Home
News

அட இது வித்தியாசமா இருக்கே.. மை வீக்.. போட்டோஸ் ஷேர் செய்ய புதிய வசதியை வழங்கும் Google..

கூகுள் (Google) நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கூகுள் போட்டோஸ் (Google Photos) சேவையில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவர உள்ளது கூகுள் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் போட்டோஸ் சேவையில் மை வீக் (My Week) எனும் புதிய அம்சத்தைக் கொண்டுவர உள்ளது கூகுள் நிறுவனம். இந்த புதிய அம்சம் மூலம் வாரம் தோறும் பயனர்கள் தங்களது நினைவுகளைப் புகைப்படங்கள் மூலம் நெருங்கி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எளிமையாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோஸ் ஷேர் செய்ய புதிய வசதியை வழஙகும் Google.. மை வீக்..

அதேபோல் கூகுள் போட்டோஸ் சேவையில் வரும் இந்த புதிய ஆனது அம்சம் வாரம் தோறும் பயனர்களின் சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாகப் பகிரக்கூடிய ஒரு தொகுப்பாக உருவாக்கிக் கொடுக்கும் என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கூகுள் போட்டோஸ் செயலியில் 6.90 வெர்ஷனில் இந்த அம்சம் வரவில்லை.

அதாவது இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும், விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்கள் இந்த அம்சம் எப்படி இருக்கும் என்று தெளிவாகக் காட்டுகிறது. அதன்படி மை வீக் மை வீக் (My Week) அம்சம் கூகுள் போட்டோஸ் செயலியில் உள்ள மெமரீஸ் (Memories) பகுதியில் புதிய டைலாகத் தோன்றும்.

போட்டோஸ் ஷேர் செய்ய புதிய வசதியை வழஙகும் Google.. மை வீக்..

இந்த டைலை தேர்வுசெய்யும் போது பகிர்வதற்கான புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, வாராந்திர நினைவுகளை மற்றவர்களுடன் பகிர்வதற்கான ஆப்ஷன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் அந்த மெமரீஸ் பகுதியில் பிரத்யேகமான கார்டுகள் வடிவில் இருக்கும் அட்டையில் காட்டப்படும். குறிப்பாக இது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அழகான வழியாக இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் பகிரப்பட்ட நினைவுகள் தொகுப்பை பெறுபவர்கள் தங்கள் மொபைலில் உள்ள போட்டோ செயலியில் இருக்கும் மெமரீஸ் (Memories) பகுதியில் பார்க்க முடியும். அவர்களுக்கு ஸ்லைடு ஷோ வடிவில் படங்கள் மற்றும் வீடியோக்கள் தோன்றும். மேலும் இதைப் பார்க்கும் அவர்கள் குறிப்பிட்ட படத்தை லைக் மற்றும் கமெண்ட் கூட செய்யலாம். குறிப்பாக இதன் மூலம் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு உரையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

போட்டோஸ் ஷேர் செய்ய புதிய வசதியை வழஙகும் Google.. மை வீக்..

அதேபோல் கூகுள் போட்டோஸ் (Google Photos) சேவையில் மைக் வீக் அம்சத்துடன் இன்னும் பல புதிய அம்சங்கள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு இந்நிறுவனம் ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஜெமினி மொபைல் செயலியை (Google Gemini App) தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

அதன்படி தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, உருது ஆகிய ஒன்பது மொழிகளில் ஜெமினி மொபைல் செயலியைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக ஜெமினி சாட்பாட் செயலி மூலம் பேசுவது, டெக்ஸ்ட் மூலம் உள்ளீடு செய்து அல்லது ஏதாவது புகைப்படங்களை அப்லோடு செய்து தேவையான உதவிகளைப் பெறமுடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google soon to roll out new feature that will allow users to share photos with friends every week
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X