கூகுள் தானியங்கிகார் விபத்தில் சிக்கியது, கூகுள் வரலாற்றில் இதுவே முதல் முறையாம்.!!

Written By:

இது வரை பல லட்சம் கிலோ மீட்டர்கள் பயணித்து எவ்வித விபத்தையும் கூகுள் தானியங்கி கார்கள் ஏற்படுத்தியதில்லை என சில நாட்கள் வரை கூகுள் பெருமையாக பேசி வந்தது. ஆனால் இனி அவ்வாறு கூற முடியாது. கூகுள் தானியங்கி கார் ஒன்று முதல் விபத்தை சந்தித்துள்ளது.

கூகுள் தானியங்கி கார் விபத்தில் சிக்கியது.!!

முன்னதாக மற்ற வாகனங்களினால் கூகுள் தானியங்கி கார்கள் விபத்தில் சிக்கியுள்ளன. ஆனால் இம்முறை கூகுள் தானியங்கி கார் விபத்திற்கு அவை தான் காரணமாக அமைந்துள்ளன. பிப்ரவரி 14, காதலர் தினத்தில் ஏற்பட்ட இந்த விபத்து கலிஃபோர்னிய நகரின் பிரதான சாலையில் நிகழ்ந்தது.

கூகுள் தானியங்கி கார் விபத்தில் சிக்கியது.!!

சாலையில் கிடந்த இடர்பாட்டினை இடிக்காமல் இருக்க அருகே சென்ற பேருந்தில் கூகுள் தானியங்கி கார் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என்றாலும் கூகுள் தானியங்கி காரின் சில பாகங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் தானியங்கி கார் விபத்தில் சிக்கியது.!!

இந்த சம்பவம் கூகுள் நிறுவனத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், வரும் காலங்களில் மனித மூளையை விட சிறப்பாக செயல்படும் படி கூகுள் தானியங்கி கார்கள் மேம்படுத்தப்பட வேண்டும். இதனால் கூகுள் தானியங்கி கார்கள் எந்தளவு பாதுகாப்பானது என்பதை தீர்மானிப்பது கடினம் தான்.

 

Read more about:
English summary
Google self driving car has caused an accident Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot