2019-ஐ கலக்கிய நிகழ்வுகள்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள்

|

கூகுள் என்பது பிரதானமான ஒன்றாக இருக்கிறது. மனிதனுக்கு எப்படி இரண்டு கைகள், இரண்டு கால்கள் உள்ளதோ அதேபோன்று கூகுள் என்று இரண்டாவது செயற்கை மூளையாகவே திகழ்ந்து வருகிறது. சிறு சந்தேகம் என்றாலும் சரி, ஏதாவது தகவல் வேண்டுமானாலும் சரி உடனடியாக மனதில் தோன்றுவது கூகுள்தான்.

கூகுள் அதிகம் தேடப்பட்டவை:

கூகுள் அதிகம் தேடப்பட்டவை:

கூகுளில் ஒவ்வொரு நாட்டிலும் அதிகம் தேடப்பட்டவை குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு முடிவு வெளியாகும் அதன்படி இந்தாண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை குறித்து ஆய்வு வெளியாகியுள்ளது இது சற்று கலவையான பன்முகத்தன்மை வாய்ந்தவைகளாக உள்ளது.

அரசியல், விளையாட்டு, திரைப்படம்

அரசியல், விளையாட்டு, திரைப்படம்

2019 ஆம் ஆண்டில் கிரிக்கெட், அரசியல், திரைப்படம், பொது கருத்து, பிரபலங்கள் என அனைவரும் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் திரைப்பட பட்டியலில் சற்று வித்தியாசமான படங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன். அதிலும் ஹாலிவுட் படங்கள் தான் இந்த வருட கூகுளை ஆக்கிரமித்துள்ளது.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: நாளைமுதல் ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: நாளைமுதல் ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்

விளையாட்டு:

விளையாட்டு:

2019 உலக கோப்பை என்பது அனைவரின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்தது. இது வீட்டில் உள்ள டிவியில் மட்டுமல்ல கூகுளையும் ஆக்கிரமித்துள்ளது. 2019 உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதுஎப்படி எந்த நாட்டில் நடக்கிறதோ அந்த அணி தான் வெற்றி பெறும் என எதிர்பாராமல் கணிப்போமோ அதற்கேற்ப இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றது.

கூகுளை ஆக்கிரமித்த உலக கோப்பை

கூகுளை ஆக்கிரமித்த உலக கோப்பை

இந்திய அணியை பொருத்தவரை உலக கோப்பை வெற்றியை விட தோனியின் கடைசி உலக கோப்பை என்பதால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் கவனமும் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்தியா நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் உலக கோப்பை தேடல் 2019 ஆம் ஆண்டில் கூகுளை ஆக்கிரமித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

அரசியல்:

அரசியல்:

2019 மக்களவை தேர்தல், இந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்தது. இந்தியா முழுவதும் நடைபெற்ற பிரசாரத்தில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் போனது. இந்த தேர்தலில் பாஜக-வை வீழ்த்தும் நோக்கில் பல அணிகள் ஒன்று திரண்டன. இருப்பினும் பாஜக தன் தனித்துவ பிரசாரத்தால் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு தனிப்பெரும் பிரதான கட்சியாக திகழ்ந்து ஆட்சி அமைத்தது. இந்த நிகழ்வு 2019 ஆண்டில் கூகுளில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

அமைச்சரவையில் மாற்றம்

அமைச்சரவையில் மாற்றம்

பாஜக ஆட்சி பெற்ற மகத்தான வெற்றி மட்டுமின்றி, ஆளும் பாஜக அரசு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்தது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அமித்ஷாவிற்கு உள்துறை அமைச்சகமும், உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறையும், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறையும் ஒதுக்கியது. அதுமட்டுமின்றி வெளியுறவுத்துறை செயலராக இருந்த ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஒதுக்கியது. மேலும் ஜல்சக்தி மற்றும் மீன்வளத்துறைக்கு என தனி அமைச்சகமும் ஒதுக்கியது.

32-இன்ச்: ரூ.14,000 மதிப்புள்ள டிவி வெறும் ரூ.7,999-க்கு விற்பனை.! பிளிப்கார்ட்.!32-இன்ச்: ரூ.14,000 மதிப்புள்ள டிவி வெறும் ரூ.7,999-க்கு விற்பனை.! பிளிப்கார்ட்.!

சந்திரயான்-2:

சந்திரயான்-2:

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த நிலையில் செப்டம்பர் 5-ஆம் தேதி நிலவில் லேண்டர் மெதுவாக தரையிறங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இஸ்ரோவுடனான தொடர்பை லேண்டர் துண்டித்து கொண்டது.

