Home
News

Paytm-ஐ விடுங்க.. Google Pay-க்கு வருது.. யூசர்கள் ஒட்டுமொத்தமா மாறுவாங்க.. கேப்பில் கெடா வெட்டிய கூகுள்!

ஆர்பிஐ (RBI) போட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பேடிஎம் யூசர்கள் கியூஆர் கோட் (QR Code), சவுண்ட் பாக்ஸ் (Soundbox) சேவைகள் தொடர்ந்து கிடைக்குமா? என்ற குழப்பத்தில் இருக்கும் நேரத்தில் கூகுள் பே (Google Pay) சேவையில் முக்கியமான மாற்றம் வரவிருக்கிறது.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) விதிகளை மீறியதற்காக பேடிஎம் நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டிய சூழலில் இருக்கிறது. மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமெண்ட் பேங்க் (Paytm Payments Bank) சேவைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அந்த பேங்க் கஸ்டமர்கள் வேறு வங்கிகளுக்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Paytm-ஐ விடுங்க.. Google Pay-க்கு வருது.. ஒட்டுமொத்தமா மாறுவாங்க!

அப்படி மாறினால் மட்டுமே பேடிஎம் மூலம் வழங்கப்படும், பேடிஎம் கியூஆர் கோட் (Paytm QR Code), பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் (Paytm Soundbox) உள்ளிட்ட சேவைகளை பெற முடியும் என்றும் ஆர்பிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த சூழலில், பேடிஎம் பேமெண்ட் பேங்குக்கு, ஆக்சிஸ் பேங்கானது புதிய நோடல் அக்கவுண்ட்டாக (Axis Bank Nodal Account) செயல்படும் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், ஒட்டுமொத்த பேடிஎம் யூசர்களும் மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால், இந்த ஒட்டுமொத்த கட்டுப்பாடுகளும் பேடிஎம் பேமெண்ட் பேங்க் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. மற்ற வங்கி கஸ்டமர்களுக்கு கிடையாது. இருப்பினும், இந்த வாய்ப்பை பயன்படுத்திய கூகுள் நிறுவனமானது, தரமான சம்பவத்தை செய்துள்ளது.

பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் சேவையை போலவே கூகுள் பே சவுண்ட்பாட்ஸ் (Google Pay SoundPods) சேவையை முழுவீச்சில் கொண்டுவர இருக்கிறது. இந்த சவுட்பாட்ஸ் சேவையானது, இந்தியா முழுவதும் இருக்கும் சிறு வணிகர்களுக்கு (Small Merchants) வழங்கப்பட இருக்கிறது. ஆகவே, பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் சேவை கிடைத்த வந்த பொட்டிக்கடை முதல் மளிகை கடை வரையில் கூகுள் நிறுவனத்தின் சவுண்ட்பாட்ஸ் சேவையையும் வரப் போகிறது.

Paytm-ஐ விடுங்க.. Google Pay-க்கு வருது.. ஒட்டுமொத்தமா மாறுவாங்க!

கூகுள் பே சவுண்ட்பாட்ஸ் பற்றிய விவரங்கள்: பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் போலவே, இதுவும் பேமெண்ட் ஆடியோ டிவைஸ் (Payment Audio Device) மாடலாகும். இந்த டிவைஸ் சிறு மற்றும் குறு வணிகர்கள் பணம் பெறுகையில், ஆடியோ வாயிலாக கியூஆர் கோட் பேமெண்ட்களை (QR Code Payments) கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், லிமிடெட் அளவிலேயே கிடைத்து வந்தது. இப்போது, பேடிஎம் நிறுவனம் சந்தித்து வரும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இந்த கூகுள் சவுண்ட்பாட்ஸ் சேவையானது நாடு முழுவதும் விரைவில் கிடைக்கும் என்று அம்பரீஷ் கெங்கே (துணைத் தலைவர் - தயாரிப்பு, கூகுள் பே) தெரிவித்து இருக்கிறார்.

இந்த டிவைஸ் பேடிஎம் போல இந்தியாவிற்குள் மட்டுமல்லாமல், கூகுள் பே சேவை கிடைக்கும் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த யுபிஐ பேமெண்ட் சேவைகளை வழங்க என்பிசிஐ இன்டர்நேஷனல் (NPCI International) நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பே செயல்படுகிறது. ஆகவே, இந்த சேவையானது பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் போலவே அதீத வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google SoundPods To Roll Out For Small Merchants Transactions in India Rival To Paytm Soundbox
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X