறந்த சுந்தர் பிச்சையின் செக்யூரிட்டிக்கான செலவுகள் மட்டுமே இருந்திருக்கிறது. டெக் ஜாம்பவானாக கொடிக்கட்டி பறக்கும் கூகுள் நிறுவனத்துக்கே முடிசூடா மன்னாக இருக்கும் இந்த சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் பிறந்த சுந்தர் பிச்சை 2004ஆம் ஆண்டு கூகுளின் தயாரிப்பு மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் தலைவராக பொறுப்பை ஏற்றார். இவரது உழைப்பின் வெளிபாடாக தயாரிப்பு மேம்பாட்டுத் துணைத் தலைவர், மூத்த துணைத் தலைவர் என்று பதவிகள் அவரை தேடி வந்தன. தவிர்க்க முடியாத டெக் மாஸ்டர் மைண்ட்டாக இருந்ததால், 2015ஆம் ஆண்டில் கூகிள் சிஇஓவாக பதவியேற்றார்.

2019ஆம் ஆண்டில் இருந்து ஆல்பாபெட் இன்க் (Alphabet Inc) சிஇஓவாகவும் கூடுதல் பொறுப்பை ஏற்றார். ஆல்பாபெட்டின் போர்டு மெம்பர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இப்படி உலகையே கைக்குள் வைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அவரது கைக்குள் அடங்கி வைத்திருக்கிறார். இவருக்கு அடுத்து யார் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல், அவரது தலைமை பண்பை காட்டி வருகிறார்.
ஏனென்றால், கூகுள் நிறுவனத்தின ஜெமினி (Gemini) ஆரம்ப கட்டத்தில் இருந்த போது, கறுப்பின மக்களின் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள், பிரதமர் மோடி குறித்த ஆட்சேபனைக்குரிய பதில்கள் போன்றவை பூதாகரமாக வெடித்தன. இந்திய அரசாங்கத்திடம், கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரிய சம்பவமும் அந்த நேரத்தில் நடந்தது. அப்போதுதான் சுந்தர் பிச்சையின் முக்கியத்துவத்தை உலகமே அறிந்தது.
அதாவது, இவ்வளவு சர்ச்சைகளுக்கு பிறகு கூகுள் சிஇஓவாக சுந்தர் பிச்சை நீடிப்பாரா என்ற கேள்வி எழத் தொடங்கியது. அவர் நிச்சயம் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று ஹீலியோஸ் கேப்பிட்டல் நிறுவனர் சமீர் அரோரா கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், கூகுள் நிறுவனம் அது குறித்த வாய் திறக்கவில்லை. கூகுள் இல்லை என்றால் என்ன, ஆப்பிள் இருக்கிறது என்று டிம் குக்குடன் அவர் இருக்கும் போட்டோக்கள் பரவின.
இது பழைய போட்டோவாக இருந்தாலும், சுந்தர் பிச்சைக்கு இருக்கும் பொட்டன்ஷியலை அது காட்டியது. இப்படிப்பட்ட இடத்தில் இருக்கும் சுந்தர் பிச்சை என்பவர் நிச்சயம் குப்பனோ அல்லது சுப்பனோ இல்லை என்பது புரிந்திருக்கும். ஆகவே, அவருக்காக செலவிடப்படும் தொகையும் எவ்வளவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 2024ஆம் ஆண்டில் மட்டும் அவருக்கு ரூ.67 கோடி செக்யூரிட்டிக்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 22 சதவீதம் அதிகமாகும். 2023ஆம் ஆண்டில் இந்த தொகை ரூ.57.48 கோடியாக இருந்தது. எஸ்இசி (SEC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (US Securities and Exchange Commission) இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதேபோல 2024ஆம் நிதியாண்டில் ஸ்டாக் அவார்ட்களையும் சேர்த்து பிச்சையின் 10.73 மில்லியன் டாலர்களை சம்பளமாக அவர் பெற்றுள்ளார்.
இது இந்திய மதிப்பில் ரூ.91.03 கோடியாக இருக்கிறது. இது முந்தைய ஆண்ட்டின் 8.8 மில்லியன் டாலர்களைவிட அதிகமாகும். இந்த தொகை அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின்படியான தகவல்களாகும். ஆனால், 2022ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் ஸ்டாக் கிராண்ட் காம்பன்சேஷன் 226 மில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








