நிரந்தர டெலிட்.. எல்லா இமெயிலும் காலி.. உங்க Gmail-ல மறக்காம இதை செஞ்சிடுங்க.. Google வார்னிங்!
ஒரு ஜிமெயில் ஐடி (Gmail ID) அல்லது கூகுள் அக்கவுண்ட் (Google Account) ஆனது மொபைல் நம்பர்கள் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. பெரும்பாலான ஆன்லைன் சேவைகளுக்கு (Online Services) அல்லது லாக்-இன்களுக்கு (Logins).. ஜிமெயில் ஐடி-ஐ கொடுத்திருப்போம் அல்லது மொபைல் நம்பரை கொடுத்திருப்போம். அப்படித்தானே?
ஒருவேளை நீங்கள் பெரும்பாலான இடங்களில் உங்களுடைய ஜிமெயில் ஐடியை தான் பயன்படுத்துகிறீர்கள்.. ஆனால் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்குள் (Gmail Account) மிகவும் அரிதாகவே லாக்-இன் செய்கிறீர்கள் அல்லது நீண்ட நாட்களாக அதை பயன்படுத்தவே இல்லையென்றால் கூகுள் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கை (Google Waring) ஆனது 100% உங்களுக்கானது தான்!

கடந்த மாதம், கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் செயல்படாத கூகுள் அக்கவுண்ட்கள் (Inactive Accounts) நிரந்தரமாக மூடப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து இது தொடர்பான நினைவூட்டல் நோட்டீஸ் (Reminder Notice) ஆனது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க தொடங்கியுள்ளது.
கூகுள் அனுப்பியுள்ள நினைவூட்டல் நோட்டீஸ் மின்னஞ்சலில், கூகுள் அக்கவுண்டிற்கான செயலற்ற காலத்தை (Inactivity period) இரண்டு ஆண்டுகளாக அப்டேட் செய்வதாக கூகுள் கூறுகிறது. "இந்த மாற்றம் இன்று தொடங்கும், மேலும் அது செயல்படாமல் இருக்கும் எந்த கூகுள் கணக்கிற்கும் பொருந்தும்" என்றும் கூகுள் தனது நினைவூட்டல் நோட்டீஸ் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.
ஒரு அக்கவுண்ட் செயலற்றதாக இருக்கிறது என்பதை கூகுள் நிறுவனம் எவ்வாறு தீர்மானிக்கிறது? கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, இரண்டு வருட காலத்திற்குள் லாக்-இன் செய்யப்படாத அல்லது பயன்படுத்தப்படாத எந்தவொரு அக்கவுண்ட்டுமே செயலற்ற அக்கவுண்ட் ஆக கருதப்படும்; அது நிரந்தரமாக நீக்கப்படும் (Permanetly Shut Down).
செயலாற்ற அக்கவுண்ட்களை கூகுள் எப்போது முதல் நீக்க தொடங்கும்? செயலற்ற அக்கவுண்ட் மற்றும் அதில் உள்ள எந்தவொரு கண்டென்ட்டும் (Contents) வருகிற 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1 (December 1, 2023) ஆம் தேதி முதல் நீக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. "செயலற்ற கணக்குகளை நாங்கள் டிசம்பர் 2023ல் நீக்க தொடங்குவோம்" என்று கூகுள் தனது நினைவூட்டல் நோட்டீஸ் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.
எந்த அறிவிப்பும் இல்லாமல் உங்கள் அக்கவுண்ட் நீக்கப்படுமா? இல்லை! கூகுள் நிறுவனத்தால் உங்கள் அக்கவுண்ட் செயலற்றதாக கருதப்பட்டால், கூகுள் உங்களுக்கும் உங்கள் ரிக்கவரி இமெயில்களுக்கும் (Recovery Emails) (ஏதேனும் வழங்கப்பட்டிருந்தால்) பல நினைவூட்டல் மின்னஞ்சல்களை அனுப்பும். அதன் பின்னரே உங்கள் அக்கவுண்ட்டையும் அதில் உள்ள எல்லா கன்டென்ட்களையும் நிரந்தரமாக நீக்கும்.
கூகுளின் இந்த "நிரந்தர டெலிட்" நடவடிக்கையில் இருந்து உங்கள் அக்கவுண்ட்டை காப்பாற்றுவது எப்படி? இது மிகவும் எளிது - உங்கள் ஜிமெயில் / கூகுள் அக்கவுண்ட்டிற்குள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை லாக்-இன் செய்யவும். கடந்த இரண்டு ஆண்டுகளில் உங்கள் கூகுள் கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருந்தால், உங்கள் கணக்கு ஆக்டிவ் (Active) ஆக இருப்பதாக கருதப்படும் மற்றும் அது ஒருபோதும் நீக்கப்படாது.
"நீங்கள் விரும்பினால், உங்கள் கணக்கை செயலில் வைத்திருப்பதை முடிந்தவரை எளிதாக்குவதே எங்கள் முன்னுரிமையாகும், மேலும் இந்த மாற்றத்தால், உங்கள் அக்கவுண்ட் ஏதேனும் பாதிக்கப்படும் முன் உங்களுக்கு போதுமான அறிவிப்பு கிடைத்து இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்றும் கூகுள் நிறுவனம் தனது நினைவூட்டல் நோட்டீஸ் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது.
ஒருவேளை நீங்கள் உங்கள் ஜிமெயில் / கூகுள் அக்கவுண்ட்டிற்குள் கடைசியாக எப்போது லாக்-இன் செய்தீர்கள் என்று உங்களுக்கு ஞாபகம் இல்லை என்றால்.. உடனே பாஸ்வேர்ட்-ஐ நினைவு கூர்ந்து உங்கள் அக்கவுன்டிற்குள் லாக்-இன் செய்யவும். பாஸ்வேர்ட் நினைவில் இல்லை என்றால் அதை ரீசெட் (Password Reset) செய்து, லாக்-இன் செய்து, உங்கள் அக்கவுண்டையும் அதில் உள்ள இமெயில்கள் / கன்டென்ட்களையும் காப்பாற்றி கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