கூகுளை ஆக்கிரமித்த சந்திரயான் 2

கூகுளை ஆக்கிரமித்த சந்திரயான் 2

இதனால் அதன் நிலை தெரியாமல் விஞ்ஞானிகள் சோகமடைந்தனர். இதையடுத்து நிலவை சுற்றி வந்த ஆர்பிட்டர், நிலவில் சாய்வாக விழுந்திருந்த லேண்டர் குறித்த புகைப்படங்களை அனுப்பியது. இதனால் மெதுவாக தரையிறங்குதலுக்கு பதிலாக வேகமாக லேண்டர் தரையிறங்கியதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர். இந்த நிகழ்ச்சியை நேரில் பார்வையிட வந்த பிரதமர் மோடி, இஸ்ரோ தலைவர் சிவனை கட்டித் தழுவி ஆறுதலும் பாராட்டும் கூறினார். இந்த நிகழ்வு கூகுளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

திரைப்படம்:

திரைப்படம்:

டாப் 10 பட்டியலில் பல்வேறு படங்கள் இடம்பெற்றிருந்தாலும், 2019 ஆம் ஆண்டில் கூகுளில் நான்காவது இடத்தை பிடித்திருப்பது ஷாகித் கபூர் நடித்த கபீர்சிங் திரைப்படம். தெலுங்கில் வெளியாகி இந்தியா முழுவதும் சக்கை போடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி, இந்த படம் தெலுங்கு திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்காக கபீர் சிங் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படம் கூகுளை ஒரு கலக்கு கலக்கியுள்ளது.

ஹாலிவட் கலக்கல்:

ஹாலிவட் கலக்கல்:

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. மார்வெல் தயாரிப்பு என்றாலே அதன் காதாபாத்திரத்துக்கு என்று இந்தியாவில் ரசிகர் பட்டாளமே உண்டு. இதில் அனைத்து கதாபாத்திரமும் பங்குபெறும் விதமாக அவெஞ்சர்ஸ் படம் தயாரிக்கப்பட்டது. இதன் மற்றொரு பாகம் ஆன அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் தயாரானது.

மார்வெல் சீரிஸ்

மார்வெல் சீரிஸ்

மார்வெல் காமிக்ஸ் புக் எழுத்தாளரான ஸ்டான்லீ மரணமடைந்ததையடுத்து மார்வெல் கதாபாத்திரம் அவ்வளவு வலு பெறும் விதமாக அமையவில்லை என்று எதிர்பார்த்த நிலையில், அவஞ்செர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாக உலக நாடுகளை கலக்கியது.

பேசுபொருளாக மாறிய தானுஸ்

பேசுபொருளாக மாறிய தானுஸ்

குறிப்பாக இந்தியாவில் ஏர்ரஹ்மான் அவெஞ்சர்ஸ் கீதத்திற்கு இசையமைத்தார். மேலும் தமிழில் விஜய்சேதுபதி உட்பட பலரும் தமிழ் டப்பிங் செய்திருந்தனர். இப்படி படக்குழுவினர் படத்தின் வெற்றியில் கடைக்கோடிவரை படத்தின் வெற்றியில் கவனம் செலுத்தினர். இந்த படத்தில் வில்லனாக நடித்த தானுஸ் கதாபாத்திரம் தற்போதுவரை பேசுபொருளாகவே உள்ளது. இது கூகுளில் ஐந்தாவது இடத்தையும் ஹாலிவுட் தரத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் எந்திரன் பட காட்சி: ஆற்றில் விழுந்த இளைஞரை காப்பாற்றிய ஐபோன்அமெரிக்காவில் எந்திரன் பட காட்சி: ஆற்றில் விழுந்த இளைஞரை காப்பாற்றிய ஐபோன்

பிரபலங்கள்:

பிரபலங்கள்:

மிக்-21 பைசன் ரக போா் விமானத்தில் சண்டையின்போது தவறுதலாக பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குச் சென்று மீண்டும் தாய்நாடு திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனும் முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான் நாட்டு 2019 கூகுள் டாப் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார். இவர் 2019 கூகுள் இந்தியா பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.

மூத்த பாடகி லதா மங்கேஷ்கர்

மூத்த பாடகி லதா மங்கேஷ்கர்

மூத்த பாடகி லதா மங்கேஷ்கர், இந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் இந்தி உள்பட 36 இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டும் மொழிகளிலும் சுமார் 30 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் பெற்ற இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தனது 90-வது பிறந்தநாளை லதா கொண்டாடினார். மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப்பை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் கடந்த நவம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் வீடு திரும்பினார்.

சிக்ஸர் நாயகன் யுவராஜ்சிங்

சிக்ஸர் நாயகன் யுவராஜ்சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்தவர் யுவராஜ்சிங். 2000-ம் ஆண்டில் கென்யாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த யுவராஜ்சிங் 2017-ம் ஆண்டில் ஜூன் 30-ந் தேதி நடந்த வெஸ்ட்இண்டீக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கடைசியாக விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டார்.7 வயது இடக்கை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மும்பையில் அறிவித்தார். குறிப்பாக விளையாட்டு பிரிவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே பெரிதளவு இடம்பெற்றுள்ளனர்.

Pic courtesy: social media

Most Read Articles
Best Mobiles in India

English summary
google shares a list of top search trends in 2019

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X